அக்லக் முகமது கான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அக்லக் முகமது கான் (ஆங்கிலம்: Akhlaq Mohammed Khan) (பிறாப்பு :1936 சூன் 16 - 2012 பிப்ரவரி 13) என்பவர் ஓர் இந்திய கல்வியாளர், மற்றும் இந்தியாவில் உருது கவிதைகளின் ஒரு முக்கிய நபராவார்.[1][2] இந்தி திரைப்பட பாடலாசிரியராக, முசாபர் அலி இயக்கிய கமன் (1978) மற்றும் உம்ராவ் ஜான் (1981) ஆகிய பாடல்கள் மூலம் அவர் மிகவும் பிரபலமானவர். அவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உருது துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அவர் முசைராக்கள் அல்லது கவிதைத் தொகுப்புகளின் சேகரிப்பை நாடிச் சென்றார். மேலும் செர்-ஓ-கிக்மத் என்ற இலக்கிய இதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[3]

குவாப் கா தார் பேண்ட் கை (1987) என்ற படத்திற்காக அவருக்கு உருது மொழியில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும் 2008 ஆம் ஆண்டில் அவர் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை வென்ற நான்காவது உருது கவிஞராவார்.[3] நவீன உருது கவிதைகளின் மிகச்சிறந்த பிரதிநிதியாக அவர் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

கான் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் அன்லா நகரத்தில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார்.[3] அவரது தந்தை அபு முகமது கான் ஒரு காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் குடும்பம் உத்தரபிரதேசத்தின் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள சௌந்தேரா கிராமத்தைச் சேர்ந்தது. அவரது குழந்தை பருவத்தில், கான் ஒரு விளையாட்டு வீரராக இருக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை அவர் காவல் துறையில் சேர விரும்பினார். அப்போதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், சிறந்த உருது விமர்சகரும் கவிஞருமான கலீல்-உர்-ரகுமான் ஆஸ்மி என்பவரால் வழிநடத்தப்பட்டார். வாழ்க்கைக்கு சம்பாதிக்க, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உருது புனைகதைகளை கற்பிப்பத்தில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் அவர் படித்து முனைவர் பட்டம் பெற்றார். தனது ஆரம்பக் கல்வியை புலந்த்சரில் பெற்ற பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.[4]

தொழில்

கான் அஞ்சுமான் தாராக்கி-இ-உருது என்ற உருது இலக்கிய அமைப்பில் இலக்கிய உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உருது மொழி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1986 ஆம் ஆண்டில் பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர் 1996 இல் உருது துறைத் தலைவராக ஓய்வு பெற்றார். செர்-ஓ-கிக்மத் (கவிதை மற்றும் தத்துவம்) என்ற இலக்கிய இதழின் இணை ஆசிரியாக பணிபுரிந்தார்.[5]

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் கவிதைத் தொகுப்பு இஸ்ம்-இ- அஸாம் 1965 இல் வெளியிடப்பட்டது, இரண்டாவது தொகுப்பு, சத்வன் தார் 1969 இல் வெளிவந்தது, மூன்றாவது தொகுப்பு கிசிர் கே மௌசம் 1978 இல் வெளியிடப்பட்டது. அவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பான குவாப் கே தார் பந்த் கைன் 1987 இல் வெளிவந்தது. இது அவருக்கு அந்த ஆண்டு உருது மொழியில் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது. மேலும், அவர் தனது கவிதைகளின் ஐந்து தொகுப்புகளை உருது எழுத்துக்களில் வெளியிட்டார்.[6] 2008 ஆம் ஆண்டில், பிராக் கோரக்புரி, அலி சர்தார் சாப்ரி மற்றும் குர்ரத்-உல்-ஐன் ஐதர் ஆகியோருக்கு பிறகு ஞானபீட விருதை வென்ற நான்காவது உருது எழுத்தாளர் ஆனார்.[7][8]

இறப்பு

நுரையீரல் புற்றுநோய் காரணமாக நீடித்த நோயால் அக்லக் முகமது கான் 2012 பிப்ரவரி 13 அன்று உத்தரபிரதேசத்தின் அலிகரில் இறந்தார்.[9][10]

இவருக்கு உமாயூன் சாரியர், சைமா சாரியர் மற்றும் பரிதூன் சாரியர் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.

விருதுகள்

சாரியரின் படைப்புகள் குறித்து நான்கு ஆய்வறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

Urdu language and literature: Critical Perspectives, New Delhi, 1991.

குறிப்புகள்

  1. Shahryar, Faraz recite at mushaira பரணிடப்பட்டது 2011-09-25 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 5 August 2007.
  2. Renowned Urdu Poet.. .milligazette.com. 16–30 September 2004.
  3. 3.0 3.1 3.2 "Umraao Jaan lyricist passes away". The Times of India. 14 February 2012. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.
  4. Shahryar Encyclopaedia of Indian literature vol. 5. Page 3950.
  5. Professor Shahryar, one of India’s most critically acclaimed poets.. Arab News 1 October 2005.
  6. "Author info". Shahryar biography. Urdustudies.com. பார்க்கப்பட்ட நாள் 19 February 2012.
  7. "Poet, lyricist, Jnanpith Winner". Outlook. Archived from the original on 22 May 2012. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.
  8. "Jnanpith Laureates". Bharatiya Jnanpith. Archived from the original on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.
  9. "Shahryar (1936–2012): The poet who gave Umrao Jaan her voice". The Hindu. 14 February 2012. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.
  10. Noted poet Shahryar passes away பரணிடப்பட்டது 2013-07-14 at the வந்தவழி இயந்திரம் The Times of India, 14 February 2012
  11. List of Sahitya Akademi Award Winners in Urdu பரணிடப்பட்டது 30 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அக்லக்_முகமது_கான்&oldid=19743" இருந்து மீள்விக்கப்பட்டது