கொம்பு (திரைப்படம்)
கொம்பு (Kombu) என்பது 2020 இல் வெளியான இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஈ. இப்ராகிம் எழுதி இயக்கிய[1] இப்படத்தில் லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், கஞ்சா கறுப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அம்பானி சங்கர், நெல்லை சிவா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2020 திசம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது. [2] [3]
கொம்பு (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ஈ. இப்ராகிம் |
தயாரிப்பு | எம். பன்னீர் செல்வம் பி. வானதி |
கதை | ஈ. இப்ராகிம் |
இசை | தேவகுரு |
நடிப்பு | லொள்ளு சபா ஜீவா திஷா பாண்டே கஞ்சா கறுப்பு சுவாமிநாதன் பாண்டியராஜன் நெல்லை சிவா அம்பானி சங்கர் |
ஒளிப்பதிவு | சுதீப் பிரீடிரிக் |
படத்தொகுப்பு | கிரேசன் |
கலையகம் | சாய் சிறீனிவாசா பிக்சர்சு |
வெளியீடு | திசம்பர் 11, 2020 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
ஒரு கிராமத்தில் பேய்களையும் ஆவிகளையும் சமாளிக்க மக்கள் மாட்டு கொம்புகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்த ஒரு மாணவி, அப்பகுதிக்கு தனது சக ஊழியர்களுடன் செல்ல முடிவு செய்கிறாள். அவர்கள் தங்கியிருக்கும் போது, கொம்புகளுடன் தொடர்புடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை சந்திக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மையக்கருவாக அமைகிறது. [4] [5]
நடிகர்கள்
- கார்த்திக் கதாபாத்திரத்தில் லொள்ளு சபா ஜீவா
- ஜனனியாக திஷா பாண்டே
- பாண்டியராஜன் டாடாவாக (கார்த்திக்கின் மாமா)
- பசுபதியாக சுவாமிநாதன்
- கஞ்சா கறுப்பு
- அம்பானி சங்கர்
- நெல்லை சிவா
பாடல்கள்
இப்ராகிம், தேவகுரு, கிருத்திகா கோகுல்நாத், வெங்கடேஷ் பிரபாகர் [6] [7] ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "அருகிலே நின்று கொள்கிறாய்" | சைந்தவி, சந்தோசு அரிகரன் | 4:21 | |
2. | "ஸ்கூபி டூபி டூ" | அருண்ராஜா காமராஜ், தேவகுரு | 4:31 | |
3. | "கனவே அழகே" | தேவகுரு | 3:08 | |
4. | "டைட்டு மச்சான்" | சைந்தவி, வேல்முருகன் | 4:44 | |
மொத்த நீளம்: |
16:44 |
மேற்கோள்கள்
- ↑ "கொம்பு". 9 December 2020. https://cinema.maalaimalar.com/cinema/preview/2020/12/09150600/2147558/Tamil-cinema-kombu-movie-preview.vpf.
- ↑ "Disha Pandey's back with a horror thriller". 2 August 2018. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/020818/disha-pandeys-back-with-a-horror-thriller.html.
- ↑ "TV star Jeeva forays as a hero in big screen". 22 December 2017. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/221217/tv-star-jeeva-forays-as-a-hero-in-big-screen.html.
- ↑ "Disha Pandey is a research student in her Kollywood comeback". 7 December 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/disha-pandey-is-a-research-student-in-her-kollywood-comeback/articleshow/79612604.cms.
- ↑ "நாயகியுடன் பேய் பங்களாவில் சிக்கும் நாயகன் - கொம்பு விமர்சனம்". 11 December 2020. https://cinema.maalaimalar.com/cinema/review/2020/12/11180717/2148110/Kombu-movie-review-in-tamil.vpf.
- ↑ Hungama, Kombu (in English), retrieved 2021-02-24
- ↑ Kombu Songs: Kombu MP3 Tamil Songs by DevGuru Online Free on Gaana.com, retrieved 2021-02-24