கனிமொழி கருணாநிதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
துவக்கம் 18 ஜூன் 2019
முன்னவர் ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
துவக்கம் 25 சூலை 2007
முடிவு 29 மே 2019
பின்வந்தவர் பி. வில்சன்
முன்னவர் ச. கி. இந்திரா
இரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழு தலைவர்
துவக்கம் 13 செப்டம்பர் 2019
முன்னவர் ஆனந்தராவ் விடோபா அட்சூல்
தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர்
துவக்கம் 18 ஜூன் 2019
முன்னவர் ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி
மக்களவைத் திமுக துணைத் தலைவர்
துவக்கம் 18 ஜூன் 2019
திமுக மாநில மகளிர் அணி செயலாளர்
துவக்கம் 9 ஜனவரி 2015
இயற்பெயர்/
அறியும் பெயர்
கனிமொழி கருணாநிதி
பிறப்புபெயர் கனிமொழி
பிறந்ததிகதி 5 சனவரி 1968 (1968-01-05) (அகவை 56)
பிறந்தஇடம் ஸ்ரீமுஷ்ணம், பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம், (தற்போது கடலூர் மாவட்டம், சென்னை மாகாணம், தமிழ் நாடு) இந்தியா
பணி
  • கவிஞர்
  • பத்திரிகையாளர்
  • அரசியல்வாதி
குடியுரிமை இந்தியன்
கல்வி பொருளாதாரத்தில் முதுகலை பட்டம்
கல்வி நிலையம் எத்திராஜ் மகளிர் கல்லூரி
அரசியல்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் (2007–தற்போது வரை)
பெற்றோர் மு. கருணாநிதி (தந்தை)
ராஜாத்தி அம்மாள் (தாய்)
துணைவர்
  • அதிபன் போஸ்
    (தி. 1989; ம.மு. 1997)
    [1]
அரவிந்தன் (தி. 1997)
பிள்ளைகள் ஆதித்யா அரவிந்தன்

கனிமொழி கருணாநிதி (Kanimozhi Karunanidhi, பிறப்பு: 5 சனவரி 1968) திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அதற்கு முன்புவரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.

குடும்பம்

  • மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாளுக்கு முதல் மகளாக 1968 ஆம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பிறந்தார்.
  • பின்பு பள்ளிப் படிப்பை சென்னை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார்.
  • பிறகு 1989 ஆம் ஆண்டு அதிபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார்.[2] இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார்.

பொது வாழ்வு

சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர்[சான்று தேவை], பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.

தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்தது. இரண்டாவது முறையாக 2013இல் மீண்டும் மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

போட்டியிட்ட தேர்தல்களும், முடிவுகளும்

ஆண்டு தொகுதியின் பெயர் மக்களவை / சட்டமன்றம் முடிவு வாக்கு விழுக்காடு
2019 தூத்துக்குடி மக்களவை வெற்றி 56.81

வகித்த பதவிகள்

ஆண்டு தொகுதி பதவி ஆரம்பம் முடிவு
2007 தமிழ்நாடு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் 25 சூலை 2007 29 மே 2019
2019 தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் 18 சூன் 2019 தற்போது பதவியில்

இலக்கியம் =

கவிதைத் தொகுப்புகள்

  • கருவறை வாசனை
  • அகத்திணை
  • பார்வைகள்
  • கருக்கும் மருதாணி

இசைத் தொகுப்புகள்

  • சிலப்பதிகாரம் (பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து)

2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு

இவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[4] இவர் பிணைக்காக நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மே 20, 2011 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார்.[5] சூன் 8, 2011 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு இவர் மீண்டும் திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.[6]

2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) தீர்ப்பு

இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.[7]

2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) மேல்முறையீடு

தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், 2018 மார்ச்சில், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் விசாரணை 5 அக்டோபர் 2020 அன்று தொடங்கியது.[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=கனிமொழி_கருணாநிதி&oldid=23898" இருந்து மீள்விக்கப்பட்டது