வெற்றி முகம்

வெற்றி முகம் (Vetri Mugam) என்பது 1996 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். தென்னவன் இயக்கிய இப்படத்தில் விக்னேஷ், கீர்த்தனா, ரூபா ஸ்ரீ ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, விவேக், தாமு, பாண்டு, மதன் பாப், வி. கோபாலகிருஷ்ணன், ஜெய்கணேஷ், கே. கே. சௌந்தர் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வசந்த ராஜன் இசை அமைத்துள்ளார். படமானது 1996 ஆகத்து 2, அன்று வெளியிடப்பட்டது. [1] [2] [3] [4]

வெற்றி முகம்
இயக்கம்தென்னவன்
தயாரிப்புவி. ஜி. இராஜன்
எஸ். கே. பிரதர்ஸ்
தென்னவன்
கதைThennavan
இசைவசந்த ராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயபால்
படத்தொகுப்புகே. பி. கே. இரவிச்சந்திரன்
கலையகம்இராஜராஜன் சினி ஆர்ட்ஸ்
வெளியீடுஆகத்து 2, 1996 (1996-08-02)
ஓட்டம்125 நமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

அரவிந்த் ( விக்னேஷ் ) ஒரு திறமையான ஓவியன். அவன் ஒரு செய்தித்தாளில் பணியாற்றிவருகிறான். அவன் மனச்சோர்வுக்கு ஆளானவன். அவன் காதலை வெறுக்கின்றவன். அவன் ஒரு குடியிருப்பில் தனியாக வாழ்கிறான். சுமதி ( கீர்த்தனா ) மற்றும் அவரது தந்தை ( கே. கே. சௌந்தர் ) அதே குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு கிடியேறுகின்றனர். அரவிந்தை சுமதி விளையாட்டாக கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறாள். ஒரு நாள், அரவிந்த் தன் கசப்பான கடந்த காலத்தை அவளிடம் சொல்கிறான்.

கடந்த காலத்தில், கல்லூரி நாட்களில் அவனும் ஷீலாவும் ( ரூபா ஸ்ரீ ) காதலித்தனர். அரவிந்த் தனது காதலியின் பெயரை மார்பில் பச்சை குத்திக் கொள்கிறான். மேலும் அவன் அவளுக்கு ஒரு தங்க மோதிரத்தை கூட அணிவித்தான். அரவிந்த் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன், ஷீலா ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளது தொழிலதிபர் தந்தையுடன் ( ஜெய்கணேஷ் ) வசித்து வந்தாள். அவளுடைய தந்தை ஷீலாவை அவளது காதலனை மறக்கச் சொல்லி, அவளை ஒரு பணக்கார மணமகனுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறார். அரவிந்த் அதைப் பற்றி அறிந்ததும், மனம் உடைந்தான். அவன் அவளை சந்திக்க முடிவு செய்தான். தாங்கள் சேர்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று சுமதி அரவிந்தை திட்டுகிறான். அவள் தன்னை மறந்துவிடுமாறு சொல்கிறாள்.

அரவிந்துக்கு காதல் குறித்து உள்ள எதிர்மறையான பார்வையை தன்னால் மாற்ற முடியும் என்று சுமதி உறுதியாக நம்புகிறாள். அவனை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறாள். அதன்பிறகு, அரவிந்தின் மனம் மாறுகிறது, அவனும் சுமதியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அவர்களின் திருமண நாளில், அரவிந்தை காவல் துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். நீதிமன்ற அறையில், ராஜரத்தினம் மற்றும் விஜய் கொலை குறித்து வழக்கறிஞர் அவனிடம் விசாரிக்கிறார். ஆனால் அரவிந்த் அவரைத் தனக்குத் தெரியாது என்று கூறுகிறான். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ள ஷீலா தனது கணவர் விஜய் அவனது முதலாளி ராஜரத்தினத்துடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும்படி அவளைக் கட்டாயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறுகிறாள். தனது மானத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, ஷீலா ராஜரத்தினத்தையும் அவளது கணவர் விஜயையும் கொல்கிறாள். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அவளது கணவரால் முகத்தில் அமிலம் வீசி அவளது முகம் பாதிக்கப்படுகிறது. நீதிமன்றம் அவளுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கிறது, அவனை விட்டு பிரிந்ததற்காக ஷீலா அரவிந்திடம் மன்னிப்பு கேட்கிறாள். பின்னர் அரவிந்தையும் சுமதியையும் ஒன்றாக சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறாள்.

நடிகர்கள்

இசை

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் போன்றவற்றிற்கு இசையமைப்பாளர் வசந்த ராஜன் இசையமைத்தார். 1996 இல் வெளியான பாடல் பதிவில் வைரமுத்து மற்றும் கவிமணி ஆகியோர் எழுதிய ஐந்து பாடல் கள் இடம்பெற்றிருந்தன. [5] [6]

பாடல்
# பாடல்படகர் நீளம்
1. "எங்க மாமா"  மனோ 4:41
2. "பெண் என்றால்"  ஜாலி ஆபிரகாம் 5:14
3. "வா பக்கம் வா"  மனோ, சுவர்ணலதா 4:48
4. "என் ஜீவன் கண்ணில்"  மனோ, சுவர்ணலதா 5:10
5. "ஓ.. புள்ளி மானே"  மனோ, சுவர்ணலதா 4:12
மொத்த நீளம்:
24:05

மேற்கோள்கள்

  1. "Filmography of vetri mugam". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 17 November 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041117002727/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=2018. 
  2. "Jointscene : Tamil Movie Vetri Mugam". jointscene.com இம் மூலத்தில் இருந்து 4 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100204200454/http://jointscene.com/movies/Kollywood/Vetri_Mugam/8344. 
  3. "Vetri Mugam (1996)". gomolo.com இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191107121636/http://www.gomolo.com/vetri-mugam-movie/12048. 
  4. "Vetri Mugam Tamil Movie". woodsdeck.com. http://www.woodsdeck.com/movies/4406-vetri-mugam-1996. 
  5. "Vetri Mugam (1996) - Vasantha Rajan". mio.to இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191107121639/https://mio.to/album/Vasantha%2BRajan/Vetri%2BMugam%2B(1996). 
  6. "Vetri Mugam (Original Motion Pictures Soundtrack)". jiosaavn.com இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191107123139/https://www.jiosaavn.com/album/vetri-mugam-original-motion-pictures-soundtrack/PAkIsBMQFE0_. 
"https://tamilar.wiki/index.php?title=வெற்றி_முகம்&oldid=37815" இருந்து மீள்விக்கப்பட்டது