பொண்டாட்டி பொண்டாட்டிதான்
பொண்டாட்டி பொண்டாட்டிதான் (Pondatti Pondattithan) என்பது 1991 இல் மணியன் சிவபாலன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். எஸ். வி. சேகர், காதம்பரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் சனகராஜ், செந்தில், மனோரமா, வி. கே. ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சுலக்சனா, டிஸ்கோ சாந்தி மற்றும் கோவை சரளா ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.வி.ஆர்.ஜே.பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.[1] பா. விஜய், புதுமை பித்தன் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளார்.[2] இசை கங்கை அமரன் 1991 ஜூலை 11 அன்று வெளிவந்தது.[3][4][5]
பொண்டாட்டி பொண்டாட்டிதான் | |
---|---|
இயக்கம் | மணியன் சிவபாலன் |
தயாரிப்பு | விஜி ராதா ஜெய் |
கதை | மணியன் சிவபாலன் (வசனம்) |
திரைக்கதை | மணியன் சிவபாலன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். சி. எம். கஸ்தூரி |
படத்தொகுப்பு | எஸ். விஜயகுமார் |
கலையகம் | விஆர்,ஜெ பிலிம்ஸ் |
வெளியீடு | சூலை 11, 1991 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
ராஜகோபால் (எஸ். வி. சேகர்) அவரது பாட்டியுடன் (மனோரமா) வேலூரில் வாழ்ந்து வருகின்றான். அவன் நன்கு படித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அவனது பாட்டி உறவினர் ஒருவருடைய படிக்காத பெண் லக்ஷ்மியை (காதம்பரி) திருமணம் செய்துகொள்ள அறிவுரை கூறுகிறார், ஆனால் ராஜகோபால் மறுத்துவிடுகிறான். பின்னர் ,ஒரு சமயம் லக்ஷ்மியை நேரில் பார்த்த பிறகு, அவளை திருமணம் செய்துகொள்கிறார். பல்வேறு காரணங்களால், அவர்களது வாழ்க்கை ஆரம்பமாவது தாமதமாகிறது.
சில வாரங்களுக்குப் பின்னர், ராஜகோபாலுக்கு பதவி உயர்வு கிடக்கிறது. எனவே இராஜகோபால் தனது வேலைக்காக வீட்டை விட்டு சென்னை செல்ல் நேர்கிறது,. அங்கு, தனது கல்லூரி நண்பன் ஜெய் என்பவனுடன் தங்குகிறான். ஒரு இரவு, குண்டர்களால் துரத்தப்பட்ட பத்மா (டிஸ்கோ சாந்தி) என்ற பெண்ணுக்கு உதவி ஒரு விடுதியில் தங்க வைக்கிறான். காவல் துறையினர் அவர்களை கைது செய்து, ராஜகோபாபாலனின் முதலாளி கிருஷ்ணனுக்கு இந்த விஷயத்தைத் தெரிவிக்கிறார்கள். ராஜகோபாபாலன் நடந்ததை தனது முதலாளிக்கு எவ்வாறு கூறினான், என்பதும், தனது மனைவியுடன் மீண்டும் எவ்வாறு சேர்ந்தான் என்பதும் மீதிக்கதையாகும்
நடிகர்கள்
- எஸ். வி. சேகர் -ராஜகோபால்
- காதம்பரி - லட்சுமி
- சனகராஜ் - கதிரேசன்
- செந்தில் - சபாபதி
- மனோரமா - ராஜகோபாலனின் தாயாக
- வி. கே. ராமசாமி காவல் அதிகாரி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கிருஷ்ணன்
- சுலக்சனா - ராமஜெயம்
- டிஸ்கோ சாந்தி - பத்மா
- கோவை சரளா -ஜானகி
- ஒய்.விஜயா - பத்மாவின் சகோதரி
- குமரிமுத்து - பிச்சைமுத்து
- லூசு மோகன் - கபாலி
- மேனஜர் சீனா - மேனாஜர்
- உசிலை மணி -ஐய்யர்
- சீனு
- வெங்கட்ராமன்
- குமரேசன்
- பூர்ணிமா
- சுமதி
ஒலித்தொகுப்பு
பொண்டாட்டி பொண்டாட்டிதான் | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1991 |
ஒலிப்பதிவு | 1991 |
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் |
நீளம் | 19:06 |
இசைத் தயாரிப்பாளர் | கங்கை அமரன் |
கங்கை அமரன் இசையில் 5 பாடல்கள் கொண்ட இதன் ஒலித்தொகுப்பு 1991இல் வெளிவந்தது, பா. விஜய், புதுமை பித்தன் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளார்.[2]
எண் | பாடல் | பாடியோர் | காலம் |
---|---|---|---|
1 | பொண்டாட்டி பொண்டாட்டிதான் | மனோரமா | 2:54 |
2 | உன்னை விட ஊரில' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 3:50 |
3 | பூத்ததே பூட்டு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:23 |
4 | அடிக்கிற கை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:48 |
5 | "மானே மயிலே" | கே. ஜே. யேசுதாஸ் | 4:11 |
மேற்கோள்கள்
- ↑ "லட்சுமன் சுருதி -1991 திரைப்படங்கள்" இம் மூலத்தில் இருந்து 2019-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191126030016/http://www.lakshmansruthi.com/cineprofiles/1991.asp.
- ↑ 2.0 2.1 "உன்னை நான் பாடல்" இம் மூலத்தில் இருந்து 2019-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191116141323/https://mio.to/album/Unnai%2BNaan%2B(2006).
- ↑ "Pondatti Pondattidhan (1991) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/pondatti-pondattidhan/. பார்த்த நாள்: 2017-01-24.
- ↑ "Pondatti Pondattidhan (1991)". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202100942/http://www.gomolo.com/pondatti-pondattidhan-movie/11550. பார்த்த நாள்: 2017-01-24.
- ↑ "Filmography of pondati pondattidhan". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029131550/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pondati%20pondattidhan. பார்த்த நாள்: 2017-01-24.