பி. கலைமணி
பி. கலைமணி (P. Kalaimani) என்பவர் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றிய எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, உரையாடல்களை எழுதியுள்ளார்.[2]
பி. கலைமணி | |
---|---|
பிறப்பு | பி. கலைமணி 1950 |
இறப்பு | 3 ஏப்ரல் 2012[1] தமிழ்நாடு, சென்னை | (அகவை 62)
பணி | எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் |
வாழ்க்கைத் துணை | சரஸ்வதி |
திரைப்பட வாழ்க்கை
இவர் மூன்று தசாப்தங்களாக திரைப்படத் துறையில் எழுத்தாளராக இருந்தார். மேலும் இவரது படைப்புகள் மூலமாக வெற்றியடைந்தார். இவரது படைபுகளில் குறிப்பிடத்தக்கவையாக பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, மண்வாசனை, கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற பலபடங்களாகும். இவர் சில திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது வாழ்க்கையில் சத்தியராஜ், விஜயகாந்த் போன்றவர்களுடன் பணியாற்றினார். உரையாடல் எழுத்தாளராக இவரது கடைசி படம் குருவி ஆகும்.[3] தெற்கத்திக்கள்ளன், மனித ஜாதி போன்ற படங்களை எழுதி இயக்கியுள்ளார்.[4]
மேலும் இவர் எவரெஸ்ட் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் நிறைய படங்களை தயாரித்தார்.[4] இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.
பகுதி திரைப்படவியல்
இறப்பு
நீண்டகாலமாக நோயினால் பாதிக்கபட்டிருந்த இவர் 2012 ஏப்ரல் 3 ஆம் நாள் நள்ளிரவில் இறந்தார். இவரது மனிவின் பெயர் சரஸ்வதி.
குறிப்புகள்
- ↑ "Popular Film Writer Kalaimani Passed Away". kollytalk.com. http://www.kollyinsider.com/2012/04/popular-film-writer-kalaimani-passed.html. பார்த்த நாள்: 2014-11-19.
- ↑ "P Kalaimani passes away". supergoodmovies.com இம் மூலத்தில் இருந்து 2014-11-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129063444/http://www.supergoodmovies.com/42482/kollywood/p-kalaimani-passes-away-news-details. பார்த்த நாள்: 2014-11-19.
- ↑ "Dialogue Writer P Kalaimani Passed Away". cineshadow.com இம் மூலத்தில் இருந்து 19 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141119195936/http://www.cineshadow.com/dialogue-writer-p-kalaimani-passed-away/. பார்த்த நாள்: 2014-11-19.
- ↑ 4.0 4.1 "தமிழ் சினிமாவின் 'கதை மன்னன்' பி கலைமணி மரணம்!". tamil.filmibeat.com. http://tamil.filmibeat.com/news/popular-script-writer-producer-p-kalaimani-is-no-more-aid0136.html. பார்த்த நாள்: 2014-11-19.