மாப்பிள்ளை மனசு பூப்போல
மாப்பிள்ளை மனசு பூப்போல | |
---|---|
இயக்கம் | குருவிக்கரம்பை சண்முகம் |
தயாரிப்பு | எஸ். ஜெயலட்சுமி |
கதை | குருவிக்கரம்பை சண்முகம் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | நித்யா |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
கலையகம் | குரு கலைக்கூடம் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1996 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாப்பிள்ளை மனசு பூப்போல 1996 ஆம் ஆண்டு பாண்டியராஜன் மற்றும் யுவராணி நடிப்பில், குருவிக்கரம்பை சண்முகம் இயக்கத்தில், எஸ். ஜெயலட்சுமி தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4].
கதைச்சுருக்கம்
மாணிக்கம் (பாண்டியராஜன்) மற்றும் ராஜா (ரஜனீஷ் குமார்) இருவரும் நண்பர்கள். நாட்டுப்புறப் பாடகர்களான இருவரும் நாட்டுப்புறப்பாடல் என்ற தலைப்பில் முனைவர் படிப்பில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். ராஜா தன் பாட்டியுடன் (எஸ். என். லட்சுமி) வசிக்கிறான். மாணிக்கம் தன் பெற்றோர்களுடன் (திடீர் கண்ணையா மற்றும் ஸ்ரீமதி) வசிக்கிறான். ராஜாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு அவன் தொடர்ந்து மோசமாக நடந்துகொள்ளத் தொடங்கினான். அவனது பாட்டியும் மாணிக்கமும் ராஜாவை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு அவனது நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டதால் அவன் குணமடைந்துவிட்டதாகக் கருதிய மருத்துவர் அவனை வீட்டிற்கு அனுப்பினார்.
ராஜா முற்றிலும் குணமடையவில்லை. எனவே அடிக்கடி மனநிலை பாதிப்படைந்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டான். இந்நிலையில் ராஜாவால் அவனது முனைவர் படிப்பின் இறுதியில் நடைபெறும் முக்கியமான நேர்காணல் மற்றும் வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற இயலாது என்பதையறிந்த மாணிக்கம், தன் நண்பனுக்காக சில மோசடிகள் செய்து அவனைத் தேர்ச்சிபெறச் செய்கிறான்.
மாணிக்கம் அவனது முறைப்பெண்ணான பொன்னியைத் (யுவராணி) திருமணம் செய்ய முடிவாகிறது. பணக்காரரான ஆண்டித் தேவர் (மலேசியா வாசுதேவன்) தன் மகள் வசந்தியை (பாக்கிய ஸ்ரீ) ராஜாவுக்குத் திருமணம் செய்ய விரும்புகிறார். தன் நண்பனின் திருமணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்டவனாக நடிக்க முடிவுசெய்கிறான் மாணிக்கம். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்கிறார்கள்.
நடிகர்கள்
- பாண்டியராஜன் -மாணிக்கம்
- யுவராணி - பொன்னி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - உலகநாதன்
- மலேசியா வாசுதேவன் - ஆண்டித்தேவர்
- ரஜனீஷ் குமார் - ராஜா
- பாக்கிய ஸ்ரீ - வசந்தி
- விசித்ரா - கங்கா
- பொள்ளாச்சி பாபு - பெரிய மைனர்
- ஸ்ரீராஜ் குகன் - சின்ன மைனர்
- எஸ். என். லட்சுமி - ராஜாவின் பாட்டி
- எம். வரலட்சுமி - ஆண்டித்தேவர் மனைவி
- எம். ஆர். சுலக்ஷனா - பொன்னியின் தாய்
- ஸ்ரீமதி - மாணிக்கத்தின் தாய்
- பசி நாராயணன்
- திடீர் கண்ணையா
- ஹெர்குலஸ் டக்ளஸ் - தங்கவேல்
- பெரியார்தாசன் - மரு. கயல்வேந்தன்
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம்[5].
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | ஆத்து வந்த | கிருஷ்ணராஜ், மனோ | 5:32 |
2 | மதுரையிலே | எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. பி. பல்லவி | 4:40 |
3 | வட நாட்டில் | ராஜகோபால், பி. ௭ஸ். சசிரேகா | 5:00 |
4 | அந்தி நேர | கிருஷ்ணராஜ், சிந்து | 5:03 |
5 | நான் புத்தனும் | தேவா | 4:28 |
மேற்கோள்கள்
- ↑ "மாப்பிள்ளை மனசு பூப்போல". http://spicyonion.com/movie/mappillai-manasu-poopola/.
- ↑ "மாப்பிள்ளை மனசு பூப்போல" இம் மூலத்தில் இருந்து 2021-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210119210912/http://www.gomolo.com/mapillai-manasu-poopola-movie/12033.
- ↑ "மாப்பிள்ளை மனசு பூப்போல" இம் மூலத்தில் இருந்து 2004-08-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040831162913/http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=maapillai%20manasu%20pooppole.
- ↑ "மாப்பிள்ளை மனசு பூப்போல" இம் மூலத்தில் இருந்து 2010-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100204144707/http://jointscene.com/movies/Kollywood/Maapillai_Manasu_Pooppole/8040.
- ↑ "பாடல்கள்". http://www.allmusic.com/album/mappillai-manasu-poo-pole-mw0002114906.