புளியங்குடி


புளியங்குடி (ஆங்கிலம்: Puliangudi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் நகராட்சி மற்றும் புன்னையாபுரம் ஊராட்சியை கொண்டது ஆகும்.இந்த ஊரானது, மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். திருநெல்வேலியிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,தென்காசியில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது.

புளியங்குடி
—  நகராட்சி (Town)  —
புளியங்குடி
இருப்பிடம்: புளியங்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°10′21″N 77°23′44″E / 09.172500°N 77.395600°E / 09.172500; 77.395600Coordinates: 9°10′21″N 77°23′44″E / 09.172500°N 77.395600°E / 09.172500; 77.395600
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர்
அருகாமை நகரம் சங்கரன்கோவில், தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

தனுஷ் எம். குமார்

சட்டமன்றத் தொகுதி வாசுதேவநல்லூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

டி. சதன் திருமலை குமார் (திமுக (மதிமுக))

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


233 மீட்டர்கள் (764 அடி)

குறியீடுகள்

திருநெல்வேலி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம் ஆகிய பெருநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன. 'புளியங்குடி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் எலுமிச்சை பழம் சாகுபடி அமோகமாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலுமிச்சம் பழம் சந்தை இவ்வூரில் உள்ளது. அதனால் இந்த ஊரை லெமன் சிட்டி என்று அழைக்கப்படுகிறது.[3]மேலும் இவ்வூரில் லுங்கித் துணி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் தரமான தனியார் மருத்துவமனைகள் இவ்வூரில் உள்ளன.

சின்ன குற்றாலம் என்று புளியங்குடி மக்களால் அழைக்கப்படும் முந்தல் அருவி இவ்வூரில் உள்ளது.

போக்குவரத்து

புளியங்குடி நகரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் இரவு பகலாக இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பிலும், கேரள மாநில போக்குவரத்து கழக சார்பிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகர்களுக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி பகுதிகளுக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரிக்கும், கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புளியங்குடியில் இருந்து நகர்ப்புற பேருந்துகள் திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர், சுரண்டை பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

புளியங்குடிகான இரயில் நிலையம் பாம்பு கோவில் சந்தையில் அமைக்கப்பட்டது குறிப்படத்தக்கது.

இப்பகுதி மக்கள் இரயில் நிலையம் அடைய சங்கரன்கோவில் 16கி.மீ செல்கிறார்கள் அல்லது ஆட்டோ இரு சக்கர வாகனம் மூலமாக பாம்புகோவில் சந்தை இரயில் நிலையம் 8 கி.மீ செல்கிறார்கள்

இப்பகுதி இரயில் நிலையம் என்பது நீண்ட நாள் கனவாகவே உள்ளது.

புளியங்குடியில் இரண்டு முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன - அவை புளியங்குடி பேருந்து நிலையம் மற்றும் சிந்தாமணி பேருந்து நிலையம் மற்றும் இரண்டு நிறுத்தங்கள் உள்ளன புளியங்குடி பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் மற்றும் புளியங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை நிறுத்தம்.



மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66,080 மக்கள் இங்கு வ சிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புளியங்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[4]

கல்லூரிகள்

  • எஸ்.வி. பொறியியல் கல்லூரி
  • கோமதி அம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி
  • மனோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி
  • எஸ்.வி. கல்வியியல் கல்லூரி
  • அமராவதி பாராமெடிக்கல் கல்லாரி
  • ST மேரி காலேஜ் ஆஃப் பார்மசி

மேல்நிலைப் பள்ளிகள்

  • இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி
  • ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
  • செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • நியூ கிரசென்ட் மெட்ரிக் பள்ளி

மேல்நிலைப் பள்ளிகள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • அரசு பெண்கள் மனித வளம் மேல்நிலைப் பள்ளி
  • காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளி
  • சுயம்புலிங்கம் மேல்நிலைப் பள்ளி
  • சீனியம்மாள் மேல்நிலைப் பள்ளி
  • கண்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளி

உயர்நிலைப் பள்ளிகள்

  • ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி
  • முஹைதீன் ஆண்டவர் உயர்நிலைப் பள்ளி
  • எ.வி.எஸ். உயர்நிலைப் பள்ளி
  • ஹஜ்.என்.யூ.சி. உயர்நிலைப் பள்ளி

