கற்றது களவு
கற்றது களவு (Kattradhu Kalavu) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்- அதிரடித் திரைப்படமாகும், இப்படத்தை முன்னாள் விளம்பரப் படத் தயாரிப்பாளரான பாலாஜி தேவி பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அலிபாபா புகழ் கிருஷ்ணா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கல்யாண், கொச்சி ஹனீஃபா, சம்பத் ராஜ், சந்தான பாரதி, கஞ்சா கறுப்பு ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை பால் ஜேக்கப் அமைத்துள்ளார். படத் தொகுப்பை மு. காசிவிஸ்வநாதன் மேற்கொள்ள, ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டார். படமானது 28 மே 2010 அன்று வெளியானது.[1][2]
கற்றது களவு | |
---|---|
இயக்கம் | பாலாஜி தேவி பிரசாத் |
தயாரிப்பு | பட்டியல் சேகர் |
திரைக்கதை | குமரவேல் |
இசை | பால் ஜேக்கப் |
நடிப்பு | கிருஷ்ணா விஜயலட்சுமி கல்யாண் கொச்சி ஹனீஃபா சந்தான பாரதி சம்பத் ராஜ் கஞ்சா கறுப்பு |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | மு. காசிவிசுவநாதன் |
கலையகம் | டாக்கிங் டைம்ஸ் |
வெளியீடு | 28 மே 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கிருஷ்ணா சிங்கமாக
- விஜயலட்சுமி கிருஷ்ணவேணியாக
- கல்யாண் ஸ்டான்லி தேவா சகாயமாக
- கொச்சி ஹனீஃபா வைகவர்தனாக
- சந்தான பாரதி வைகவர்தனாக
- சம்பத் ராஜ் இராமச்சந்திரனாக
- சாய் தீனா பொட்டுவாக
- கஞ்சா கறுப்பு
- சின்னி ஜெயந்த்
- மனோபாலா
- நெல்லை சிவா
- முமைத் கான் ஒரு குத்தாட்டப் பாடல் ஆடுபவராக
இசை
படத்திற்கு பால் ஜேக்கப் இசையமைத்தார். படத்தின் இசையை சோனி மியூசிக் இந்தியா வெளியிட்டது.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கற்றது களவு" | பிளேஸ், தினேஷ் கனகரத்தினம் | 3:43 | |||||||
2. | "இந்த வானம் இந்த பூமி" | ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் | 4:47 | |||||||
3. | "சுதந்திரம் சுதந்திரம்" | சக்திஸ்ரீ கோபாலன் | 4:39 | |||||||
4. | "தேவாரம்" | யோகேஸ்வரன் மாணிக்கம், புண்ணியவதி இளங்கோவன் | 2:57 | |||||||
5. | "அழகான பொண்ணுதான்" | சுனந்திதா | 4:13 | |||||||
மொத்த நீளம்: |
20:19 |
குறிப்புகள்
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/The-meesai-is-back-and-how/articleshow/4355120.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200320223351/https://www.newindianexpress.com/entertainment/review/2010/jun/04/kattradhu-kalavu-120849.html.