மௌனம் கலைகிறது
மௌனம் கலைகிறது (Mounam Kalaikirathu) என்பது 1986 இல் குன்றை வேந்தன் கரிகாலன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். காதல் தொடர்பான இத்திரைப்படத்தில் சுரேஷ், ஜீவிதா, ஆனந்த் பாபு, ஜெயஸ்ரீ, விஜயகுமார், சின்னி ஜெயந்த், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1986 திசம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது.[1]
மௌனம் கலைகிறது Mounam Kalaikirathu | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | குன்றை வேந்தன் கரிகாலன் |
தயாரிப்பு |
|
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
கலையகம் | எச்எம்சி புரொடக்சன்சு |
வெளியீடு | திசம்பர் 12, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
ராஜேசும் தீபாவும் காதலர்கள், ஆனால் கண்ணனும் ராஜேசுடனான தீபாவின் உறவை அறியாமலேயே அவளை நேசிக்கிறான். சோபனா என்ற மருத்துவர், கண்ணனையும் நேசிக்கிறார். இந்த உறவு குறித்து ஆராயும் இப்படம், இறுதியாக மௌனம் கலைக்கிறது.
நடிகர்கள்
- சுரேஷ் - கண்ணன்
- ஜீவிதா - தீபா
- ஆனந்த் பாபு - இராஜேஷ்
- ஜெயஸ்ரீ - சோபனா
- விஜயகுமார்
- சின்னி ஜெயந்த்
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
பின்னணிக் குரல்
ஜீவிதாவிற்கு அனுராதாவும், ஆனந்த் பாபுவிற்கு எஸ். என். சுரேந்தரும் பின்னணிக் குரல் கொடுத்திருந்தனர்.[2]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி , புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து, சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "வாடி அம்பிகையே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர் | ||||||||
2. | "கண்ணன் யாருக்கு" | பி. சுசீலா | ||||||||
3. | "கண்ணன் இராதைக்கு" (சோகம்) | இரமேஷ் | ||||||||
4. | "அன்பே மௌனம் கலைகிறது" | வாணி ஜெயராம், குழுவினர் | ||||||||
5. | "இசைக்கருவி இசை" | — | ||||||||
6. | "மாலை நேரம் சுகம்" | இரமேஷ், உமா ரமணன் | ||||||||
7. | "எங்கெம்மா நீ போற" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | ||||||||
8. | "அன்பே மௌனம் கலைகிறது" (சோகம்) | வாணி ஜெயராம் |
வரவேற்பு
இந்தியன் எக்சுபிரசிலிருந்து இவ்வாறு எழுதியிருந்தனர். "கதை இயல்பாக உருவாக்கப்பட்டது. சலிப்பாக இல்லை. நிகழ்ச்சிகள் நம்பகமானவை", சங்கர்-கணேஷ் "சில இனிமையான பாடல்களுடன் வந்துள்ளனர்".[5]
மேற்கோள்கள்
- ↑ "மௌனம் கலைகிறது / Mounam Kalaikirathu (1986)" இம் மூலத்தில் இருந்து 18 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211118160842/https://screen4screen.com/movies/mounam-kalaikirathu.
- ↑ V, Sankaran (25 July 2022). "மோகனுக்கு குரல் கொடுத்து படங்களை வெள்ளிவிழாவிற்கு வித்திட்ட டப்பிங் கலைஞர் இவரா?!" (in ta) இம் மூலத்தில் இருந்து 24 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240424085146/https://cinereporters.com/super-hit-voice-and-dubbing-artist-s-n-surendar-and-his-biography/.
- ↑ "Mounam Kalaikirathu Tamil Film LP Vinyl Record by Shankar Ganesh" இம் மூலத்தில் இருந்து 22 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211122141102/https://macsendisk.com/product/mounam-kalaikirathu-tamil-film-lp-vinyl-record-by-shankar-ganesh/.
- ↑ "Mounam Kalaikirathu (Original Motion Picture Soundtrack)". 1 December 1986 இம் மூலத்தில் இருந்து 4 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230804124723/https://music.apple.com/ca/album/mounam-kalaikirathu-original-motion-picture-soundtrack/1331425908.
- ↑ "Love games". இந்தியன் எக்சுபிரசு: pp. 14. 26 December 1986. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19861226&printsec=frontpage&hl=en.