வெளுத்து கட்டு

வெளுத்து கட்டு (Veluthu Kattu) 2010 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் தயாரிப்பில், சேனாபதி மகன் இயக்கத்தில், புதுமுகங்கள் கதிர் மற்றும் அருந்ததி நடிப்பில், பரணி இசையில் திரைப்படம் வெளியானது.[1]

வெளுத்து கட்டு
இயக்கம்சேனாபதி மகன்
தயாரிப்புஎஸ். ஏ. சந்திரசேகர்
கதைசேனாபதி மகன்
இசைபரணி
நடிப்புகதிர்
அருந்ததி
ஒளிப்பதிவுஎம். சுகுமார்
படத்தொகுப்புசுதா
கலையகம்ஸ்டார் மேக்கர்ஸ்
வெளியீடுசூலை 2, 2010 (2010-07-02)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

சிங்கம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கதிரேசன் (கதிர்) பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவன். ஆனால் அருக்காணி (அருந்ததி) நன்கு படிப்பவள். சிறுவயதிலிருந்து ஒருவரையொருவர் விரும்பும் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் உறவுமுறையும் உரிமையும் உள்ளவர்கள். அருக்காணியின் தந்தை மருதாசலம் (எல். ராஜா) தன் மகளுக்கு படித்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்ய நினைக்கிறார். அருக்காணியின் மற்றொரு முறைப்பையனான கருப்புசாமி (கபாலி விஸ்வநாத்) அவளிடம் தவர்க நடக்க முயல அவனது கரத்தை வெட்டுகிறான் கதிர். இதனால் சிறைக்கு செல்லும் கதிர் விடுதலையானதும் அருக்காணியுடனானத் தன் காதலைத் தொடர்கிறான். இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் மருதாசலம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால் கதிர் வேலைக்குப் போய் சம்பாதித்தால் மட்டுமே அவனைத் திருமணம் செய்வேன் என்று அருக்காணி கூறுகிறாள்.

வேலை தேடி சென்னைக்கு வரும் கதிர் அங்கு எந்த வேலையும் கிடைக்காமல் சிரமப்படுகிறான். அங்கு அவனுக்கு ஆறுமுகம் (முத்துராஜ்) எனும் நண்பன் கிடைக்கிறான். இருவருக்கும் ஒரு கல்லூரி உணவகத்தில் வேலை கிடைக்கிறது. அங்கு தொழிலதிபரின் மகள்களான ஜனனி (அர்ச்சனா சர்மா) மற்றும் ரம்யா (பவினா) இருவரின் நட்பும் கிடைக்கிறது. கதிர் தன் கடின உழைப்பாலும், ஜனனியின் உதவியாலும் ஒரு உணவகத்தின் உரிமையாளராக உயர்கிறான். அதன் பிறகு தன் ஊருக்குத் திரும்பும் கதிர், அவன் சென்னையில் இருந்த காலங்களில் அங்கு நடந்தவற்றைக் கேட்டு அதிர்ச்சியாகிறான். அருக்காணி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ராசு மைனரைக் கொன்றதால் சிறைக்குச் செல்கிறாள். சிறையிலிருந்து அருக்காணி விடுதலையாகி வரும்வரை காத்திருக்கும் கதிர், அவளைத் திருமணம் செய்கிறான்.

நடிகர்கள்

  • கதிர் - கதிரேசன்
  • அருந்ததி - அருக்காணி
  • அர்ச்சனா சர்மா - ஜனனி
  • பவினா - ரம்யா
  • எல். இராஜா - மருதாசலம்
  • கராத்தே ராஜா - ராசு மைனர்
  • முத்துராஜ் - ஆறுமுகம்
  • கபாலி விஸ்வநாத் - கருப்புசாமி
  • அந்தக்குடி இளையராஜா - ரங்கு
  • பட்டிவீரா கஜபதி
  • தில்சா
  • மேலூர் சசி - கோபால்
  • ஜெனிபர் - சரோஜா
  • அழகேஷ்
  • மாஸ்டர் வசந்த்
  • பேபி அனு

இசை

படத்தின் இசையமைப்பாளர் பரணி. படத்தின் பாடல் குறுந்தகட்டை விஜய் வெளியிட குஷ்பூ பெற்றுக்கொண்டார்[2][3][4].

வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 கிர்ரதா சினேகன் திப்பு 4:05
2 தலைசீவி நா. முத்துக்குமார் ரோஷினி 5:20
3 சிங்கம்பட்டி கபிலன் சங்கர் மகாதேவன், சாருலதா மணி, பல்லவி சுரேந்தர் 4:56
4 ஒத்தையா இருந்தா நா. முத்துக்குமார் அந்தக்குடி இளையராஜா, ரோஷினி 4:22
5 சங்கிலி புங்கிலி ராப் வல்லா, சோபா சந்திரசேகர், கார்த்திக் 4:12
6 காக்கைக்கு பரணி சக்தி ப்ரகதிஷ், வைஷாலி, முத்துப்பாண்டி 2:31
7 ஒத்தையா இருந்த நா. முத்துக்குமார் ரோஷினி 2:49
8 அன்புள்ள சினேகன் பரணி 1:49

விமர்சனம்

விகடன்: 100க்கு 38 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது[5].

தினமலர்: படத்தின் முற்பகுதி 2009 இல் வெளியான பசங்க திரைப்படத்தின் பாதிப்பு என நினைக்க வைக்கிறது[6].

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வெளுத்து_கட்டு&oldid=37810" இருந்து மீள்விக்கப்பட்டது