தில்லுக்கு துட்டு 2
தில்லுக்கு துட்டு 2 | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ராம்பாலா |
தயாரிப்பு | சந்தானம் |
கதை | ராம்பாலா |
இசை | சபீர் |
நடிப்பு | சந்தானம் ஸ்ரீதா சிவதாஸ் தீப்தி இராசேந்திரன் பிபின் ஊர்வசி |
ஒளிப்பதிவு | தீபக் குமார் பதி |
படத்தொகுப்பு | மாதவன் மாது |
கலையகம் | ஹேண்ட்மேட் ஃபில்ம்ஸ் |
விநியோகம் | டிரைடென்ட் ஆர்ட்ஸ் |
வெளியீடு | 7 பெப்ரவரி 2019 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தில்லுக்கு துட்டு 2(Dhilluku Dhuddu 2)2019 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எழுதி இயக்கியவர் ராம்பாலா ஆவார். இத்திரைப்படத்தில் சந்தானம், ஸ்ரீதா சிவதாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும் இராசேந்திரன் மற்றும் ஊர்வசி துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.[1] இத்திரைப்படத்திற்கு சபீர் பின்னணி இசை அமைத்துள்ளார்.[2] இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுற்றது.[3] The film released on 7 February 2019.[4] பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படத்தின் இந்தி மொழிமாற்ற உரிமை கோல்ட்டைம்ஸ் நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளது.
நடிப்பு
- விஜியாக சந்தானம்
- யட்சியாக தீப்தி [5]
- மாயாவாக ஸ்ரீதா சிவதாஸ்
- விஜியின் மாமாவாக இராசேந்திரன்
- பிபின்[6]
- சக்ர மகாதேவியாக ஊர்வசி
- "மைக்" மாறன் ஆக லொள்ளு சபா மாறன்
வணிகம்
இத்திரைப்படத்தின் முதல் விளம்பர சுவரொட்டி 24 அக்டோபர் 2018.[7][8] இத்திரைப்படத்தின் முதல் ஆர்வத்தைத் தூண்டும் காட்சித்தொகுப்பு 29 அக்டோபர் 2018 அன்று வெளியிடப்பட்டது.[9][10] இத்தகைய இரண்டாவது காட்சித்தொகுப்பு 14 சனவரி 2019 பொங்கல் திருநாளையொட்டி வெளியிடப்பட்டது. இரண்டுமே இரசிகர்களிடமிருந்து நேர்மறையா விமர்சனங்களைப் பெற்றன[11]
வெளியீடு
இத்திரைப்படம் ஒருவரிக் கதை மற்றும் நகைச்சுவைப் பகுதி ஆகியவற்றின் சிறப்பிற்காக மிகவும் நேர்மறையான விமர்சனங்களைச் சந்தித்ததோடு வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Dhilluku Dhuddu 2 Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes". m.timesofindia.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
- ↑ "Dhilluku Dhuddu 2 (2019) | Dhilluku Dhuddu 2 Tamil Movie | Dhilluku Dhuddu 2 Review, Cast & Crew, Release Date, Photos, Videos". FilmiBeat (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
- ↑ "'Dhilluku Dhuddu 2' to be more than a horror film". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
- ↑ "'Dhilluku Dhuddu 2': The release date of the Santhanam starrer unveiled - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
- ↑ "Breaking: Santhanam's Dhilluku Dhuddu 2 heroine revealed!". IMDb (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ RajKumar (2018-10-29). "Dhilluku Dhuddu 2 Tamil Movie (2018) | Cast | Songs | Teaser | Trailer | Release Date". News Bugz. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
- ↑ "Dhilluku Dhuddu 2 Movie HD Poster Wallpaper & First Look Free on Coming Trailer.com". Coming Trailer. Archived from the original on 2018-12-15. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.
- ↑ Arul. "Santhanam's Dhilluku Dhuddu 2 first look poster is out - Photos". International Business Times, India Edition. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.
- ↑ "Dhilluku Dhuddu 2 official Teaser". IMDb (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Santhanam's Dhilluku Dhuddu 2 first look poster, teaser release date". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.
- ↑ "'Dhilluku Dhuddu 2': Makers unveil the second teaser of the Santhanam starrer - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.