தடயம் (Thadayam) என்பது ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய 1997 ஆம் ஆண்டய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயசாந்தி, ராம்கி, இந்திரஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோதி பிரசாத் சீனிவாசன் தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துள்ளார். இப்படம் 28, நவம்பர், 1997 அன்று வெளியிடப்பட்டது.[1][2] இப்படம் தெலுங்கு திரைப்படமான கேங் லீடரைத் தழுவியது .

தடயம்
இயக்கம்ரமேஷ் பாலகிருஷ்ணன்
தயாரிப்புஜோதி பிரசாத்
கதைரமேஷ் பாலகிருஷ்ணன்
லியாகத் அலி கான் (உரையாடல்)
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். வி. ராஜகீஷன் சாகர்
படத்தொகுப்புபானர்ஜி
ராம்பாபு
கலையகம்மாருதி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுநவம்பர் 28, 1997 (1997-11-28)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

சந்திரசேகர் ( ராம்கி ), அல்லது சந்திரூ, ஒரு வேலையில்லா பட்டதாரி. இவர் தனது நண்பர் ஜீவாவுடன் வசிக்கிறார். இவர் தன் வாழ்கைக்கான சம்பாதிப்பதற்காக அடிக்கடி சிறைக்குச் செல்கிறார். அச்சமற்ற குற்றவியல் வழக்கறிஞரான ஜோதி ( விஜயசாந்தி ) அநீதிக்கு எதிராக போராடுகிறார். சந்திருவை தேவி ( இந்திரஜா ) காதலிக்கிறாள், ஜோதி சந்திருவை காதலிக்கிறாள்.

நடிகர்கள்

இசை

படத்தறிக்ன இசையை இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டுள்ளார். 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், வாலி, பொன்னியன் செல்வன், வாசன் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.[3][4]

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 'காதலனே' சுவர்ணலதா வாசன் 5:03
2 'லக் லக்' வதிவேலு வாலி 5:09
3 'ஓ பூர்ணிமா' பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 4:59
4 'ஓ தேவதையே' பி. உன்னி கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் 5:22
5 'வெள்ளி வெள்ளி' மனோ, அம்ருதா வாலி 5:05

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தடயம்&oldid=33809" இருந்து மீள்விக்கப்பட்டது