ஒரு காதலன் ஒரு காதலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒரு காதலன் ஒரு காதலி
நீக்கு நாக்கு
இயக்கம்செல்வேந்திரன்
தயாரிப்புசாய் ரத்னம்
கதைஇராதா கிருஷ்ணன்
இசைபரணி
நடிப்புசரத்சந்தர்
ரம்பா
லட்சுமி ராய்
ஒளிப்பதிவுபி. திவாகர்
படத்தொகுப்புபி. எஸ். வாசு - சலீம்
கலையகம்சிறீ சர்வ சாய் பிலிம்ஸ்
வெளியீடு27 அக்டோபர் 2006 (தெலுங்கு)
25 செப்டம்பர் 2009 (தமிழ்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு[1]

ஒரு காதலன் ஒரு காதலி (Oru Kadhalan Oru Kadhali) என்பது இருமொழி நாடகத் திரைப்படம் ஆகும். செல்வேந்திரன் எழுதி இயக்கிய இப்படத்தை சாய் ரத்னம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார். இப்படத்தில் சரத் சந்தர், ரம்பா, லட்சுமி ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பரணி இசையமைத்தார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பான நீக்கு நாக்கு அக்டோபர் 2006 இல் வெளியிடப்பட்டது, தமிழ் படம் செப்டம்பர் 2009 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[2][3][4]

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தின் இயக்குனரான செல்வேந்திரன் இதற்கு முன்பு இயக்குனர் ஷங்கருடன் பணிபுரிந்தவர். அவர் இந்த படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகை ரம்பாவுக்கு மீண்டும் நடிக்க வந்தார். மேலும் அவர் 2005 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5] தெலுங்கு, தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாரிக்கப்பட்டது. இரண்டு பதிப்புகளுக்கு இடையில் சில நடிகர்கள் மட்டும் மாறி இருந்தனர்.[6]

வெளியீடு

படத்தின் தெலுங்கு பதிப்பான, நீக்கு நாக்கு 2006 அக்டோபரில் கலவையான விமர்சனங்களுக்கு வெளியானது.[7] நடுத்தர செலவில் தயாரிக்கப்படும் படமாக படத்தயாரிப்பு தொடங்கியது. படத்தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்களால் படத்தின் தமிழ் பதிப்பு 2009 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இது திரையரங்குகளில் ஐந்து தமிழ் படங்களுடளுக்கு போட்டியாக வெளியானது. மேலும் திரையரங்குகளில் கவனிக்கப்படாமல் போனது.[8][9] இந்த படம் பின்னர் ஏக் ஹசீன் - தி டர்ட்டி கேர்ள் என இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

இசை

இப்படத்தின் பாடல்களை கபிலன் எழுத பரணி இசையமைத்தார்.[2]

குறிப்புகள்

  1. http://www.indiaglitz.com/neeku-naaku-in-dts-final-mixing-telugu-news-25098.html
  2. 2.0 2.1 http://www.behindwoods.com/features/News/News22/14-7-05e/tamil-movies-news-rambha.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  4. http://www.southdreamz.com/11101/six-tamil-movies-releasing-today-september-25fraiday/
  5. http://www.thehindu.com/thehindu/fr/2005/08/05/stories/2005080500540403.htm
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  7. http://www.indiaglitz.com/neeku-naaku-telugu-movie-review-8221.html
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  9. http://www.indiaglitz.com/six-films-this-weekend-tamil-news-50205.html
"https://tamilar.wiki/index.php?title=ஒரு_காதலன்_ஒரு_காதலி&oldid=31535" இருந்து மீள்விக்கப்பட்டது