ரியோ ராஜ்
இரியோ ராஜ் | |
---|---|
Rio Raj in 2020 | |
பிறப்பு | 17 பெப்ரவரி 1989 ஈரோடு, தமிழ்நாடு |
பணி | நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2011–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஸ்ருதி ரியோ (2017- தற்போது வரை) |
விருதுகள் | சிறந்த தொகுப்பாளருக்கான விகடன் விருது சிறந்த தொகுப்பாளருக்கான கலாட்டா விருது |
இரியோ ராஜ் (17 பெப்ரவரி 1989) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நிகழ்படப் புரவலரும் திரைப்பட நடிகரும் ஆவார்.
வாழ்க்கை
இவர் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பெப்ரவரி 17, 1989 ஆம் ஆண்டு பிறந்தார். அங்கே அவர் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் சன் மியூசிக்கு அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராக பணியாற்றுகின்றார். 2017 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொலைக்காட்சி மற்றும் நடிப்புத்துறை
இவர் 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை' என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து சன் மியூசிக்கு தொலைக்காட்சி அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராக மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றி, பல முத்ன்மை நிகழ்ச்சிகளான சுடசுட சென்னை, கல்லூரிக்காலம், காபி டீ ஏரியா போன்றவற்றை நடத்தி வெற்றிகரமாக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூன்றாம்[1] பாகத்தில் கதாநாயகனாக நடித்தார்.
2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன்[2] தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொலைக்காட்சி
ஆண்டு | நிகழ்ச்சி | பாத்திரம் | அலைவரிசை | குறிப்பு |
---|---|---|---|---|
2011-2012 | கனா காணும் காலங்கள் கல்லுரி சாலை | பழனி | விஜய் தொலைக்காட்சி | |
2014-2016 | Kaloori Kalam | தொகுப்பாளர் | சன் மியூசிக்கு | |
சுட சுட சென்னை | ||||
யுவர் அன்டன்டின் ப்ளீஸ் | ||||
காபி டீ ஏரியா | ||||
பிரீ ஆஹ் விடு | ||||
2016-2018 | சரவணன் மீனாட்சி (பகுதி 3) | சரவணன் | விஜய் தொலைக்காட்சி | சிறந்த புதுமுக நடிகருக்கான விஜய் தொலைக்காட்சி விருது 2017 |
2016-2018 | ஜோடி நம்பர் ஒன் 9 | போட்டியாளர் | ||
2017-2018 | ரெடி ஸ்டெடி போ 1 | தொகுப்பாளர் | ||
வைஃப் கைல லைஃப் | தொகுப்பாளர் | |||
பிக் பாஸ் தமிழ் 2- பன் அன்லிமிடெட் | ஹாட் ஸ்டார் | |||
2018-2019 | ரெடி ஸ்டெடி போ 2 | தொகுப்பாளர் | சிறந்த தொகுப்பாளருக்கான விஜய் தொலைக்காட்சி விருது 2019 | |
ஜோடி பன் அன்லிமிடெட் | தொகுப்பாளர் | |||
2018 | Behindwoods தங்க விருதுகள் 6.0 | தொகுப்பாளர் | கலர்ஸ் தமிழ் | |
2019–2020 | டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் | தொகுப்பாளர் | விஜய் தொலைக்காட்சி | |
2020 | 90 கிட்ஸ் Vs 2 கே கிட்ஸ் | |||
2020 | பிக் பாஸ் தமிழ் 4 | போட்டியாளர் |
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2017 | சத்ரியன் | ||
2019 | நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா | சிவா | |
2020 | பிளான் பண்ணி பண்ணனும் |
மேற்கோள்கள்
- ↑ "After 7 years Saravanan Meenatchi coming to an end - Times of India". The Times of India. https://m.timesofindia.com/tv/news/tamil/after-7-years-saravanan-meenatchi-coming-to-an-end/articleshow/65307541.cms.
- ↑ "I am forever grateful to Sivakarthikeyan anna: Rio Raj - Times of India". The Times of India.