தண்டபாணி (நடிகர்)
தண்டபாணி | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 17, 1943 திண்டுக்கல், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 20 சூலை 2014 [1] |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–2014 |
வாழ்க்கைத் துணை | அருணா |
பிள்ளைகள் | மகன்கள் : விமலாதித்தன், லெனின்குமார், மகள்: இராஜேஸ்வரி |
தண்டபாணி (இறப்பு: சூலை 20, 2014) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 150 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர, நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். காதல் திரைப்படத்தின் வாயிலாக காதல் தண்டபாணி என பரவலாக அறியப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தண்டபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்தவர். பொரி-கடலை வியாபாரம் செய்து வந்தார். 2004 ஆம் ஆண்டில் வெளியான காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனால் இவர் "காதல்' தண்டபாணி எனவும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, வேலாயுதம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார். இறுதியாக காந்தர்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.[2]
மறைவு
சென்னையில் வசித்துவந்த தண்டபாணி சண்டமாருதம் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது 2014 சூலை 20 இல் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 71 ஆகும். மனைவி அருணா இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ 20 July 2014 12:30 IST. "Popular Actor Kadhal Dhandapani Passes Away". Ibtimes.co.in. http://www.ibtimes.co.in/popular-actor-kadhal-dhandapani-passes-away-604867. பார்த்த நாள்: 2014-07-21.
- ↑ "நடிகர் ‛காதல் தண்டபாணி மாரடைப்பால் காலமானார்!". தினமலர். 20 சூலை 2014. http://cinema.dinamalar.com/tamil-news/20318/cinema/Kollywood/Actor-Kadal-Dhandapani-passes-away.htm. பார்த்த நாள்: 21 சூலை 2014.
- ↑ "நடிகர் "காதல்' தண்டபாணி காலமானார்". தினமணி. 21 சூலை 2014. http://www.dinamani.com/cinema/2014/07/21/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/article2341228.ece. பார்த்த நாள்: 21 சூலை 2014.