மாஸ்டர் பிரபாகர்

மாஸ்டர் பிரபாகர் (பிறப்பு பிரபாகர் வைஷ்யன் ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் முதன்மையாக தமிழ் மற்றும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் 1977 மற்றும் 1987 க்கு இடையில் தூர்தர்சனுக்காக சுமார் 60 நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநராக சில பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ஜி. ஆர். நாதன் இயக்கிய தேவாலயம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். இவர், 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். [1] [2]

மாஸ்டர் பிரபாகர்
பிறப்பு28 பெப்ரவரி 1957 (1957-02-28) (அகவை 67)
மதுரை, தமிழ்நாடு
பணிநடிகர்
தொழில்நுட்ப வல்லுநர்
செயற்பாட்டுக்
காலம்
1967-2002
உறவினர்கள்சுமதி (சகோதரி)

தனிப்பட்ட வாழ்க்கை

இந்தியாவில், தமிழ்நாட்டின், மதுரையில் பிரபாகர் பிறந்தார். இவரது தாய்மொழி சௌராட்டிர மொழி. இவரது தந்தையும் தாயும் மதுரையை சேர்ந்தவர்களே. இவரது தந்தை ஒளிப்பட நிலையம், அச்சகம் போன்ற பல வணிகங்களை செய்துவந்தார். இவரது தாயார் ஒரு இல்லத்தரசியாவார். இவருக்கு சுமதி என்ற தங்கையும், ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் இருந்தனர். குடும்பத்தில் முதன்முதலில் திரையுலகிற்கு வந்தவர் பிரபாகர் ஆவார். 1966 இல், பிரபாகர் சுமதியுடன் சேர்ந்து தனது கனவுகளைத் தேடி அவரது அத்தையுடன் சென்றார். [3]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

நடிகராக
தொழில்நுட்பக் கலைஞராக
  • 2002 ஆவாரா பாகல் தீவானா (விளக்குத் தொழில்நுட்ப வல்லுநர்)
  • 1998 பத்மாஷ் (ஸ்பாட் பாய்)
  • 1994 பிரேம் யோக் (விளக்குத் தொழில்நுட்ப வல்லுநர்)
  • 1992 கிலாடி (விளக்குத் தொழில்நுட்ப வல்லுநர்)
  • 1989 பரிந்தா (மின்பணியாளர்: என்சி சினி)
  • 1984 லோரி (லைட் பாய்)
  • 1983 லவ் இன் கோவா (உதவி ஒளிப்படமி)
  • 1978 கர்மயோகி (உதவி ஒளிப்படமி)
  • 1972 பாம்பே டு கோவா (ஒளிப்படமி இயக்குபவர்)
  • 1971 மன் மந்திர் (உதவி ஒளிப்படமி)
  • 1970 ஜானி மேரா நாம் (உதவி ஒளிப்படமி)
  • 1968 மேரா நாம் ஜோக்கர் (உதவி ஒளிப்படமி)
  • 1967 நகை திருடன் (உதவி ஒளிப்பதிவு இயக்குநர்)
  • 1965 வழிகாட்டி (உதவி ஒளிப்படமி)

மேற்கோள்கள்

  1. "Grill Mill – Master Prabhakar". The Hindu. 2010-10-30. http://www.thehindu.com/features/cinema/grill-mill-master-prabhakar/article859259.ece. பார்த்த நாள்: 2015-03-10. 
  2. "Prabhakar". https://www.imdb.com/name/nm0694882/. பார்த்த நாள்: 2015-03-10. 
  3. "Star interviews: Exclusive: Interview with Prabhakar". Telugu Cinema இம் மூலத்தில் இருந்து 2 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090502133715/http://www.telugucinema.com/c/publish/stars/interview_masterprabhakar_2008.php. பார்த்த நாள்: 14 May 2014. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாஸ்டர்_பிரபாகர்&oldid=21368" இருந்து மீள்விக்கப்பட்டது