நர்சரி, தொடக்கப் பள்ளிகள்

  • செல்வன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
  • அருண் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
  • செங்குந்தர் தொடக்கப்பள்ளி
  • அகஸ்தியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
  • வெல்டன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
  • அமராவதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
  • எஸ்.வி. சாய் நிகிதன் (CBSE) நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி.
  • ரஹ்மத் பள்ளி
  • அன்னை மீனாட்சி CBSE
  • கண்ணா CBSE
  • அரவிந்தர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
  • பரமானந்தா நடுநிலைப் பள்ளி

சிறப்புகள் மற்றும் பெயருக்கான காரணம்

பூலியன் பாண்டியனின் ஆட்சி நடந்தால் இவ்வூர் பூலியன்குடி என்று இருந்து பின்னர் காலப்போக்கில் புளியங்குடி என்று மாறியது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்கள்.

இவ்வூரில் உலகத்தின் மிகப்பெரிய எழுமிச்சை மார்கெட் உள்ளது. இங்கு இருந்து பல மாநிலம் மற்றும் பல நாடுகளுக்கு எற்றுமதி நடைபெறுகிறது.

புளியங்குடியில் சிறப்பான முறையில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.உலக தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகழ் பெற்ற வெள்ளத்துரை அசைவ உணவகம்.

சின்ன குற்றாலம் முந்தல் அருவி.

வாழைமலை ஆறு.

கோட்டைமலை ஆறு.




முக்கிய நகரங்கள்

புளியங்குடி - குற்றாலம் = 34 கி.மீ.

புளியங்குடி - சங்கரன்கோவில் = 16 கி.மீ.

புளியங்குடி - கடையநல்லூர் = 15 கி.மீ.

புளியங்குடி - வாசுதேவநல்லூர் = 8 கி.மீ.

புளியங்குடி - தென்காசி = 30 கி.மீ.

புளியங்குடி - திருநெல்வேலி = 79 கி.மீ.

புளியங்குடி - இராஜபாளையம் = 42 கி.மீ.

புளியங்குடி - திருவில்லிபுத்தூர் = 52 கி.மீ.

புளியங்குடி - சிவகிரி = 20 கி.மீ.

புளியங்குடி - மதுரை = 113 கி.மீ.

புளியங்குடி - திருச்சி = 230 கி.மீ.

புளியங்குடி - சென்னை = 600 கி.மீ.

புளியங்குடி - சுரண்டை = 24 கி.மீ.

புளியங்குடி - கோவில்பட்டி = 59 கி.மீ.

வங்கிகள்

  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
  • தமிழ்நாடு மெக்கன்டைல் பேங்க்
  • சிட்டி யூனியன் பேங்க்
  • இந்தியன் ஓவ்சீஸ் பேங்க்
  • கனரா வங்கி
  • தமிழ்நாடு கிராம வங்கி
  • எச்டிஎப்சி வங்கி

இந்து கோவில்கள்

  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், புளியங்குடி.
  • அருள்மிகு நரசிங்க பெருமாள் கோயில், புளியங்குடி.
  • அருள்மிகு கனக விநாயகர் கோவில், புளியங்குடி.
  • அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், புளியங்குடி.
  • அருள்மிகு அகத்தீஸ்வரர் லோபமுத்திரை அம்பாள் திருக்கோவில்,செங்குந்தர் சமுதாயம் பாத்தியப்பட்டது,புளியங்குடி
  • அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில், புளியங்குடி.(மேற்கு பகுதி).
  • வன காளியம்மன் கோவில் சுள்ளக்கரை ரோடு குறவர் சமுதாயம் புளியங்குடி
  • அருள்மிகு ஸ்ரீ வடக்குத்தி அம்மன் கோவில், புளியங்குடி.
  • அருள்மிகு மீனாட்சி சொக்கலிங்க சுவாமி கோயில், சிந்தாமணி.
  • அருள்மிகு மாரியம்மன் கோயில், சிந்தாமணி.
  • அருள்மிகு தண்டாயுதபாணி கோயில்.
  • அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் கோயில்.
  • அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில், சிந்தாமணி.
  • அருள்மிகு ஆவணி அம்மன் கோயில்.
  • அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவில்.
  • அருள்மிகு முப்பத்து அம்மன் கோயில், சிந்தாமணி.
  • அருள்மிகு மாரியம்மன் கோயில், சிந்தாமணி.
  • அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில், புளியங்குடி.
  • அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மார்கெட் அருகில்
  • அருள்மிகு கற்பக மாரியம்மன் திருக்கோயில், கற்பக வீதி
  • அருள்மிகு முப்பிடாதி அம்மன் திருக்கோயில், தேவர் கிணற்று தெரு
  • மாரியம்மன் கோயில் வடக்கு பகுதி. சேனைத்தலைவர். சமுதாயம்
  • காளியம்மன் கோயில். சேனைத்தலைவர் சமுதாயம்
  • சோமசுந்தர விநாயகர் திருக்கோயில் 5ஆம் மண்டகப்படி
  • அகஸ்தியர் உலோபமுத்திரை அம்பாள் திருக்கோவில்
  • கருணைமிகு கெங்கையம்மன் திருக்கோயில்,புளியங்குடி

