சுமன் ரங்கநாதன்
சுமன் ரங்கநாதன் | |
---|---|
பிறப்பு | பெங்களூரு, கர்நாடகா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1989 ம் ஆண்டு முதல் |
வாழ்க்கைத் துணை |
|
சுமன் ரங்கநாதன் அல்லது ரங்கநாத், [2] இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும், திரைப்பட நடிகையுமாவார். கன்னடம், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சுமன் நடித்து வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சுமன் ரங்கநாதன்,ஜூலை 26, 1974 ம் ஆண்டில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்துள்ளார்.[3]
சித்லிங்கு (2012), ஆகாஸ் (2000) மற்றும் இஷ்க் கயாமத் (2004) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட இவர், இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பன்டி வாலியாவை 2006 ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்தார். ஆனால் எட்டே மாதங்களில் இவர்களது திருமணம் முடிவுபெற்றது. பின்னர் 3 ஜூன் 2019 அன்று கர்நாடகாவின் கொடுகு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சாஜன் சின்னப்பாவை மணந்துள்ளார்.[4]
திரைப்படத்துறை
கன்னட நடிகரான, சங்கர் நாக் உடன் இணைந்து சிபிஐ ஷங்கர் (1989) என்ற கன்னடத் திரைப்படத்தில் முதன்முறையாக நடிகையாக அறிமுகமான இவர், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலா ஹோம்பலே (1989), டாக்டர் கிருஷ்ணா (1989) சாந்தா சிசுனாலா ஷரீஃபா (1990) மற்றும் நம்மூரா ஹம்மேரா (1990) என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு புது பாட்டு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.[5] தொடர்ந்து, பெரும்புள்ளி (1991), மாநகர காவல் (1991), குறும்புக்காரன் (1991), உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992), மேட்டுப்பட்டி மிராசு (1994) மற்றும் முதல் உதயம் (1995) போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பாரேப் என்ற 1996 ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார்.சட்டவிரோத நுழைவு என்ற பெயரில் 1992 ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான திரைப்படத்தின் தழுவலாகும். 1999 ம் ஆண்டில் வெளியான ஆ அப் லாட் சாலனில் இந்திய-அமெரிக்க சமூகவாதியாக நடித்துள்ளார்.[6]
மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2007க்கான நடுவர்கள் குழுவில் ரங்கநாத்தும் இருந்துள்ளார்.. இவர் கலர்ஸ் கன்னடத்தில் ஒளிபரப்பாகும் கன்னட யதார்த்த நிகழ்ச்சியான தகதிமிதாவின் நடுவராக இருந்துள்ளார்.[7]
முழு மூச்சாக கன்னட படங்களில் மட்டுமே நடிக்கத்தொடங்கிய சுமன், ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடுமையான பத்திரிகையாளர் வேடத்தில், நடிகர் அஜித்குமார் நடித்த, ஆரம்பம் (2013).
திரைப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.[8]
பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ள சுமன், நீர்நிலை (2016) மற்றும் கவனுதாரி (2019) போன்ற பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.[9][10]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1989 | சி.பி.ஐ சங்கர் | ஆஷா | கன்னடம் | |
பாலா ஹோம்பலே | ||||
டாக்டர் கிருஷ்ணா | சுவாதி | |||
1990 | சாந்த ஷிஷுனால ஷரீஃபா | ஷரீபாவின் மனைவி | ||
நம்மூரா ஹம்மேரா | ராதா | |||
20வது சதாப்தம் | தெலுங்கு | |||
கெம்பு சூர்யா | திரிவேணி | கன்னடம் | ||
புதுப்பாட்டு | ராஜி | தமிழ் | ||
பத்மாவதி கல்யாணம் | பத்மாவதி | தெலுங்கு | ||
1991 | பெரும்புள்ளி | தமிழ் | ||
மாநகர காவல் | வித்யா | |||
குறும்புக்காரன் | ||||
1992 | உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் | ப்ரியா | ||
எல்லாரும் சொல்லனு | அர்ச்சனா | மலையாளம் | ||
1994 | மேட்டுப்பட்டி மிராசு | ராதா | தமிழ் | |
1995 | முதல் உதயம் | கீதா | ||
உதவும் கரங்கள் | ||||
1996 | பாரேப் | சுமன் வர்மா | இந்தி | |
1997 | அன்கோன் மே தும் ஹோ | பூஜா | ||
1997 | அச்சேனா அதிதி | பூஜா | பெங்காலி | |
1998 | ஓ கந்தாசாரே நீவெஸ்து ஒலியவரு | ஜானகி | கன்னடம் | |
ஹட்யாரா | சுமன் | இந்தி | ||
1999 | ஆ அப் லாட் சாலன் | லவ்லீன் | ||
