மேஜர் சந்திரகாந்த்

மேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] . கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [2]வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன் மற்றும் ஜெயலலிதா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார்.

மேஜர் சந்திரகாந்த்
சுவரிதழ்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
ஏவிஎம் புரொடக்சன்சு
இசைவி. குமார்
நடிப்புமேஜர் சுந்தர்ராஜன்
நாகேஷ்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 11, 1966
ஓட்டம்156 நிமிடங்கள்
நீளம்4425 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

மோகன் அவன் தங்கை விமலா பிரபுவை ஏமாற்றிய காதலன் ரஜினிகாந்தைக் கொன்றுவிடுகிறான். இந்த கொலைக்குப் பின் மேஜர் சந்திரகாந்திடம் தஞ்சமடைகிறான் மோகன். மேஜரின் போலீஸ் மகனான ஸ்ரீகாந்த் கொலைகாரனுக்கு அடைக்கலம் கொடுத்த தன் தந்தையை கைது செய்வானா? நம்பிக்கை, நாணயம் மற்றும் ஏய்ப்பு என்று மனிதனின் முக்கிய குணாதிசியங்களை சோதித்து பார்க்கும் படம் மேஜர் சந்திரகாந்த்.

கதாபாத்திரங்கள்

  1. மேஜர் சந்திரகாந்தாக மேஜர் சுந்தரராஜன்
  2. மோகனாக நாகேஷ்
  3. ஸ்ரீகாந்தாக முத்துராமன்
  4. விமலா பிரபுவாக ஜெயலலிதா
  5. ரஜினிகாந்தாக ஏ. வி. எம். ராஜன்

பாடல்கள்

இப்படத்தில் வி.குமாரின் இசையமைப்பில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[3]

  1. நேற்று நீ - டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
  2. ஒரு நாள் யாரோ - பி. சுசீலா
  3. நானே பனி நிலவு - பி. சுசீலா
  4. கல்யாண சாப்பாடு போடவா - டி. எம். சௌந்தரராஜன்
  5. துணிந்து நில் - சீர்காழி கோவிந்தராஜன்

துணுக்குகள்

  1. கே. பாலச்சந்தரின் மேடை நாடகங்களில் ஒன்றான மேஜர் சந்திரகாந்தை தழுவியதே இப்படம்.
  2. நடிகர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்த படம் மேஜர் சந்திரகாந்த்.
  3. நடிகையாக ஜெயலலிதா கே.பாலச்சந்தரின் திரைப்படத்தில் நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:ஏவிஎம்
"https://tamilar.wiki/index.php?title=மேஜர்_சந்திரகாந்த்&oldid=36832" இருந்து மீள்விக்கப்பட்டது