ஆதித்தன் கனவு
ஆதித்தன் கனவு | |
---|---|
1949 சனவரி பேசும்பஃடம் இதழில் வெளிவந்த விளம்பரம் | |
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் அஞ்சலிதேவி எம். ஜி. சக்கரபாணி காளி என். ரத்னம் சி. டி. ராஜகாந்தம் ஆர். ஜெயகௌரி |
நடன அமைப்பு | வழுவூர் பி. இராமையா பிள்ளை, சின்கா |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 11, 1948[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதித்தன் கனவு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
திரைக்கதை,
இத்திரைப்படத்துக்கான வசனங்களை எழுதியவர் ப. கண்ணன்.[3]
ஓர் அரசனிடம் சேனாதிபதிகளாக இருக்கும் இரண்டு வீரர்கள் தாங்கள் மணம் செய்து கொண்டால், தங்களுக்கு ஆணும் பெண்ணுமாகக் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து வைப்பதானால் என்ன சீர் செய்ய வேண்டும் என்ற விளையாட்டில் இறங்கி, அடுத்த நிமிடத்திலேயே இருவரும் விரோதிகளாக மாறி, பிரிகிறார்கள். ஆண், பெண் அழகுப் போட்டியில் கலந்துகொண்ட இரண்டு கந்தர்வர்கள், சேனாதிபதிகளின் புதல்வி ஞானவடிவும், புதல்வன் ஆதித்தனும் சந்தித்து, ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்கிறார்கள். இரு குடும்பங்களும் ஒன்று சேர்கின்றன.[3]
நடிகர்கள்
- தெ. இரா. மகாலிங்கம் (ஆதித்தன்)
- அஞ்சலிதேவி (ஞானவடிவு)
- டி. ஆர். ரஜனி (அங்கயற்கண்ணி)
- கே. பி. கேசவன்
- எம். ஜி. சக்கரபாணி (வருணகேது)
- காளி என். ரத்னம்
- சி. டி. ராஜகாந்தம்
- ஆர். ஜெயகௌரி (மங்கையற்கரசி)
- ஏ. கருணாநிதி
- எம். இ. மாதவன்
- எஸ். வி. சுப்பையா (மிட்டாய்க்காரன்)
- ஏழுமலை (சிங்காரம்)
- லலிதா-பத்மினி (பசுமாசுர மோகினி நடனம்)[3]
- தாரா சௌத்திரி (நடனம்)[3]
நடன அமைப்பு: வழுவூர் பி. இராமையா பிள்ளை[1][2]
பாடல்கள்
பாடல்களுக்கான இசையை ஜி. ராமநாதன் வழங்கியிருந்தார். பாடல்களை பாபநாசம் சிவன், அவரது சகோதரர் பாபநாசம் ராஜகோபால ஐயர் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2] அஞ்சலிதேவிக்கான பாடல்களுக்கு குமாரி ரத்தினம் பின்னணி பாடியுள்ளார்.[3]
- மதுரமான ருசி உள்ளதே (டி. ஆர். மகாலிங்கம்)
- மாயப்பிரபஞ்சமடி தங்கமே தங்கம் (டி. ஆர். மகாலிங்கம்)[4]
- இன்பம் தருமணமோ (டி. ஆர். மகாலிங்கம்)
- உள்ளம் குளிர (டி. ஆர். மகாலிங்கம்)
- வண்ணப் பொற்சித்திரமே (குமாரி ரத்னம்)
- மணங்கமழ் வாழ்வை (குமாரி ரத்னம்)
- என்னென்று சொல்வேனடி (குமாரி ரத்னம்)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23-10-2004) (in Tamil). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 2017-02-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170215030031/http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails4.asp. பார்த்த நாள்: 2017-12-18.
- ↑ 2.0 2.1 2.2 ராண்டார் கை (22 மே 2009). "Adithan Kanavu 1948". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161125094254/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3021515.ece.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "ஆதித்தன் கனவு". பேசும் படம்: பக். 127-129. சனவரி 1949.
- ↑ "மாயப்பிரபஞ்சமடி தங்கமே தங்கம்". யூடியூப். https://www.youtube.com/watch?v=7sJo_fkK5Ds.