எஸ். டி. சுப்புலட்சுமி
ஸ்ரீவைகுந்தம் துரைசாமி சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட எஸ். டி. சுப்புலட்சுமி 1930-40களில் நடித்த தமிழ் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் துணைவியாராவார்.[1] இவரது குடும்ப நண்பரான ம. ச. சுப்புலட்சுமியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.[1]
எஸ். டி. சுப்புலட்சுமி | |
---|---|
எஸ். டி. சுப்புலட்சுமி | |
பிறப்பு | சிறீவைகுந்தம் துரைசாமி சுப்புலட்சுமி |
பணி | நடிகை, பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1934 - 1964 |
வாழ்க்கைத் துணை | கே. சுப்பிரமணியம் |
வாழ்க்கைக் குறிப்பு
துரைசாமி, ஜானகி தம்பதியருக்கு மகளாக சிறீவைகுந்தம் எனும் ஊரில் பிறந்தார். சிறுவயது முதலே மேடைநாடகத்தில் ஆர்வம் காட்டினார். பின்நாளில் அவரது குடும்பம் மதுரையில் வாழ்ந்தன. அங்கே அவர் கருநாடக சங்கீதமும், நாட்டியமும் பயின்றார். இவரது பெற்றோர் இவருக்குப் பலவாறு ஒப்பனையிட்டு நாடக நிறுவனங்களுக்கு இவரது புகைப்படங்களை அனுப்பி வாய்ப்புகளைத் தேடினர். இதுவே இவர் சிறுவயது முதல் மேடை நாடகங்களில் பங்குகொள்ள உதவியது. வளர்ந்த பின்னர் இவர் எம். கே. தியாகராஜ பாகவதர், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் டி. ஆர். மகாலிங்கம் போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ்பெற்றார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1934 | பவளக்கொடி | இளவரசி பவளக்கொடி | |
1935 | நவீன சதாரம் | சதாரம் | |
1936 | உஷா கல்யாணம் | உஷா | |
1936 | பக்த குசேலா | கிருஷ்ணன், சுசீலா | |
1936 | நவீன சாரங்கதரா | ||
1937 | மிஸ்டர் அம்மாஞ்சி | ||
1939 | தியாகபூமி | சாவித்திரி | |
1942 | அனந்த சயனம் | ||
1945 | மானசம்ரட்சணம் | ||
1946 | விகடயோகி | ||
1952 | அந்தமான் கைதி | ||
1953 | பணம் | ||
1954 | துளி விஷம் | ||
1954 | தூக்குத் தூக்கி | ||
1955 | குலேபகாவலி | ||
1956 | சம்பூர்ண ராமாயணம் | கௌசல்யா | |
1957 | ராணி லலிதாங்கி | சக்கரவர்த்தினி அங்கயர்க்கண்ணி | |
1957 | ராஜ ராஜன் | அரசி செண்பகவல்லி | |
1959 | யானை வளர்த்த வானம்பாடி | ||
1959 | கல்யாணப் பரிசு | ||
1962 | கண்ணாடி மாளிகை | ||
1964 | பட்டணத்தில் பூதம் | ||
1970 | எங்கிருந்தோ வந்தாள் |
மேற்சான்றுகள்
- ↑ 1.0 1.1 S. Muthiah (April 5, 2004). "M. S. and the two centenarians". தி இந்து இம் மூலத்தில் இருந்து ஜூலை 5, 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040705144139/http://www.hindu.com/mp/2004/04/05/stories/2004040500320300.htm.