பாபு (நடிகர்)

பாபு (அண். 1963 – 19 செப்டம்பர் 2023) தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவந்த ஒரு இந்திய நடிகர் ஆவார். பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் (1990) திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1990களில் திரைப்படம் ஒன்றில் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயமடைந்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதவாறு முடங்கினார்.

பாபு
பிறப்புஅண். 1963
இறப்பு (அகவை 60)
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990–1991

திரைப்பணி

1990 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் பாபு நடிகராக அறிமுகமானார், புதுமுக நடிகர்களான தென்னவன், ரமா ஆகியோரைக் கொண்ட நடிகர்களுடன் முன்னணிப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துப் பாராட்டுகள் பெற்றார்.[1][2] பின்னர் விக்ரமனின் பெரும்புள்ளி (1991) திரைப்படத்தில் நடிகை சுமனுடன் நடித்தார், பின்னர் தாயம்மா (1991), பொண்ணுக்கு சேதி வந்தாச்சு (1991) ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

1990களின் தொடக்கத்தில் மனசார வாழ்த்துங்களேன் என்ற தனது சொந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சண்டைக் காட்சியில் நடித்ததில், பாபு முதுகுத்தண்டில் காயம் அடைந்து செயலிழந்தார்.[3] அதன் பின்னர் நடிப்பதை நிறுத்தினார்.[4] 1997 இல், ராதா மோகனின் தயாரிப்பில் பிரகாஷ் ராஜ் நடித்து சிமைல் பிளீஸ் என்ற வெளிவராத திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதினார்.[5]

சூன் 2004 இல், இயக்குனர் பொன்வண்ணன் தனது நண்பரான பாபுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கப் போவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை பாபுவிற்கு அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இப்படம் இறுதியில் தயாரிக்கப்படவில்லை.[6]

இறப்பு

பாபு 2023 செப்டம்பர் 19 இல் தனது 60-ஆவது அகவையில் காலமானார்.[7]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1990 என் உயிர்த் தோழன் தர்மா
1991 பெரும்புள்ளி
1991 தாயம்மா பாபு
1991 பொண்ணுக்கு சேதி வந்தாச்சு

மேற்கோள்கள்

  1. "Bharathiraja's "En Uyir Thozhan"". geocities.ws இம் மூலத்தில் இருந்து 5 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305013420/http://www.geocities.ws/ram_aishoo/EUT.htm. பார்த்த நாள்: 2016-11-19. 
  2. "Why Bharathiraja's Kollywood movie En Uyir Thozhan is so special, Bharathiraja, En Uyir Thozhan". behindwoods.com இம் மூலத்தில் இருந்து 26 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190926131803/http://www.behindwoods.com/tamil-movies-cinema-column/why-bharathirajas-kollywood-movie-en-uyir-thozhan-is-so-special.html. பார்த்த நாள்: 2016-11-19. 
  3. "சாகத்தான் போறோம்; அதைச் சொல்லி அவங்கள பயமுறுத்த வேண்டாம்னு நினைச்சேன்"- 'என் உயிர்த் தோழன்' பாபு" (in ta). 19 September 2023 இம் மூலத்தில் இருந்து 19 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230919163109/https://cinema.vikatan.com/kollywood/vintage-article-about-en-uyir-thozhan-babu. 
  4. "Big Bang Theory - The Hindu". thehindu.com இம் மூலத்தில் இருந்து 22 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211222141526/https://www.thehindu.com/features/cinema/top-kollywood-film-stars-like-ajith-suriya-vishal-and-dhanush-want-to-do-their-own-stunts-despite-suffering-injuries/article6252481.ece. பார்த்த நாள்: 2016-11-19. 
  5. "A-Z (V)". webcache.googleusercontent.com இம் மூலத்தில் இருந்து 2013-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130424003725/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm. பார்த்த நாள்: 2016-11-19. 
  6. "Film on En Uyir Thozhan Babu - Tamil Movie News". indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 20 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161120093440/http://www.indiaglitz.com/film-on-en-uyir-thozhan-babu-tamil-news-9600.html. பார்த்த நாள்: 2016-11-19. 
  7. "Bharathiraja mourns the demise of En Uyir Thozhan actor Babu". 19 September 2023 இம் மூலத்தில் இருந்து 19 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230919231515/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bharathiraja-mourns-the-demise-of-en-uyir-thozhan-actor-babu/articleshow/103784918.cms?from=mdr. 
"https://tamilar.wiki/index.php?title=பாபு_(நடிகர்)&oldid=21928" இருந்து மீள்விக்கப்பட்டது