சத்ரியன் (2017 திரைப்படம்)

சத்ரியன்(Sathriyan) என்பது 2017 ஆம் ஆண்டில் இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் என்பவரின் இயக்கத்தில் வெளியான அதிரடி சண்டைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தியாகசரவணன் மற்றும் செல்வி தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, விக்ரம் பிரபு கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கவின், ஐஸ்வர்யா தத்தா, ரியோ ராஜ் சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் யு என்ற சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு ஜூன் 9, 2017ஆம் ஆண்டில் வெளியானது. இந்த திரைப்படம் கத்தி பிடித்த குணா என்ற ரவுடிக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது.[1][2]

சத்ரியன்
இயக்கம்எஸ். ஆர். பிரபாகரன்
தயாரிப்பு
  • தியாகசரவணன்
  • செல்வி தியாகராஜன்
கதைஎஸ். ஆர். பிரபாகரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுசிவகுமார் விஜயன்
படத்தொகுப்புஎம்.வெங்கட்
கலையகம்சத்ய ஜோதி பிலிம்ஸ்
விநியோகம்சாட்டை கார்த்திக்
வெளியீடு9 ஜூன் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு6 கோடி
மொத்த வருவாய்5 கோடி

கதை சுருக்கம்

திருச்சியில் போக்கிரியாக கொடிக்கட்டி பறப்பவர் நிரஞ்சனாவின் (மஞ்சிமா மோகன்) அப்பா சமுத்திரம். தன் தந்தை தான் அந்த ஊரில் பெரும் தாதா என்பது தெரியாமலே வளர்கிறார் கதாநாயகி. வீட்டில் மகள் மற்றும் மகனுக்கு அன்பான தந்தையாக சமுத்திரம் இருக்கிறார்.

மஞ்சிமாவின் அப்பா சமுத்திரம் அடிதடியால் திருச்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆரம்பக்காட்சியிலேயே அவரை ஒரு குழு கொல்ல திருச்சி வேறு ஒருவர் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது. ஆதரவு இல்லாமல் இருக்கும் நிரஞ்சனாவை பலரும் கிண்டல் செய்ய, அவருக்கு துணையாக குணா (விக்ரம் பிரபு) வர, இவர்களுக்குள் காதல் வருகின்றது.

ஒரு கட்டத்தில் நிரஞ்சனாவிற்காக இந்த அடிதடி, வெட்டுக்குத்து எதுவும் வேண்டாம் என குணா ஒதுங்க, இவர்களது காதல் நிரஞ்சனாவின் வீட்டுக்கு தெரிய வர, எதிர்ப்புகள் கிளம்புகின்றன. காதலை மறந்து விடுமாறு நிரஞ்சனா குணாவிற்கு அறிவுறுத்துகிறார். ஆனால் குணா அவரது பேச்சை கேட்க மறுக்கிறார். குணாவை கொல்ல திட்டமிடுகின்றனர் அதன் பின் அவரை சுற்றி நிற்கும் பிரச்சனையை எப்படி முறியடித்தார் என்பதே மீதிக்கதை.[3]

நடிகர்கள்

பங்களிப்புக்கள்

இந்த திரைப்படத்தை எஸ். ஆர். பிரபாகரன் என்பவர் கதை எழுதி இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டீ.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ச்சூன்தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு 4 பாடல்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பவர் இசை அமைத்துள்ளார்.

  • இயக்குநர் - எஸ்.ஆர். பிரபாகரன்
  • தயாரிப்பாளர் - டீ.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜூன்தியாகராஜன்
  • எழுத்து - எஸ்.ஆர். பிரபாகரன்
  • இசை - யுவன் சங்கர் ராஜா
  • தயாரிப்பு நிறுவனம் - சத்ய ஜோதி பிலிம்ஸ்
  • வெளிவந்த தேதி- ஒன்பது ஜூன் 2017
  • நாடு - இந்தியா
  • மொழி - தமிழ்

தயாரிப்பு

சத்ய சோதி பிலிம்சு தயாரிப்பு நிறுவனம் 2015 ஆம் ஆண்டு இயக்குநர் எசு.ஆர். பிரபாகரன் என்பவருடன் எழுத்துப்பூர்வமாக ஒப்பமிடப்பட்டது. அப்போதே முன்னணி கதாநாயகனாக விக்ரம் பிரபு உடன் ஒப்பமிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவுக்கு சிவகுமார் விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். டிசம்பர் 2015 ஆம் ஆண்டில் நடிகை மஞ்சிமா மோகன் என்பவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுவே இவரின் முதல் தமிழ் படம் ஆகும். சின்னத்திரை நடிகர்கள் கவின் மற்றும் ரியோ ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஐஸ்வர்யா தத்தா என்பவர் இரண்டாம் கதாநாயகியாக நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்தார்.

முதலில் 2016 ஜூனில் இப்படத்திற்கு முடிசூடா மன்னன் என்று பெயரிடப்பட்டது. பின்னர் படத்தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு சத்ரியன் என்று பெயர் சூட்டப்பட்டது.

பாடல்கள்

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பவர் இசையமைத்துள்ளார். ஜனவரி 30, 2017ஆம் ஆண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன.+

சத்ரியன் பாடல்கள்
ஒலிப்பதிவு
வெளியீடு30 ஜனவரி 2017
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்12:49
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்யு 1 பதிவுகள்
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
தரமணி
(2016)
சத்ரியன் பாடல்கள்
(2017)
கடம்பன்
(2017)
Track listing
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சூடா ஒரு சூரியன்"  தீபக் 3:36
2. "பாறை மேலே"  யுவன் சங்கர் ராஜா 3:36
3. "மைனா ரெண்டு"  விஜய் யேசுதாஸ் 3:40
4. "சத்ரியன் ஆக்சன்..தீம்.."    1:57
மொத்த நீளம்:
12:49

மேற்கோள்கள்

  1. "சத்ரியன் திரை விமர்சனம்". www.cineulagam.com. 09 June 2017 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170612222830/http://www.cineulagam.com/films/05/100823. பார்த்த நாள்: 09 June 2017. 
  2. "Sathriyan: a recycled ‘rowdy’ film". www.thehindu.com. 09 June 2017. https://www.thehindu.com/entertainment/movies/sathriyan-review-a-recycled-rowdy-film/article18950927.ece. பார்த்த நாள்: 09 June 2017. 
  3. "Sathriyan Review". www.indiaglitz.com. 09 June 2017. https://www.indiaglitz.com/sathriyan-review-tamil-movie-20800. பார்த்த நாள்: 09 June 2017. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சத்ரியன்_(2017_திரைப்படம்)&oldid=33015" இருந்து மீள்விக்கப்பட்டது