சின்ன ஜமீன்
சின்ன ஜமீன் (Chinna Jameen) 1993 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர். பி. விஸ்வம் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தான் நடிகை வினிதா அறிமுகமானார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைப்பில் 13 நவம்பர் 1993ல் வெளிவந்தது.[1][2][3]
சின்ன ஜமீன் | |
---|---|
ஒலிநாடா அட்டை | |
இயக்கம் | ராஜ்கபூர் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | ராஜ்கபூர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சுகன்யா |
ஒளிப்பதிவு | பாலமுருகன் |
படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
விநியோகம் | கே. பி. பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 13, 1993 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராசய்யா கார்த்திக் ஒரு வெகுளிதனமான விளையாட்டு பிள்ளையாகவும் உலகம் தெறியாத மனிதனாக அவரது தாய் மாமாவான ரத்னவேல் ஆர்.பி.விஸ்வம் அவர்களால் வளர்க்கபடுகிறார் அதை சரி செய்யும் விதமாக அந்த ஊரின் கிராம அதிகாரியாக சேரும் சத்யா சுகன்யா ராசய்யாவை காதலித்து ஒரு சிறந்த தெளிவான மனிதராக மாற்றுவதாக கதை அம்சம் அமைந்த திரைப்படமாக நகர்கிறது.
நடிகர்கள்
- கார்த்திக் - ராசய்யா/சின்ன ஜமீன்தார்
- சுகன்யா - சத்யா
- வினிதா - ஜோதி
- ராஜேஷ் - ராஜமாணிக்கம்
- ஆர்.பி.விஸ்வம் - ரத்னவேல்
- உதய பிரகாஷ் - சேதுபதி
- சபிதா ஆனந்த் - அம்சவேணி
- காந்திமதி - ஆத்தா
- கவுண்டமணி - தலையாரி மாமா
- செந்தில் - வெள்ளசாமி
- கிங் காங் - எலி
- தளபதி தினேஷ் - சண்டைகாரர்
- கோவை செந்தில் - கிராம ஆட்கள்
- தக்காளி - ஜோதி வயிற்றில் விளையாடுதல்
- உலக்கை - சத்யா இடுப்பு சுளுக்கை எடுத்தல்
இசை
சின்ன ஜமீன் | |
---|---|
| |
வெளியீடு | 1993 |
ஒலிப்பதிவு | 1993 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
நீளம் | 29:14 |
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் அடியோ |
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் 1993ல் வெளிவந்தன.[4]
எண் | பாடல் | பாடகர்கள் | காலம் |
---|---|---|---|
1 | "மானமுள்ள மனுசங்க" | மனோ | 4:41 |
2 | "நான் யாரு" | இளையராஜா | 4:51 |
3 | "வண்ணத்து பூச்சி" | சித்ரா | 0:50 |
4 | "ஒரு மந்தாரப்பூ" | மனோ, சித்ரா | 4:31 |
5 | "ஒனப்பு தட்டு" | இளையராஜா, சுவர்ணலதா | 4:52 |
6 | "அடி வண்ணாத்தி" | மனோ, சுவா்ணலதா | 4:59 |
7 | "யார் சுமந்து" | இளையராஜா | 1:27 |
மேற்கோள்கள்
- ↑ "Find Tamil Movie Chinna Jameen". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.
- ↑ "Chinna Jamin". popcorn.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.
- ↑ "Filmography of chinna jamin". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Chinna Jamin". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.