அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 27, 2004 மஞ்சேரி, கேரளம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2010வார்ப்புரு:En dash2021 (குழந்தை நட்சத்திரம்) 2023– தற்போது |
அனிகா சுரேந்திரன் (பிறப்பு: நவம்பர் 27, 2004) என்பவர் இந்திய நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பதால், பேபி அனிகா என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். துடாருன்னு (2010), என்னை அறிந்தால் (2015) மற்றும் விஸ்வாசம் (2019) ஆகிய படங்களில் நடித்தார். [1][2] அவர் நடிப்பிற்காக விருதுகளைப் பெற்றுள்ளார்.
திரை வாழ்க்கை
அனிகா குழந்தை நட்சத்திரமாக சத்யன் அந்திகாட் எழுதி இயக்கிய 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள மொழி குடும்ப நாடகத் திரைப்படமான கதா தொடருன்னு என்பதில் நடித்தார். இத்திரைப்படத்தில் ஜெயராம் , மம்தா மோகன்தாஸ் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் நடித்துள்ளனர். [3][4] அனிகாவிற்கு இத்திரைப்படம் 13வது ஏசியாநெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை பெற்று தந்தது.
2015 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார்,அனுஷ்கா ஆகியோரின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் குமார் திரிஷா தம்பதியினருக்கு மகளாக நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அஜித் குமார், நயன்தாரா தம்பதியினருக்கு மகளாக நடித்திருந்தார்..[5]
நடிகர் நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை
மலையாளத் திரைப்படமான கப்பேலாவின் (2020) தெலுங்கு மொழி மறு ஆக்க திரைப்படமான புட்ட பொம்மா (2023) மூலம் அவர் முன்னணி நடிகையானார்..[6]
வலைத்தொடர்கள்
ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2019 | குயின் | இளம் சக்தி சேஷாத்ரி | தமிழ் | எம்.எக்ஸ் பிளேயரில் வலைத்தொடர் |
விருதுகள்
விருது | ஆண்டு | கதாப்பாத்திரம் | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|---|---|
கேரள மாநில திரைப்பட விருது | 2013 | சிறந்த குழந்தை நட்சத்திரம் | 5 சுந்தரிகள் | [7] |
ஆசியாநெட் திரைப்பட விருதுகள் | 2011 | சிறந்த குழந்தை நட்சத்திரம் | காதா துடாருன்னு | [8] |
2018 | தி கிரேட் பாதர் | [9] | ||
ஜேஎப்டபல்யூ திரைப்பட விருது | 2020 | சிறந்த குழந்தை நட்சத்திரம் | விசுவாசம் (திரைப்படம்) | [10] |
ஆதாரங்கள்
- ↑ Surendhar MK (25 July 2014). "Baby Anikha plays Ajith's daughter in Thala 55?". Only Kollywood. Archived from the original on 30 June 2015. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
- ↑ "Anikha inyennai arindhaal with ajith kumar". MovieSpicy. Archived from the original on 3 June 2015. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
- ↑ "Katha Thudarunnu Malayalam Movie" பரணிடப்பட்டது 25 ஏப்ரல் 2010 at the வந்தவழி இயந்திரம். Nowrunning.com
- ↑ "Jayaram, Mamta in Kadha Thudarunnu". Rediff.com
- ↑ "Ajith's next with Siva titled Viswasam". Indian Express.
- ↑ "Precocious Anikha". The Hindu. 11 May 2012. Archived from the original on 20 September 2015. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
- ↑ "Anikha and Sanoop share the Kerala State Film Award for Best Child Artist" இம் மூலத்தில் இருந்து 25 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210825022121/https://m.timesofindia.com/sanoop-santhosh-and-baby-anikha-shared-kerala-state-film-awards-for-best-child-artists-sanoop-and-anikha-got-award-for-their-performance-in-philips-and-monkey-pen-and-anchu-sundarikal-respectively-want-to-be-a-journalist-come-to-times-school-of-journalism-visit-tcms-in/articleshow/33946197.cms.
- ↑ "Asianet's star-spangled event". தி இந்து. 21 January 2011 இம் மூலத்தில் இருந்து 12 February 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110212134438/http://www.hindu.com/fr/2011/01/21/stories/2011012150960400.htm.
- ↑ "20th Asianet Film Awards 2018 -Winners | Best Film, Best Actor, Best Actress". Vinodadarshan. Archived from the original on 20 October 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "Anikha wins the JFW Movie Awards, for the movie Viswasam" இம் மூலத்தில் இருந்து 17 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211117010420/https://jfwonline.com/article/twin-birds-presents-jfw-movie-awards-2020-an-unforgettable-night-with-impeccable-style-and-substance/amp/.