செங்காத்து

செங்காத்து (Sengathu) 2006 ஆம் ஆண்டு நிஷாந்த் மற்றும் பயல் நடிப்பில், இந்துநாதன் இயக்கத்தில், எஸ். ஏ. ஜலால் தயாரிப்பில், அரபின் யூசுப் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2] குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான தமிழக அரசின் மானியம் ரூ. 7 இலட்சம் இப்படத்திற்கு வழங்கப்பட்டது.[3][4]

செங்காத்து
இயக்கம்இந்துநாதன்
தயாரிப்புஎஸ்.ஏ.ஜலால்
கதைஇந்துநாதன்
இசைஅரபின் யூசுப்
நடிப்பு
ஒளிப்பதிவுமுத்ரா
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்டி.கே.எம்.பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 6, 2006 (2006-10-06)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

முகில் (நிஷாந்த்) விடுமுறைக்காக ராணுவத்தில் இருந்து தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணான இந்துவைச் (பயல்) சந்திக்கிறான். இந்துவை மானபங்கப்படுத்த முயற்சிப்பவர்களிடம் இருந்து அவளைக் காப்பாற்றுகிறான். இந்து மனநலம் பாதிக்கப்பட்டதாக நடிப்பதாக சந்தேகம் கொள்ளும் முகில், அதைக் கண்டறிவதற்காக அவளை முத்தமிடுகிறான். இதனால் அதிர்ச்சியடையும் இந்து கோபம் கொண்டு அவனைத் திட்டுகிறாள். அவள் நடிக்கிறாள் என்பதை உறுதிசெய்யும் முகில் தன் செயலுக்காக அவளிடம் மன்னிப்பு கேட்பதுடன் அவளைக் காதலிப்பதாகவும் கூறுகிறான். ஆனால் தொடர்ந்து மனநலம் பாதித்ததுபோல் நடிக்கும் இந்து அவன் காதலை ஏற்க மறுக்கிறாள். மறுநாள் இந்து நடிப்பதற்கானக் காரணத்தைத் தன்னிடம் தெரிவித்து தன் காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறுகிறான் முகில். இதனால் அவன் காதலை ஏற்கும் இந்து தான் நடிப்பதற்கானக் காரணத்தைக் கூறுகிறாள்.

தேவதாசி குலத்தைச் சேர்ந்த இந்து பிறந்தவுடன் அவள் தாய் இறக்கிறாள். அக்கிராமத்தைச் சேர்ந்த பிராமணர் குடும்பத்தால் வளர்க்கப்படும் இந்து, குறிப்பிட்ட வயதில் அவள் குலவழக்கப்படி தேவதாசியாகும் சூழலுக்கு ஆளாகிறாள். அவளை வளர்த்த சீனு (ஸ்ரீனிவாச குருக்கள்) அதை தடுக்க முயல்கிறார். அவரால் அதைத் தடுக்க இயலாததால் தற்கொலை செய்துகொள்கிறார். தேவதாசியாக மாற விரும்பாத இந்து தன்னை தந்தையாக இருந்து வளர்த்தவர் இறந்ததால், அதிர்ச்சியடைந்து மனநிலை பாதிக்கப்பட்டதைப்போல் நடிக்கத் துவங்குகிறாள். அவளுடைய கிராமத்திலிருந்து இந்த கிராமத்திற்கு வருகிறாள்.

அந்த கிராமத்து மக்கள் இந்துவை அவளுடைய கிராமத்திற்கே அனுப்புகின்றனர். அங்கு செல்லும் இந்து தேவதாசியாக மாறினாளா? முகில் - இந்து காதல் நிறைவேறியதா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

  • நிஷாந்த் - முகில்
  • பயல் - இந்து
  • இளவரசு - எதுக்கு
  • கோவை தேசிங்கு - மலையாண்டி
  • குயிலி - செல்லம்மா
  • ஸ்ரீனிவாச குருக்கள் - சீனு
  • லலிதா மணி - இந்துவின் பாட்டி
  • மாஸ்டர் அஷ்வின் - சுரேஷ்
  • மதுரை குமரேசன் - வீராசாமி
  • ஏ. கே. நடராஜன் - நாட்டாமை
  • கோவை செந்தில்
  • சிட்டிசன் மணி
  • சின்னராசு
  • ரிஷா

இசை

படத்தின் இசையமைப்பாளர் அரபின் யூசுப். பாடலாசிரியர்கள் சினேகன் மற்றும் கபிலன்.[5][6]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஏ படமா மாணிக்க விநாயகம், ரோஷினி 4:35
2 காத்து வீசுதடா திப்பு, தேனீ குஞ்சரம்மாள் 5:57
3 கூந்தல் பறவை பிரசன்னா, சைந்தவி 4:55
4 இசை மட்டும் - 5:29
5 தீ தீ ஹரிஷ் ராகவேந்திரா 5:29
6 உலகம் ஸ்ரீவர்தினி 5:11

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=செங்காத்து&oldid=33537" இருந்து மீள்விக்கப்பட்டது