சண்டை (திரைப்படம்)
சண்டை 2008 [2] இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கினார். சுந்தர். சி மற்றும் ரம்யா ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சண்டை | |
---|---|
இயக்கம் | சக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | ராதா சக்தி சிதம்பரம் |
கதை | ரவி மரியா (வசனம்) |
திரைக்கதை | சக்தி சிதம்பரம் |
இசை | தினா |
நடிப்பு | சுந்தர் சி.[1] நதியா நமிதா ரம்யா ராஜ் துரைசாமி நெப்போலியன் விவேக் லாலு அலெக்ஸ் தண்டபாணி (நடிகர்) சுஜா |
ஒளிப்பதிவு | கே.எஸ் செல்வா ராஜ் |
படத்தொகுப்பு | ஜி. சசிக்குமார் |
கலையகம் | சினிமா பாரடேஸ் |
விநியோகம் | சினிமா பாரடேஸ் |
வெளியீடு | மார்ச்சு 21, 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படத்திற்கு தினா இசையமைத்துள்ளார்.[2]
இத்திரைப்படம் இந்தியாவில் மொழியில் ஜங்காஸ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இத்திரைப்படம் அக்ஷன், நகைச்சுவை, ட்ராமா கலந்த மசாலா படம் ஆகும். இதில் சுந்தர் சி. - விவேக் கூட்டணியின் நகைச்சுவைக் கலாட்டா ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே வெளியான மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களின் பாதிப்பு மற்றும் லாஜிக் மீறல்கள் பல இருப்பதாக விமர்சனங்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்
- சுந்தர் சி.[3] as கதிரேசன் (கத்தி)
- ரம்யா ராஜ் -அபி
- நமிதா கபூர் (நடிகை) நீக்கல் சின்னக்கிளி
- நதியா as தங்கலட்சுமி
- விவேக் தங்கபாண்டி
- நெப்போலியன் மாவட்ட ஆட்சியர் (தங்கலட்சுமியின் கணவர்)
- லாலு அலெக்ஸ் பால்பாண்டி, கத்தியின் தந்தை
- மிதுன் தேஜஸ்வி
- தண்டபாணி
- ரவி மரியா
- ராஜ்கபூர் (இயக்குநர்)
- தளபதி தினேஷ்
- விச்சு விஸ்வநாத்
- மீரா கிருஷ்ணன் கத்தியின் அம்மா
- பரவை முனியம்மா கத்தியின் பாட்டி
- ஜோதிலட்சுமி மணியின் அம்மா
- டெல்லி குமார்
- உமா பத்மநாபன் டிஎஸ்பி
- சுஜா வருனே ஐட்டம் பாடல்
பாடல்
இத் திரைப்படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார்.[2]
இல | தலைப்பு | வரிகள் | பாடகர் |
---|---|---|---|
01 | "போக்கிரின்னா" | நா.முத்துக்குமார் | சிம்பு |
02 | "ஒக்டோபர் மாதத்தில்" | ரவி மாரியா | சான், ரீட்டா |
03 | "வாடி என்" | கங்கை அமரன் | சுந்தர் சி. |
04 | "ஆத்தாடி" | நா.முத்துக்குமார் | தேவ் பிரகாஷ் |
05 | "மதுரைக்கார" | சக்தி சிதம்பரம் | உதித் நாராயணன்,
அனுராதா ஶ்ரீராம் |
06 |
"சண்டயா ஓயுது ஓயுது" | ராமஜோகய்யா சாஸ்திரி | நாரேன்திரா |
திரைப்படத்தின் யூடியூப் இணைப்பு - https://www.youtube.com/watch?v=9OOUexF9cfk
தயாரிப்பு
2007 ஆம் ஆண்டு இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் படத்தில் இணைவதாக சுந்தர் சி. இனால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் திரைப்படத்திற்கு "பொறுக்கி" என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பிறகு தலைப்பு "அதிருதில்ல" மற்றும் "மகமகம்" என்று மாற்றப்பட்டது.
விமர்சனம்
Rediff இணையமானது இதனை லாஜிக் இல்லாதது என்றும் மாமி மற்றும் மருகன் இடையிலான சண்டைக் காட்சிகள் ஏற்கனவே வெளியான "பூவா தலையா" மற்றும் "மாப்பிள்ளை" போன்ற படங்களை நினைவு படுத்துவதாக இருந்ததாக கூறியிருந்தது. அத்துடன் Behindwoods இணையம் "நீங்கள் சக்தி சிதம்பரத்தின் படங்களைப் பார்க்க செல்லும் போது ஒன்றையும் எதிர்பார்க்க அவசியமில்லை. அவரது படங்கள் முற்றிலும் பொழுது போக்குகளுக்காகவே எடுக்கப்பட்டிருக்கும்" என்று கூறியிருந்தது. சிபி இணையத்தளம், இது மிகவும் பிற்போக்குத் தனமான அழகுணர்வற்ற, லாஜிக் இல்லாத படம் என்று கூறியிருந்தது.
ஆனால் திரைப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.
ஆதாரங்கள்
- ↑ "மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி - Dina Seithigal". DailyHunt. http://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei/meendum+heerovaga+kalamirangum+sunthar+si-newsid-91325591.
- ↑ 2.0 2.1 Staff (2 April 2008). "சண்டை- பட விமர்சனம்". https://tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/reviews/02-sandai-tamil-film-review.html.
- ↑ "Sundar C, VZ Durai, சுந்தர் சி, வி இசட் துரை". Maalaimalar. http://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2018/07/01170803/1173722/Sundar-C-again-acting-hero.vpf.