ஆறாவது வனம்
ஆறாவது வனம் | |
---|---|
இயக்கம் | ஆர். புவணேஷ் |
தயாரிப்பு | எஸ். எம். தியாகராஜன் |
கதை | ஆர். புவணேஷ் |
இசை | ஆர். அரிபாபு |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். தாஜ் |
படத்தொகுப்பு | சியான் |
கலையகம் | எம்.பி.ஜி. பிலிம்ஸ் இண்டர்நேசனல் |
வெளியீடு | சூலை 30, 2010 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆறாவது வனம் (Aaravadhu Vanam) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். புவணேஷ் இயக்கிய இப்படத்தில் பூஷண், வித்யா மோகன், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா, அன்சிபா ஹசன், சிசர் மனோகர், மகாலிங்கம் பொள்ளாச்சி, போரூர் சேகர், தங்கம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். எம். தியாகராஜன் தயாரித்த இப்படத்திற்கு ஆர். அரிபாபு இசை அமைத்துள்ளார். இப்படம் 30 சூலை 2010 அன்று வெளியானது. இப்படம் மலையாளத்தில் பகவதிபுரம் (2011) என மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2]
நடிகர்கள்
- பூஷண் புலியாக
- வித்யா மோகன் மலராக
- போஸ் வெங்கட் தர்மாவாக
- ரம்யா
- அன்சிபா ஹசன் அனுவாக
- சிசர் மனோகர் கிரிஷ்
- மகாலிங்கம் பொள்ளாச்சி மகாலிங்கமாக
- போரூர் சேகர்
- தங்கம் தங்கமாக
- மதுரை மோகன்
- சின்னராசு
- ரஜினி மணி
தயாரிப்பு
இயக்குனர்கள் பாக்யராஜ் மற்றும் ரா. பார்த்திபன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆர். புவனேஷ், எம். பி. ஜி பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட ஆறாவது வனம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். கன்னட நடிகர் பூஷண், கேரளாவைச் சேர்ந்த வித்யா மோகன் போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். மகாபாரதத்திலிருந்து இந்த கதை உருவானது. ஆறாவது வனம் என்பது பாண்டவர்கள் செல்ல மிகவும் கடினமானதாக கருதப்பட்ட பகுதியாகும். மேலும் இந்த பத்தியில் செல்லும்போது முழு போரும் இரத்தக்களரியானது. மேலும் ஆறாவது வனம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இளம் ஜோடியின் காதலுக்காக ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் கிராமத்தை காலி செய்தனர். இயக்குனர் ஆர். புவனேஷ் அதே கிராமத்தில் ஆறாவது வனம் படத்தை படமாக்க விரும்பினார், ஆனால் தம்பதியினர் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல், குழுவினர் பல்வேறு இடங்களைத் தேடி கடைசியில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள சிங்காரம் பாளையம் கிராமத்தில் படமாக்கினர். இதற்காக ஐந்து நாட்கள் கிராம மக்கள் ஊரை காலி செய்யும்படி திரைப்படக் கழுவினரின் வேண்டுகோளைக் கேட்டு கிராம மக்கள் கோபமடைந்தனர். அதன்கான சூழ்நிலை மற்றும் கதை பற்றி அவர்களுக்கு விளக்கப்பட்டபோது, கிராமவாசிகள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்தனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவிடம் முன்னாள் உதவியாளராக இருந்த ஆர். ஹரிபாபு இசையமைத்தார்.[3][4][5]
இசை
இப்படத்தின்கான பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் ஆர். ஹரிபாபு அமைத்தார். 2009 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில் ஆறு பாடல்கள் இருந்தன.[6] ஒரு விமர்சகர் இந்த படத்தின் பாடல்களை 5 க்கு 1.5 என மதிப்பிட்டு, "இந்த பாடல் தொகுப்பு கீராவாணி மற்றும் நடபைரவி ராகங்களை சுற்றி வருகிறது." என்றார்.[7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "விண்மீன பிடிச்சிவந்து" | ரோசினி | 4:21 | |||||||
2. | "கண்ணாலே கண்ணாலே" | பெல்லி ராஜ் | 4:47 | |||||||
3. | "என் உயிரே" | பிரசண்னா, தீபா மிரியம் | 5:23 | |||||||
4. | "யாரோடு யாரிடம்" | முகேஷ் | 6:08 | |||||||
5. | "மயிலே ஓ மயிலே" | சிறீமதுமிதா | 4:48 | |||||||
6. | "அண்டா குண்டா" | வேல்முருகன், சாருலதா மணி | 4:00 | |||||||
மொத்த நீளம்: |
29:27 |
குறிப்புகள்
- ↑ "Aaravadhu Vanam (2010)". gomolo.com. Archived from the original on 3 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "Aaravadhu Vanam". ayngaran.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "AARAVADHU VANAM MOVIE PREVIEW". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "Villagers forego their village for 5 days". kollywoodtoday.net. 13 March 2010. Archived from the original on 3 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "Aaravadhu Vanam and an 'unimaginable story'!". filmibeat.com. 11 March 2010. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "Aaravadhu Vanam (2009) - Hari Babu". mio.to. Archived from the original on 3 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ Malathy Sundaram. "AARAVADHU VANAM MUSIC REVIEW". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.