அம்பானி சங்கர்
அம்பானி சங்கர் | |
---|---|
பிறப்பு | கே. சங்கரநாராயணன் 17 மே 1988[1] தமிழ்நாடு, திருமங்கலம் (மதுரை) |
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | மோனிகா நந்தினி[2] |
அம்பானி சங்கர் (Ambani Shankar) என்பவர் இந்திய நடிகராவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நடித்துவருகிறார். இவர் ஜி (2005), அம்பாசமுத்திரம் அம்பானி (2010) உள்ளிட்ட படங்களில் தோன்றியுள்ளார், மேலும் இவரது திரைப் பெயரை பிந்தைய படத்திலிருந்து பெற்றார்.
தொழில்
சங்கர் மதுரையின் திருமங்கலத்தில் வளர்ந்தார். நடிகர் வடிவேலுவின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட இவர், திரைப்படங்களில் நடிக்க 2004 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்றார். திரைப்படங்களில் வாய்ப்பு பெற முடியாமல், கே. பாக்யராஜின் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றத் தொடங்கினார். ஜி (2005) படத்தில் சாலை ஓர மிதிவண்டி புழுது பார்ப்பவர் பாத்திரத்தை என். லிங்குசாமி அளித்தார்.[3] இந்திரலோகத்தில் நா. அழகப்பன் (2008) மற்றும் குசேலன் (2008) உள்ளிட்ட படங்களில் சிறிய நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.
சங்கருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது அம்பாசமுத்திரம் அம்பானி (2010) படமாகும். அதில் கருணாசுடன் இணைந்து ஒரு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[4] ரெடிஃப்.காம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டியது.[5] அதேபோல், Sify.com இவரை "ஒரு நல்ல நடிகர்" என்று குறிப்பிட்டது.[6][7] பின்னர் இவர் தனது திரைப் பெயருக்கு முன்னொட்டாக "அம்பானி"யைச் சேர்த்தார்.
2013 இல், சங்கர் நடிகர் விஜயுடன் இணைந்து ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநில பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.[8][9]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | ஜி | ||
2005 | ஆறு | சின்னா | |
2006 | பேரரசு | ஐஸ்வர்யாவின் நண்பர் | |
2007 | வல்லவன் | ||
2007 | கருப்புசாமி குத்தகைதாரர் | ||
2007 | பிறகு | சமராசத்தின் உதவியாளர் | |
2008 | இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | ||
2008 | இன்பா | ||
2008 | சக்கர வியூகம் | கண்ணாவின் நண்பர் | |
2008 | குசேலன் | ||
2009 | பாடிக்காதவன் | ||
2009 | வைகை | ||
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | கார்த்தி | |
2010 | விருந்தாளி | பார்த்திபன் | |
2012 | விளையாட வா | குணா | |
2012 | பாண்டி ஒலிப்பெருக்கி நிலயம் | ||
2013 | பட்டத்து யானை | ||
2015 | கலை வேந்தன் | ||
2015 | 144 | ||
2016 | நனையாதே மழையே | ||
2016 | அட்ரா மச்சான் விசிலு | ||
2016 | பட்டதாரி | ||
2016 | கோடம்பாக்கம் கோகிலா | ||
2017 | கனவு வாரியம் | ||
2017 | காதல் காலம் | ||
2017 | அராசகுலம் | ||
2017 | சவரிக்காடு | ||
2018 | குலேபகாவலி | மாரி | |
2018 | பக்கா | ||
2019 | கண்ணே கலைமானே | கமலகண்ணனின் நண்பர் | |
2019 | என் காதலி சீன் போடுறா | ||
2019 | உதய் | ||
2020 | என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா | ||
2020 | திரௌபதி | பாய் | |
2020 | கொம்பு | ||
2021 | மைக்கேல்பட்டி ராஜா | ||
2022 | பெஸ்டி | சங்கர் |
குறிப்புகள்
- ↑ "K.Sankaranarayanan | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". http://www.nadigarsangam.org/member/v-sankaranarayanan/.
- ↑ "Comedian Weds". 18 June 2012 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027221814/https://top10cinema.com//article/15611/comedian-weds.
- ↑ https://www.youtube.com/watch?v=YnNy5YlUu4o
- ↑ ""அஜித் சார் ரொம்ப அப்செட்... ஷூட்டிங்கே நடத்தவேண்டாம்னு சொல்லிட்டார்!" - `அம்பானி' சங்கர்". https://cinema.vikatan.com/tamil-cinema/actor-ambani-shankar-talks-about-his-career.
- ↑ "Ambasamudram Ambani is worth a watch". https://www.rediff.com/movies/review/south-review-tamil-ambasamudram-ambani/20100702.htm.
- ↑ "AMBASAMUTHIRAM AMBANI REVIEW - TAMIL MOVIE AMBASAMUTHIRAM AMBANI REVIEW". http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/ambasamuthiram-ambani-movie-review.html.
- ↑ "Ambasamuthiram Ambani" இம் மூலத்தில் இருந்து 2016-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160201225923/http://www.sify.com/movies/ambasamuthiram-ambani-review-tamil-pclxCbbffiadf.html.
- ↑ "Differently-abled actor strikes gold in Para Badminton". 12 December 2017. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/121217/differently-abled-actor-strikes-gold-in-para-badminton.html.
- ↑ "இந்தியாவுக்கு பெருமை சேர்க்க ரெடியான காமெடியன்: பேட்மிண்டனில் தங்கம் வென்று அசத்தல்!". https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/this-popular-comedian-wins-a-gold-medal/articleshow/62023878.cms.
வெளி இணைப்புகள்
- முகநூலில் அம்பானி ஷங்கர்