ஜோதிலட்சுமி
ஜோதிலட்சுமி | |
---|---|
பிறப்பு | 2 நவம்பர் 1948 |
இறப்பு | 8 ஆகத்து 2016 சென்னை | (அகவை 67)
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1963–2016 |
பிள்ளைகள் | ஜோதிமீனா |
ஜோதிலட்சுமி (Jyothi Lakshmi, 2 நவம்பர் 1948 – 8 ஆகத்து 2016) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். 1963ஆம் ஆண்டு வானம்பாடி படத்தில் வரும் 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடலில் நடித்ததின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.[1] பின் பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் வழியாக வள்ளி பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பெரும்பாலும் இவர் திரைப்படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவின் மருமகளாவார். இவரது அத்தை டி. ஆர். ராஜகுமாரி ஆவார். இவரது தங்கை ஜெயமாலினி, இவரது மகள் ஜோதி மீனா ஆகியோர் நடிகைகள் ஆவர்.[2] இவர் நடனபயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். பல காலங்கள் திரையுலகில் இடைவெளி விட்டு நடிக்காமல் இருந்த இவர் சேது படத்தில் கான கருங்குயிலே பாட்டுக்கு ஆடி மீண்டும் திரையுலகில் வலம் வந்தார்.
மறைவு
68 வயதான ஜோதிலட்சுமி [3] இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சைப் பலனின்றி 2016 ஆகத்து 8 இரவு காலமானார்.[4]
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வானம்பாடி (1963)
- பெரிய இடத்துப் பெண் (1963)
- பட்டணத்தில் பூதம் (1967)
- தேடிவந்த மாப்பிள்ளை (1968)
- கலாட்டா கல்யாணம் (1968)
- பூவும் பொட்டும் (1968)
- அடிமைப் பெண் (1969)
- தலைவன் (1970)
- நீரும் நெருப்பும் (1971)
- ரிக்சாக்காரன் (1971)
- யார் ஜம்புலிங்கம் (1972)
- இராகம் தேடும் பல்லவி (1982)
- நாயகன் (1987)
- முத்து (1995)
- தர்ம சக்கரம் (1997)
- பாசமுள்ள பாண்டியரே (1997)
- மறுமலர்ச்சி (1998)
- சேது (1999)
- என்னம்மா கண்ணு (2000)
- மிடில் கிளாஸ் மாதவன் (2001)
- எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)
- சண்டை (2008)
- திரிஷா இல்லனா நயன்தாரா (2015)
மேற்கோள்கள்
- ↑ "11. உடல்மொழியால் உருட்டும் விழியால் ரசிகர்களை ஈர்த்த டி.ஆர்.ராமச்சந்திரன்". தினமணி. 1 நவம்பர் 2019. https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/nov/01/veteram-comedian-trramachandran-life-history-3264635.html.
- ↑ "பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி காலமானார்!". veooz.com. https://www.veooz.com/edition/ta/news/OLMEvT6.html. பார்த்த நாள்: 10 ஆகத்து 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்". தி இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article8963686.ece. பார்த்த நாள்: 10 August 2016.
- ↑ "'ஜோதி'யானார் லட்சுமி!". மனம். http://manam.online/Cinema/2016-AUG-09/Actress-Jothi-lakshmi. பார்த்த நாள்: 10 ஆகத்து 2016.[தொடர்பிழந்த இணைப்பு]