கவின் (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கவின் ராஜ்
பிறப்பு22 சூன் 1990 (1990-06-22) (அகவை 34)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011-தற்போதுவரை

கவின் ராஜ் (பிறப்பு: 22 சூன் 1990) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் சரவணன் மீனாட்சி 2 (2012-2016) என்ற தொலைக்காட்சி தொடரிலும் மற்றும் பிக் பாஸ் தமிழ் 3 (2019) என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்றதன் மூலம் பரிசியமான நடிகர் ஆவார்.

தொழில் வாழ்க்கை

ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் மூலமாகவே குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். முறையாக நடிப்பைக் கற்றுக்கொள்ள, கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார்.[1] அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நடிகராக தன் வாழ்வைத் துவக்கினார். 2011 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் என்ற தொடரில் 'சிவா' என்னும் கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி (2012-2013), தாயுமானவன் (2013-2014), போன்ற தொடர்களில் நடித்தார்.

2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2 என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் என்பவர் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.

தொலைக்காட்சி

ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
2011-2012 கனா காணும் காலங்கள் சிவா விஜய் தொலைக்காட்சி
2013-2014 தாயுமானவன் விக்கி
2012-2013 சரவணன் மீனாட்சி முருகன்
2013-2016 சரவணன் மீனாட்சி 2 வேட்டையன் சிறந்த கதாநாயகனாக விஜய் தொலைக்காட்சி விருது
2015 வேட்டையாடு விளையாடு தொகுப்பாளர் விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சி விருதுகள்
2016 கிங் ஒப்பி டான்சர் 1
2017 விஜய் தொலைக்காட்சி விருதுகள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2012 பீட்சா சிறப்பு தோற்றம்
2015 இன்று நேற்று நாளை
2017 சத்ரியன் சந்திரன்
2019 நட்புன்னா என்னான்னு தெரியுமா சிவா
2023 டாடா மணிகண்டன் [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கவின்_(நடிகர்)&oldid=21620" இருந்து மீள்விக்கப்பட்டது