பட்டுக்கோட்டை பெரியப்பா

பட்டுக்கோட்டை பெரியப்பா (Pattukottai Periyappa) 1994 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, மோகினி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3][4]

பட்டுக்கோட்டை பெரியப்பா
இயக்கம்விசு
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்
இசைதேவா
நடிப்புஆனந்த் பாபு
மோகினி
டெல்லி கணேஷ்
இலட்சுமி
விசு
எஸ். எஸ். சந்திரன்
குமரிமுத்து
விவேக்
டி. வி. வரதராஜன்
வினோதினி
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ்
குமார்
வெளியீடுசெப்டம்பர் 23, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை

குடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வரதட்சிணைப் பிரச்சினையால் நின்று போகிறது ஒரு பெண்ணின் திருமணம். காரணம் மாமியாரின் பேராசை. இதை அறியும் மணமகனின் பெரியப்பா பட்டுக்கோட்டையில் இருந்து வந்து அங்கேயே தங்குகிறார். பணத்தை விட உறவுகளும் பாசமும் முக்கியம் என்பதை அந்த மாமியாருக்குப் புரிய வைக்கிறார். நின்று போன திருமணம் நடந்ததா இல்லையா என்று செல்லும் கதை.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் காளிதாசன் எழுதியுள்ளார்.[5]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 "கல்யாண மாலை" மனோ காளிதாசன் 05:07
2 "கண்ணே கண்ணே வா" எம். சி. சபேசன், எம். என். ரங்கபாபு, டி. எஸ். ராமச்சந்திரன் 03:54
3 "பாலக்காட்டு பைத்தியக்காரனே" கே. எஸ். சித்ரா 04:20
4 "பதினெட்டு வயதினிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், புவனா வெங்கடேஷ், ஜோஜோ 05:15
5 "பெட்டிக்குள்ள யாருமில்லை" கே. எஸ். சித்ரா 03:50
6 "வாழ்க்கையே" லதிகா, கே. ஜே. சீமான் 01:06

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pattukottai%20periappa பரணிடப்பட்டது 2010-04-13 at the வந்தவழி இயந்திரம்