கஸ்தூரி மான் (திரைப்படம்)
கஸ்தூரி மான் (Kasthuri Maan) என்பது மலையாள இயக்குனர் அ. க. லோகிததாசு இயக்கிய 2005 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படமாகும். இப்படம் இதே பெயரில் இவராலேயே மலையாளத்தில் எடுக்கபட்ட படத்தின் மறு ஆக்கம் மற்றும் இந்த நாள்வைரியிலான இவரது ஒரே தமிழ் படமும் ஆகும். இப்படத்தில் பிரசன்னா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2] சம்மி திலகன், சரத் பாபு, வி. எம். சி ஹனீபா, பாரதி கண்ணன், பவன், வினோதினி, சுஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கஸ்தூரி மானின் கதை ஒரு இளம் கல்லூரிப் பெண்ணைச் சுற்றியதாக உள்ளது, அவர் தனது காதலருக்கு தனது சொந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அவரை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவை நனவாக்க உதவுகிறார்.[3] இந்த படம் 2005 தீபாவளியின் போது வெளியிடப்பட்டது.[4] பெரும்பாலும் பொதுவாக நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.
கஸ்தூரி மான் | |
---|---|
இயக்கம் | அ. க. லோகிததாசு |
தயாரிப்பு | சிந்து லோகிதாஸ் |
கதை | அ. க. லோகிததாசு ஜெயமோகன் (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரசன்னா மீரா ஜாஸ்மின் சம்மி திலகன் |
ஒளிப்பதிவு | கிச்சாஸ் வைதி. எஸ் |
படத்தொகுப்பு | ராஜா முகமது சௌந்தர் |
கலையகம் | சுமங்களா ஆர்ட்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 28, 2005 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
அருண்குமார் ( பிரசன்னா ), மாவட்ட ஆட்சியர் பதவியில் இருப்பதாக படம் தொடங்குகிறது. அவரது தந்தை பழனியப்பன் ( சரத் பாபு ) அவரை திருமணம் செய்து கொள்ளக் கூறுவதாக அவரது முன் வாழ்கை காட்சிக்கு கதை செல்கிறது. பழனியப்பன் ஒரு பணக்கார திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் ஒரு பணக்காரரிடமிருந்து கடன் வாங்கியிருந்தார், ஆனால் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தவிக்கிறார். பணக்காரன் தன் மகளை அருணுக்கு திருமணம் செய்விக்க விரும்புகிறான். ஆனால் அருண் அவளை திருமணம் செய்ய விரும்பவில்லை.
உமாசங்கரியும் ( மீரா ஜாஸ்மின் ) அருணும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் உமா ஒரு கலகலப்பான, குறும்புக்கார பெணாக உள்ளாள். ஆனால் வீட்டில், கடுமையான வறுமையை எதிர்கொண்டு வாழ்கிறாள். தனது வீட்டை கவனித்துக்கொள்வதற்கும், வாழாவெட்டியான சகோதரிக்காகவும் பல்வேறு பகுதிநேர வேலைகளில் ஈடுபடுகிறாள். இதற்கிடையில், பழனியப்பன் கடன் சுமை தாளாமல் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் அருணுக்கு உமா பலவகையிலும் உதவுகிறாள். அவர் அவளை திருமணம் செய்துகொள்வதாகவும், அவளுடைய குடும்ப சூழ்நிலையிலிருந்து அவளை மீட்பதாகவும் உறுதியளிக்கிறார். இருப்பினும், உமா, தனது அக்காள் கணவரிடமிருந்து காத்துக்கொள்ள அவனை கொன்று சிறை செல்கிறாள். இறுதியில் இருவரும் இணைகிறனர். .
நடிகர்கள்
- பிரசன்னா அருணாச்சலம் பழநியப்பனாக
- மீரா ஜாஸ்மின் உமாசங்கரி வெற்றிவாலாக
- சம்மி திலகன் சி. கே. நாகராஜனாக
- சரத் பாபு பழநியப்பனாக
- கீதா ரவிசங்கர் அருணின் தாயாக
- வினோதினி பிரேமாவாக
- சுஜா வருணே சுனிதாவாக
- குலப்புள்ளி லீலா முனியம்மாவாக
- அஞ்சலி தேவி வடிவம்மாளாக
- தேவி சந்திரா அருணாச்சலத்தின் சகோதரியாக
- கொச்சி ஹனீஃபா
- கருணாஸ்
- டி. கே. கலா
- பாரதி கண்ணன்
- பவன்
- சாய் பல்லவி கல்லூரி மாணவியாக (அங்கீகரிக்கப்படாத துணை நடிகை)
இசை
படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களின் பாடல் வரிகளை வாலி, முத்துலிங்கம், நா. முத்துகுமார், பழனிபாரதி, மு. மேதா ஆகியோர் எழுதியுள்ளனர்.[5]
- "ஓரு போர்களம்" - கார்த்திக், மஞ்சரி
- "கேட்கலையோ" - திப்பு, மஞ்சரி
- "நேத்து வரைக்கும்" - சுஜாதா
- "என்னை கேட்கும்" - திப்பு
- "வானின் காதல்" - மஞ்சரி
குறிப்புகள்
- ↑ https://web.archive.org/web/20071209035442/http://thehindujobs.com/thehindu/fr/2005/03/18/stories/2005031800210200.htm
- ↑ http://www.rediff.com/movies/2005/oct/28lohit.htm
- ↑ http://www.rediff.com/movies/2005/feb/24ss.htm
- ↑ http://www.rediff.com/movies/2005/oct/27south4.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.