காசி (திரைப்படம்)
காசி (Kasi) திரைப்படம், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். காசி என்ற கண் தெரியாத கதாநாயகனாக விக்ரம் நடித்துள்ளார். அவரது மனைவி லட்சுமியாக காவ்யா மாதவன் நடித்துள்ளார். இவரது தங்கையாக காவேரியும், அம்மாவாக பார்வதியும் கொடுமை செய்யும் அண்ணனாக தலைவாசல் விஜய்யும் வில்லன்களாக ராஜீவும், தினேசும் நடித்துள்ளனர்.[1]
காசி | |
---|---|
இயக்கம் | வினயன் |
தயாரிப்பு | அரோமா மணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | விக்ரம், காவ்யா மாதவன், காவேரி, மணிவண்ணன், பார்வதி |
படத்தொகுப்பு | சுகுமார் |
விநியோகம் | சுனிதா புரடக்சன்சு |
வெளியீடு | நவம்பர் 14, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடித்துள்ளவர்கள்
- விக்ரம் - காசி
- காவேரி - காவேரி
- காவ்யா மாதவன் - லட்சுமி
- மணிவண்ணன்
- வினு சக்ரவர்த்தி - காசியின் தந்தை
- ராஜீவ் - ரகுபதி
- சந்திரசேகர்
- சார்லி
- தலைவாசல் விஜய் - செவ்வாழை
- வடிவுக்கரசி - காசியின் தாய்
- ஐசுவரியா - ராதிகா
பாடல்கள்
காசி | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 13 சூலை 2001 |
ஒலிப்பதிவு | 2001 |
இசைப் பாணி | திரைப்பாடல்கள் |
நீளம் | 30:22 |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | ஃபைவ் ஸ்டார் ஆடியோ |
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் பாடினார்.[2]
பாடல்கள் பட்டியல் [3] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஆத்தோரத்திலே ஆலமரம்" | புலமைப்பித்தன் | ஹரிஹரன் | 5:11 | ||||||
2. | "என் மன வானில்" | மு. மேத்தா | ஹரிஹரன் | 5:39 | ||||||
3. | "மானு தோலு ஒன்னு" | புலமைப்பித்தன் | ஹரிஹரன் | 5:07 | ||||||
4. | "நான் காணும் உலகங்கள்" | மு. மேத்தா | ஹரிஹரன் | 4:33 | ||||||
5. | "புண்ணியம் தேடி காசிக்கு" | பழனிபாரதி | ஹரிஹரன் | 4:53 | ||||||
6. | "ரொக்கம் இருக்கிற மக்கள்" | முத்துலிங்கம் | ஹரிஹரன், சுஜாதா மோகன் | 4:59 | ||||||
மொத்த நீளம்: |
30:22 |
விமர்சனம்
இப்படம் முதலில் சுமாராக ஓடினாலும் பிறகு இசையினாலும், கதையினாலும் நன்றாக ஓடியது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-07-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100710032918/http://archives.chennaionline.com/moviereviews/tammov161.asp.
- ↑ "Kaasi". 26 November 2001 இம் மூலத்தில் இருந்து 3 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230603061527/https://www.jiosaavn.com/album/kaasi-tamil/fo-0W69x1Bw_.
- ↑ https://www.saavn.com/s/album/tamil/Kaasi-2001/alN8McZPMB8_