பிராக் கோரக்புரி
பிராக் கோரக்புரி (ஆங்கிலம்: Firaq Gorakhpuri) (பிறப்பு:1896 ஆகஸ்ட் 28 - இறப்பு: 1982 மார்ச் 3) என்ற அவரது புனைப்பெயரில் நன்கு அறியப்பட்ட இரகுபதி சகாய் ஒரு எழுத்தாளரும், விமர்சகரும், மற்றும் ஒரு வர்ணனையாளரின் கூற்றுப்படி, இந்தியாவிலிருந்து மிகவும் பிரபலமான சமகால உருது கவிஞர்களில் ஒருவருமாவார். [1] முகம்மது இகபால், யாகனா சேஞ்ச்சி, சிகர் மொராதாபாடி மற்றும் ஜோசு மாலிகாபாடி உள்ளிட்டவர்களிடையே அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். [2] [3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
இரகுபதி சகாய் கோரக்பூரில் ஆகஸ்ட் 28, 1896 அன்று ஒரு நல்ல மற்றும் படித்தவர்கள் குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது அடிப்படைக் கல்வியை முடித்து, பின்னர் உருது, பாரசீக மற்றும் ஆங்கில இலக்கியங்களில் முதுகலைப் பட்டம் முடித்தார். [1]
பிராக் உருது கவிதைகளில் சிறந்து விளங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டியிருந்தார். மேலும் எப்போதும் இலக்கியத்தின் மீது ஈர்ப்பைக் காட்டிக்கொண்டேயிருந்தார். அவரது சமகாலத்தவர்களில் பிரபலமான உருது கவிஞர்களான அல்லாமா இக்பால், பைஸ் அகமது பைஸ், கைபி ஆஸ்மி மற்றும் சாகிர் லூதியானி ஆகியோர் அடங்குவர். ஆயினும்கூட சிறு வயதிலேயே உருது கவிதைகளில் தனது அடையாளத்தை உருவாக்க முடிந்தது. [1]
அவர் மாகாண ஆட்சிப் பணி (பிசிஎஸ்) மற்றும் இந்திய குடிமைப் பணி (பிரித்தானிய இந்தியா) (ஐசிஎஸ்) ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்ற நினைத்து அவர் இப்பணியை ராஜினாமா செய்தார். அதற்காக அவர் 18 மாதங்கள் சிறைக்கு சென்றார். பின்னர், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார். அங்குதான் அவர் தனது உருது கவிதைகளில் பெரும்பாலானவற்றை எழுதினார். இதில் அவரது மகத்தான படைப்பான குல்-இ-நக்மா, இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது, ஞானபீட விருது மற்றும் உருது மொழியில் 1960 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதையும் பெற்றது . அவரது வாழ்நாளில், அவர் பல்கலைக்கழக மானியக் குழுவில் ஆராய்ச்சி பேராசிரியராக இருந்துள்ளார். அகில இந்திய வானொலியின் தயாரிப்பாளராக பணிபுரிந்து பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்டார். ஒரு நீண்ட கால நோய்க்குப் பிறகு, அவர் 1982 மார்ச் 3 அன்று புதுதில்லியில் இறந்தார். [1]
கோரக்புரி கசல், நாஸ்ம், ரூபாய் மற்றும் கத்தா போன்ற அனைத்து பாரம்பரிய அளவீட்டு வடிவங்களை நன்கு அறிந்தவர். உருது கவிதையின் பனிரெண்டுக்கும் மேறபட்ட தொகுதிகள், ஆறு உருது உரைநடைகள், இந்தியில் இலக்கிய கருப்பொருள்கள் பற்றிய பல தொகுதிகள், அத்துடன் இலக்கிய மற்றும் கலாச்சார பாடங்களில் ஆங்கில உரைநடை நான்கு தொகுதிகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.
[ மேற்கோள் தேவை ] இவரது வாழ்க்கை வரலாறு, பிராக் கோரக்புரி: தி கவிஞர் ஆஃப் பெயின் & எக்டசி, என்பதை அவரது மருமகன் அஜய் மான்சிங் எழுதி, ரோலி புத்தகங்களள் பதிப்பகம் 2015 இல் வெளியிட்டது. [4] இந்த புத்தகத்தில் அவரது வாழ்க்கையிலிருந்து வந்த நிகழ்வுகளும் அவரது சில படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும் இருந்தன. [ மேற்கோள் தேவை ]
விருதுகள்
- 1960 – உருது மொழியில் சாகித்ய அகாதமி விருது
- 1968 – பத்ம பூஷண் [5]
- 1968 – சோவியத் லேண்ட் நேரு விருது
- 1969 – ஞானபீட விருது (உருது இலக்கியத்திற்கான முதல் ஞானபீட விருது) [6] [4]
- 1970 – சாகித்ய அகாதமி பெல்லோஷிப்
- 1981 – காலிப் அகாதமி விருது
மரணம் மற்றும் மரபு
பிராக் கோரக்புரி 1982 மார்ச் 3 அன்று தனது 85 வயதில் இறந்தார். [1] பிராக் தனது வாழ்நாள் முழுவதும் மதச்சார்பின்மைக்காக போராடினார். உருதுவை முஸ்லிம்களின் மொழியாக முத்திரை குத்துவதற்கான அப்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக முக்கிய பங்கு வகித்தார்.
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Remembering the greatest Urdu poet since Ghalib, Firaq Gorakhpuri. India Today. 3 March 2016
- ↑ Lucknow Christian Degree College to celebrate 150 years of glory பரணிடப்பட்டது 2013-01-26 at Archive.today. Times of India. 23 November 2012
- ↑ Peace was his obsession (IK Gujral used to quote Firaq Gorakhpuri) பரணிடப்பட்டது 2013-05-20 at the வந்தவழி இயந்திரம். tehelka.com. 5 December 2012
- ↑ 4.0 4.1 Books reflect a political fever. Times of India. 23 January 2015
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ "Jnanpith Laureates Official listings". Jnanpith Website இம் மூலத்தில் இருந்து 13 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071013122739/http://jnanpith.net/laureates/index.html.
வெளி இணைப்புகள்
- Firaq Gorakhpuri at Kavita Kosh பரணிடப்பட்டது 2012-04-05 at the வந்தவழி இயந்திரம்