கோபுர வாசலிலே

கோபுர வாசலிலே (Gopura Vasalile) 1991 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்சன். இது இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்மொழி படமாகும். இதை மு. க. தமிழரசு தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, சுசித்ரா , நாசர், ஜனகராஜ் , சார்லி, ஜீனியர் பாலையா, வி. கே. ராமசாமி , சுகுமாரி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் முதலியோர் நடித்துள்ளனர். மோகன்லால் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1], பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இத்திரைப்படத்தின் சில காட்சிகள் மலையாள மொழியில் 1990ம் வருடம் வெளிவந்த "பாவம் பாவம் ராஜகுமாரன்" திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.[சான்று தேவை] இது தமிழ் மொழியில் சோகம் இழையோடிய நகைச்சுவை படங்களுக்கு உதாரணமாக உள்ளது.[சான்று தேவை] "கோபுர வாசலிலே" திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

கோபுர வாசலிலே
இயக்கம்பிரியதர்சன்
தயாரிப்புமு. க. தமிழரசு
திரைக்கதைபிரியதர்ஷன்
கோகுல கிருஷ்ணன் (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
பானுப்பிரியா
சுசித்ரா
நாசர்
ஜனகராஜ்
சார்லி
ஜீனியர் பாலையா
மோகன்லால்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்அருள் நிதி பிலிம்ஸ்
விநியோகம்அருள் நிதி பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 22, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை சுருக்கம்

மனோகர் கார்த்திக் உள்ளூரில் ஆசிரியராக இருக்கிறான். அவன் தனது நண்பர்கள் (நாசர்), ஜீனியர் பாலையா,மற்றும் சார்லி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறான். மனோகர் தன் காதலி கஸ்தூரியை சுசித்ரா மகிழுந்து விபத்தில் பறிகொடுத்ததால் மிகுந்த சோகத்தில் இருக்கிறான். அவனது நண்பர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்துகொண்டு பிற பெண்களுடன் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு களியாட்டங்களில் இருந்தபோது இராணுவ அதிகாரியின் (வி. கே. ராமசாமி ) மகளான கல்யாணியிடம் பானுப்ரியா தவறாக நடக்க முயற்சிக்கின்றனர். அதற்காக தண்டிக்கப்படுகின்றனர். மனோகர் நண்பர்களின் குணத்தைக் கண்டு அருவருப்படைந்து அவர்களைக் கண்டிக்கிறான்.

அதனால் நண்பர்கள் மனோகரை பழிவாங்க எண்ணுகிறார்கள். அவர்கள் வங்கியில் வேலை பார்க்கும் ஜனகராஜின் உதவியோடு பெயரில்லாமல் சில காதல் கடிதங்களை மனோகருக்கு அனுப்புகின்றனர். அதில் கல்யாணி மனோகர் மேல் காதல் கொண்டிருப்பதாக எழுதியிருந்தது. அக்கடிதங்களை உண்மை என்று மனோகர் நம்பியதனால் நண்பர்களது யுக்தி வெற்றியடைந்தது.

இதற்கிடையில், சில நிகழ்ச்சிகளின் வாயிலாக மனோகரின் குணங்களை அறிந்து, அவனை திருமணம் செய்துகொள்ள விரும்பி, கல்யாணி தன் தந்தையின் உதவியை நாடுகிறாள். ஆனால் மனோகரது நண்பர்கள் கல்யாணி ஒரு வேசி என்று பொய்யான ஆதாரங்களைக் காட்டி அவனைத் தடுக்கின்றனர். மனோகரும் அவர்களது மோசடியை உண்மை என்று நினைத்து திருமண ஏற்பாடுகளை நிறுத்துகிறான்.

தனது வாழ்க்கையில் இரு முறை காதல் தோல்வி ஏற்பட்டதால் மனோகர் ஒரு உணவு விடுதியில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். இதை அறிந்த அவனது நண்பர்கள் அவன் இறந்துவிட்டதாக நினைத்து போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இறுதியில் மனோகர் காவல் துறையினரால் காப்பற்றப்பட்டு, கல்யாணியுடன் சேர்கிறான். பிறகு, தன் நண்பர்களை மன்னித்து, மலை மேல் கட்டியிருக்கும் தன் வீட்டிற்கு விருந்துண்ண அழைக்கிறான்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோபுர_வாசலிலே&oldid=32637" இருந்து மீள்விக்கப்பட்டது