குருவிக்கரம்பை சண்முகம்

குருவிக்கரம்பை சண்முகம் (Kuruvikkarambai Shanmugam; இறப்பு: 16 பெப்ரவரி 2006) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். இவர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது. பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.[1][2][3]

குருவிக்கரம்பை சண்முகம்
குருவிக்கரம்பை சண்முகம்.jpg
பிறப்புகுருவிக்கரம்பை, தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்புபெப்ரவரி 16, 2006 (அகவை 64)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட பாடலாசிரியர்

இயற்றிய சில பாடல்கள்

  1. அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம்
  2. தீர்ப்புகள் திருத்தப்படலாம் - இராகம் தாளம் பல்லவி
  3. தாவணிக் கனவுகள் - செங்கமலம் சிரிக்குது
  4. சின்ன வீடு - ஜாமம் ஆகிப்போச்சு
  5. ஆண்பாவம் - ஊட்டி வந்த சிங்கக் குட்டி
  6. நிலவே மலரே - நிலவே மலரே
  7. டார்லிங், டார்லிங், டார்லிங்- ஓ நெஞ்சே நீதான்
  8. சார் ஐ லவ் யூ- இங்கே இறைவன் ௭ன்னும் கலைஞன்
  9. மாப்பிள்ளை மனசு பூப்போல- அனைத்துப் பாடல்கள்[4]
  10. அக்னி பார்வை- இதழ் இனிக்க
  11. சோலை குயில்- மலைநாட்டு மச்சானே

புதுக்கவிதை

  1. செந்நெல் வயல்கள் - 1972 [5]

விருதுகள்

  1. தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது - 1991[6]

மறைவு

இவர் 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாளன்று தனது 64-வது அகவையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.[7]

மேற்கோள்கள்

  1. "பாக்யராஜ் கண்டெடுத்த பாடலாசிரியர்". http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=6474&id1=124&issue=20160425. 
  2. "இன்னபிற பாடலாசிரியர்கள் 3 : குருவிக்கரம்பை சண்முகம் "இங்கே இறைவன் என்னும் கலைஞன்"". http://www.radiospathy.com/2013/06/3.html?m=1. 
  3. "ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 58: பாட்டெழுதிய பேராசிரியர்கள்!". http://cms.dinamani.com/amp/weekly-supplements/dinamani-kondattam/2018/jun/24/ஆனந்தத்-தேன்காற்று-தாலாட்டுதே---58-பாட்டெழுதிய-பேராசிரியர்கள்-2945746.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Kuruvikkarambai Shanmugam" (in en-US). 2019-03-15. https://www.tamil2lyrics.com/Lyricist/kuruvikkarambai-shanmugam/. 
  5. "putuk kavitaiyin tORRamum vaLarcciyum by vallikkaNNan (in tamil script, unicode format)". https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0570.html. 
  6. "விருது பெற்றோர் பட்டியல் – தமிழ் வளர்ச்சித் துறை" (in en-US). https://tamilvalarchithurai.com/award-winners/. 
  7. Staff (2006-02-16). "குருவிக்கரம்பை சண்முகம் மரணம்" (in ta). https://tamil.oneindia.com/news/2006/02/16/shanmugam.html.