பள்ளிவாசல்கள்

  • மீராசா அண்டவர் ஜும்மா மஸ்ஜித் (மேல பள்ளிவாசல்)
  • கீழ (கிழக்கு) பள்ளிவாசல் ஜும்மா மஸ்ஜித்
  • மஸ்ஜித் ஆலம் ஜும்மா பள்ளிவாசல்
  • ஜமாலியா பள்ளிவாசல் ஜின்னா நகர்
  • TNTJ மஸ்ஜித் ஜின்னா நகர் கிளை
  • காய்தே மில்லத் பள்ளி (முன் மஸ்ஜித்)
  • மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல்
  • மஸ்ஜித் குபா
  • மஸ்ஜித் நூர்
  • மஸ்ஜித் அபூபக்கர் (ரலி)
  • TNTJ கிழக்கு கிளை பள்ளிவாசல்
  • தமுமுக பள்ளிவாசல்
  • TNTJ மேற்கு கிளை பள்ளிவாசல்
  • TNTJ தெற்கு கிளை பள்ளிவாசல்

கிறித்தவ தேவாலயங்கள்

  • ஆர்.சி. தேவாலயங்கள்.
  • செயிண்ட் சேவியர் தேவாலயம் - சிந்தாமணி.
  • சி.எஸ்.ஐ. தேவாலயம்.
  • புனித மத்தேயு தேவாலயம், புளியங்குடி.
  • செயின்ட் பர்த்தோலோம் தேவாலயம், சிந்தாமணி.
  • எஸ்.டி.ஏ. தேவாலயம்.
  • அல்லேலூயா ஏ.ஜி தேவாலயம் டி.என்.புதுக்குடி

அரசு மருத்துவமனைகள்

  • அரசு மருத்துவமனை
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

தனியார் மருத்துவமனைகள்

  • தாமஸ் மருத்துவமனை
  • ஸ்ரீ கண்ணா மருத்துவமனை
  • மேரி மருத்துவமனை.
  • மகாலட்சுமி மருத்துவமனை
  • செல்வம் மருத்துவமனை
  • ராஜா மருத்துவமனை
  • தங்கவிநாயகம் மருத்துவமனை
  • ஜெயம் மருத்துவமனை
  • ஜனதா பல் மருத்துவமனை
  • வேல்கேர் சிறப்பு மருத்துவமனை சிவகிரி.
  • சத்யா மருத்துவமனை.

திருமண மண்டபங்கள்

  • ஹஸனத்துல் ஜாரியா அரபி பாடசாலை மண்டபம்
  • முகைதீன் ஆண்டவர் கீழ் பள்ளிவாசல் மண்டபம்
  • பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபம் - புளியங்குடி
  • கனக பாலாஜி திருமண மண்டபம்
  • செங்குந்த முதலியார் திருமண மண்டபம்
  • மூர்த்திபாபா திருமண மண்டபம்
  • இல்லத்துப்பிள்ளைமார் திருமண மண்டபம்
  • சேனைத்தலைவர் சமுதாய திருமண மண்டபம்
  • யாதவர் திருமண மண்டபம் மேலமந்தை

திரையரங்குகள்

  • மீனாட்சி திரையரங்கம்
  • SSS மல்டி பிலக்ஸ் திரையரங்கம்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Lemon cold storage to come up at Puliyangudi
  4. PULIANKUDI Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=புளியங்குடி&oldid=41564" இருந்து மீள்விக்கப்பட்டது