2000 | ஏக் ஸ்ட்ரீ | வைஷாலி | ||
பாதல் | ஐட்டம் டான்ஸ் | சிறப்பு தோற்றம் | ||
2001 | பாவா நச்சாடு | சுமா | தெலுங்கு | |
ஆகாஸ் | புஷ்பா | இந்தி | ||
குருக்ஷேத்திரம் | அவராகவே | சிறப்பு தோற்றம் | ||
ஹத் | இந்தி | |||
முஜே மேரி பிவி சே பச்சாவ் | அனுராதா | |||
ஹம் ஹோ கயே ஆப்கே | நிக்கி | |||
2002 | ஹம் தும்ஹாரே ஹை சனம் | நீட்டா | ||
2003 | மார்க்கெட் | லிசா | ||
பாக்பன் | கிரண் மல்கோத்ரா | |||
2004 | இஷ்க் கயாமத் | சுமன் | ||
2005 | சவுதா | இந்தி | ||
2006 | தேவகி | தேவகி | ||
புரப் அவுர் பஸ்சிம் | போச்புரி | |||
2008 | பிந்தாஸ் | ஐட்டம் டான்ஸ் | கன்னடம் | 'கழு மாமா' பாடலில் சிறப்பு தோற்றம் |
மெஹபூபா | இந்தி | |||
புத்திவந்தா | மோனிகா | கன்னடம் | ||
கும்னாம் - மர்மம் | ரெமோன் | இந்தி | ||
மஸ்த் மஜா மாடி | அவராகவே | கன்னடம் | சிறப்பு தோற்றம் | |
2009 | அஞ்சாதிரு | |||
சவாரி | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது, - கன்னடம் | |||
கலாகார் | ||||
ஹரிகதே | ||||
ஐபிசி பிரிவு 300 | ஷீலா | |||
2012 | சித்தலிங்கு | ஆண்டாளம்மா | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்[11] | |
ஷிவா | அவராகவே | சிறப்பு தோற்றம் | ||
கத்தரி விர சுரசுந்தராங்கி | அவராகவே | சிறப்பு தோற்றம் | ||
2013 | சலசலப்பு | |||
மைனா | கீதா | |||
ஜிங்கிமரி | அவராகவே | சிறப்பு தோற்றம் | ||
ஆரம்பம் | ரம்யா | தமிழ் | ||
2016 | டீல் ராஜா | கன்னடம் | ||
நீர் டோஸ் | சாரதா மணி | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது, - கன்னடம் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான சீமா விருது பரிந்துரைக்கப்பட்டது, | ||
2018 | டபுள் என்ஜின் | சுமா | ||
2019 | காவலுதாரி | மாதுரி | ||
தண்டுபால்யா 4 | ||||
லேடீஸ் டைலர் | ||||
2021 | கபடதாரி | ரம்யா | தமிழ் | |
கபடதாரி | ரம்யா | தெலுங்கு | ||
2022 | உள்துறை அமைச்சர் | கன்னடம் | ||
பெட்ரோமாக்ஸ் | சுப்புலெட்சுமி | படப்பிடிப்பு முடிந்தது[12] | ||
தோத்தாபுரி1 | ஷகிலா பானு | படப்பிடிப்பு முடிந்தது[13] | ||
தோத்தாபுரி 2 | ஷகிலா பானு | படப்பிடிப்பு முடிந்தது[14] |
மேற்கோள்கள்
- ↑ "Suman ties the knot with businessman Sajan". The Times of India. 6 June 2019.
- ↑ "Gorgeous Suman Ranganath Reveals her Remuneration for #Kavaludaari on #Scrapbook with RJ Nethra". YouTube. Archived from the original on 22 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Best of Bollywood, South Cinema, Celebrity Photos & Videos | MSN India". MSN. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ "Suman ties the knot with businessman Sajan". The Times of India. 6 June 2019.
- ↑ "Pudhu Pattu (1990) - Review, Star Cast, News, Photos".
- ↑ "Now Suman Ranganathan gets into body-double trouble". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Suman Ranganath back on small screen to judge dance reality show". 29 January 2019. http://www.newindianexpress.com.
- ↑ "'Aarambam' is Suman Ranganathan's comeback vehicle - Tamil News". 26 October 2013.
- ↑ "Neer Dose: Serving up a heavy dose of misogyny". https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/Neer-Dose-Serving-up-a-heavy-dose-of-misogyny/article14626496.ece.
- ↑ "'Kavaludaari' review: A brilliant neo-noir film that keeps you hooked to your seat". 12 April 2019.
- ↑ "And the Filmfare Award for Kannada goes to... - Times of India". The Times of India.
- ↑ "Suman Ranganath deglams for a cameo in Petromax - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
- ↑ Anjanappa, Bharath (23 January 2022). "'Thotapuri' first glimpse tomorrow". thehansindia.com (in English). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
- ↑ "Dhananjaya and Suman Ranganath are shooting in Alleppey - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.