தில்லுக்கு துட்டு
தில்லுக்கு துட்டு (Dhilluku Dhuddu) 2016 ஆம் ஆண்டு சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் நடிப்பில், ராம்பாலா இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், தமன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[2] இப்படத்தின் வணிகரீதியான வெற்றியைத்[3][4][5] தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது.[6]
தில்லுக்கு துட்டு | |
---|---|
இயக்கம் | ராம்பாலா |
தயாரிப்பு | என். ராமசாமி |
இசை | பாடல்கள் தமன் பின்னணி இசை கார்த்திக் ராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | தீபக் குமார் பதி |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
கலையகம் | ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் |
விநியோகம் | மிஷ்ரி என்டர்ப்ரைசஸ் |
வெளியீடு | 7 சூலை 2016 |
ஓட்டம் | 133 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | 12 கோடி |
கதைச்சுருக்கம்
குமார் (சந்தானம்) மற்றும் காஜல் (அஞ்சல் சிங்) பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். காஜலின் தந்தை (சௌரப் சுக்லா) குமாரின் மாமா மோகன் (கருணாஸ்) வாங்கிய வாகனக்கடனுக்கான தவணையை செலுத்தாததால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்கிறார். இதனால் காஜலின் வீட்டுக்குள் திருடர்களைப் போல் நுழையும் குமார் மற்றும் மோகனைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கிறாள் காஜல். மறுநாள் குமாரின் தந்தை (ஆனந்த்ராஜ்) காஜலின் தந்தையை மிரட்டுவதால் அவர்கள் மீது கொடுத்த புகாரைத் திரும்பப்பெறுகிறார். விடுதலையாகும் இருவரும் தங்களை சிறையிலடைக்கக் காரணமான காஜலையும் அவள் தந்தையையும் பழிவாங்க காஜலைக் கடத்துகிறார்கள். குமாரைத் தன் பள்ளித்தோழன் என்று அறிந்துகொள்ளும் காஜல் அவனைக் காதலிக்கிறாள். குமாரும் காஜலைக் காதலிக்கிறான்.
இவர்களின் காதலைப் பற்றி அறியும் காஜலின் தந்தை அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார். அதை தடுத்து நிறுத்துகிறான் குமார். இதனால் குமாரைக் கொல்ல ஸ்கெட்ச் மணியை (இராசேந்திரன்) ஏற்பாடு செய்கிறார். சிவன்கொண்டமலையில் உள்ள மர்மங்கள் நிறைந்த மாளிகைக்கு குமாரையும் அவர்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று அனைவரையும் கொன்றுவிட்டு, அவர்களை அங்குள்ள பேய் கொன்றுவிட்டதாக மற்றவர்களை எளிதாக நம்ப வைக்கலாம் என்று மணி யோசனை கூறுகிறான். அந்த யோசனையை ஏற்று குமார் - காஜல் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதாக பொய் சொல்லி குமாரையும் அவன் குடும்பத்தினரையும் சிவன்கோண்டமலை மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார் காஜலின் தந்தை. அவர்களின் வேலைக்காரர்களாக மணியும் அவனது ஆட்களும் வருகின்றனர். தன்னைக் கொல்வதற்கு மணி மற்றும் ஆட்கள் முயற்சி செய்வதை அறிகிறான் குமார். அந்த மாளிகையில் இருக்கும் பேய் காஜலின் உடலுக்குள் நுழைகிறது. குமார் அனைத்துப் பிரச்சனைகளிலும் எப்படி வெற்றி பெற்றான் என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- சந்தானம் - குமார்
- அஞ்சல் சிங் (சனாயா) - காஜல்
- கருணாஸ் - மோகன்
- ஆனந்த்ராஜ் - குமாரின் தந்தை
- சௌரப் சுக்லா - காஜலின் தந்தை
- இராசேந்திரன் - ஸ்கெட்ச் மணி
- சாவி சர்மா
- டி. எம். கார்த்திக்
- கணேஷ்கர்
- மயில்சாமி
- சிங்கமுத்து
- லொள்ளு சபா மனோகர்
- பேபி ஸ்வாக்சா
- லொள்ளு சபா மாறன் - ஆசிரியர்
- அசோக் ராஜா (நடன இயக்குனர்) - சிறப்புத் தோற்றம்
இசை
படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் தமன். பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜா.
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "தில்லுக்கு துட்டுன்னுதான்" | தீபக், எம்.எம். மோனிஷா | 03:32 | |||||||
2. | "காணாமல் போன காதல்" | நிவாஸ், சஞ்சனா கல்மஞ்சே | 03:17 | |||||||
3. | "சிவன் மகன்டா" | சாய்சரண், தீபக், நிவாஸ், சோழர் சாய், நவீன், சந்தியா | 04:14 | |||||||
மொத்த நீளம்: |
11:03 |
வசூல்
படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ. 12 கோடி வசூல் செய்தது.[7]
மேற்கோள்கள்
- ↑ "தில்லுக்கு துட்டு". http://www.bbfc.co.uk/releases/dhilluku-dhuddu-film.
- ↑ "தில்லுக்குத்துட்டு". http://www.bbfc.co.uk/releases/dhilluku-dhuddu-film.
- ↑ "வெற்றி". http://www.ibtimes.co.in/dhilluku-dhuddu-box-office-collection-santhanams-film-grosses-close-rs-13-crore-686370.
- ↑ "வெற்றி". http://www.ibtimes.co.in/box-office-collection-santhanams-dhilluku-dhuddu-salman-khans-sultan-strike-gold-chennai-686199.
- ↑ "வெற்றி" இம் மூலத்தில் இருந்து 2017-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170810212157/https://timesalert.com/dhilluku-dhuddu-collections/19063/.
- ↑ "தில்லுக்கு துட்டு 2". https://cinema.dinamalar.com/movie-review/2578/Dhilluku-Dhuddu-2/.
- ↑ "வசூல்". http://indiatoday.intoday.in/story/dhilluku-dhuddu-box-office-collection-santhanam-opening-weekend-rambala/1/712317.html.