நீதியின் நிழல்
நீதியின் நிழல் (Needhiyin Nizhal) என்பது 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். பாரதி - வாசு இயக்கிய இப்படத்தை சாந்தி நாராயணசாமி தயாரித்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன், ராதா, பிரபு, எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு சங்கர் – கணேஷ் இசையமைத்தனர்.[2]
நீதியின் நிழல் Needhiyin Nizhal | |
---|---|
இயக்கம் | பாரதி-வாசு |
தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி |
கதை | வி. சி. குகநாதன் |
திரைக்கதை | பாரதி-வாசு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் இராதா பிரபு மா. நா. நம்பியார் |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேஸ்வர ராவ் |
விநியோகம் | சிவாஜி புரொடக்சன்சு |
வெளியீடு | ஏப்ரல் 13, 1985[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
பொது மக்கள் மத்தியில், கிருஷ்ண பிரசாத் ( எம். என். நம்பியார் ) என்பவர் நற்பணிகள் செய்யும் ஒரு பணக்காரராக அறியப்படுகிறார். இவர் ஏழைகளுக்கு திருமணங்களை செய்வித்து அவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைகளைப் பெற்றுத்தருபவராகவும் அறியப்படுகிறார். இது உண்மையில், மணப்பெண்களை பாலியல் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஒரு தந்திரமாகும். அவரது கூட்டாளிகளான எத்திராஜ் ( வினு சக்ரவர்த்தி ), நாகராஜ் ( சத்யராஜ் ), சுகுமார் ( சிவசந்திரன் ) ஆகியோருடன் சேர்ந்து, அவர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு சட்டத்தில் இருந்து தப்பி வருகிறார். டிஐஜி நித்யானந்தம் கிருஷ்ண பிரசாத்தை பிடிக்க முயல்கிறார் அப்போது பலமாக குண்டு காயங்கள் பட்டு நித்தியானந்தம் சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்படுகிறார். நித்யானந்தத்தின் மூத்த மகன் விஜய் ( பிரபு ), அப்போதுதான் கல்லூரியில் படித்துவந்தவர். அவரது காதலி சொப்னா ( ராதா ) திடீரென அவனுடைய காதலை முறித்துக் கொண்டதால், மன வேதனையுடன் உள்ளார். எப்போதும் நியாயமான விசயத்துக்காக சண்டை போடுவாராக விஜய் உள்ளார். அவரது தந்தை காயமடைந்த பிறகு அவர் காவல்துறையில் சேர உத்வேகம் பெறுகிறார். கிருஷ்ண பிரசாத்தின் குழுவை பிடிக்க விஜய் புறப்படுகிறார். தன் இலக்கை நோக்கி படிப்படியாக செல்கிறார். இந்த போராட்டத்தில் அவர் தன் நண்பர் மோகன் ( சந்திரசேகர் ), அவரது பெற்றோர், தம்பி திலீப் போன்றோரை இழக்கிறார். அவரும் மோசமாக தாக்கப்படுகிறார். மேலும் விஜய் இறந்ததாகவும் கருதப்படுகிறது. விஜய் ரகசியமாக சென்று தன் எதிரிகளை பிடிக்க ஒரு நல் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார். இந்த பணியின்போது, அவர் தனது கடந்த காலம் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் அறிந்துகொள்கிறார்.
நடிப்பு
- சிவாஜி கணேசன் -டிஐஜி நித்யானந்தமாக
- ராதா -சொப்ணாவாக
- பிரபு -விஜயாக
- எம். என் நம்பியார் -கிருஷ்ண பிரசாத்தாக [3]
- மேஜர் சுந்தரராஜன் -காவல்துறை அதிகாரியாக
- சந்திரசேகர் -மோகனாக
- சத்யராஜ் -நாகராஜாக
- லூசு மோகன் -பாயாக
- வினு சக்ரவர்த்தி -எத்திராஜாக
- ஸ்ரீவித்யா -விஜயின் தாயாக
- நிழல்கள் ரவி -ஜேம்சாக
- சிவசந்திரன் -சுகுமாராக
- ஒய். ஜி. மகேந்திரன் உன்னியாக
இசை
இப்படத்திற்கு சங்கர் -கணேஷ் இசையமைக்க பாடல் வரிகளை வாலி எழுதியுள்ளார்.[4]
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "எந்த பையன் என்னை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "குத்துவிளக்கோ ஒன்று" | எஸ். பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் |
3 | "நீ இருந்தால்தான் நிம்மதி" | |
4 | "நையாண்டி மேளத்த கேளு" | மலேசியா வாசுதேவன், விவேக் சாரதி |
5 | "மந்தாரப்பூவே மஞ்சள் நிலாவே" | எஸ். பி பாலசுபிரமணியம், பி. சுசீலா |
6 | "வாடியம்மா வாடியம்மா" | எஸ். பி பாலசுப்ரமணியம், விவேக் சாரதி |
குறிப்புகள்
- ↑ "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in ta). Seithi Saral. 30 September 2020 இம் மூலத்தில் இருந்து 29 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210529050553/https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/.
- ↑ "251-260" இம் மூலத்தில் இருந்து 28 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210628052232/http://nadigarthilagam.com/filmographyp26.htm.
- ↑ "நடிகர்கள் போற்றும் நல்லாசான் எம்.என்.நம்பியார்...!". தினத்தந்தி. 7 March 2019. https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/03/07103358/Nallaasaan-MN-Nambiar-to-praise-the-actors.vpf.
- ↑ "Neethiyin Nizhal". http://tamilsongslyrics123.com/listlyrics/39965.