யானை வளர்த்த வானம்பாடி
யானை வளர்த்த வானம்பாடி | |
---|---|
இயக்கம் | பி. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | பி. சுப்பிரமணியம் நீலா புரொடக்ஷன்ஸ் |
கதை | நீலா |
இசை | பிரதர் லட்சுமணன் |
நடிப்பு | ஸ்ரீராம் நம்பியார் எஸ். டி. சுப்புலட்சுமி |
வெளியீடு | நவம்பர் 27, 1959 |
நீளம் | 15589 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆன வளர்த்திய வானம்பாடி என்பது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாளத் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிசி, எஸ். பி. பிள்ளை, பகதூர், நம்பியார் மிஸ் குமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு பி.ஆர். லட்சுமணன் இசையமைத்தார்.[2]
1959 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி யானை வளர்த்த வானம்பாடி என்ற பெயரில் இப்படம் தமிழில் வெளியானது. தமிழ்ப் பதிப்புக்கு சோமசுந்தரம் உரையாடல் எழுதினார்.[3][4] இப்படத்தின் தொடர்ச்சியாக 1971 இல் யானை வளர்த்த வானம்பாடி மகன் என்ற படம் வெளியானது.[5]
கதை
ஒரு விபத்தில் சிக்கும் வானூர்தியில் இருந்து ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் தப்புகிறது. குரங்கு, யானை போன்ற காட்டு விலங்குகள் அக்குழந்தையைக் காப்பாறி, தங்கள் எஜமானனான தர்மராஜனிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன. அவர் அக்குழந்தைக்கு மல்லி என்ற பெயரிட்டு வளர்க்கிறார். காட்டு வாழ்க்கையில் அவள் வளர்கிறாள். அவர் தன் உறவினர்களிடம் சென்று சேர்ந்தாளா என்பதே கதை
நடிகர்கள்
- இலட்சுமியின் கணவனாக திக்குறிசி சுகுமாரன் நாயர்
- அழகனாக பகதூர்
- மணியாக பிரண்ட் ராமசாமி
- காட்டுக் கொள்ளளையன் கந்தப்பனாக எம்.என்.நம்பியார்
- லட்சுமி, மல்லி/மீனாவாக (இரட்டை வேடம்) மிஸ் குமாரி
- தங்கமணியாக எஸ். டி. சுப்பலட்சுமி
- ஐடியா அண்ணன் தம்பியாக எஸ். பி. பிள்ளை
- மோகனாவாக கே. வி. சாந்தி
- துப்பறவிவாளர் சேகராக ஸ்ரீராம்
பாடல்கள்
- மலையாளப் பாடல்கள்
பாடல் வரிகளை திருநயினார்குறிச்சி மாதவன் நாயர் எழுதினார். ஏ. எம். ராஜா, பி. லீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ஜமுனா ராணி ஆகியோர் பாடினர்.
எண். | பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம் (நிமி:நொ) |
---|---|---|---|---|
1 | "கண்ணே வர்ணா" | ஏ. எம். ராஜா | திருநயினார்குறிச்சி மாதவன் நாயர் | 03:20 |
2 | "அவணியில் தானோ ஞான் அகப்பேடுவானோ" | பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ஜமுனா ராணி | 02:59 | |
3 | "காணனேம்" | பி. லீலா | 03:38 | |
4 | "பைம்பூலோழுக்கும்" | ஏ. எம். ராஜா, பி. லீலா | 03:35 | |
5 | "சிம்போகோ சம்பாகே" | பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ஜமுனா ராணி மற்றும் குழுவினர் | 06:24 | |
6 | "ஓம் மஹா காளி.... கூட்டுக்குள்ளே" | கே. ஜமுனா ராணி மற்றும் குழுவினர் | 02:53 | |
7 | "ஜோடியுள்ள காள" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | 02:52 |
- தமிழ்ப் பாடல்கள்
பாடல் வரிகளை கு. மா. பாலசுப்பிரமணியம், கம்பதாசன், சுரபி, சுந்தரகண்ணன் ஆகியோர் எழுதினர். பாடல்கள் பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி. லீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ஜமுனா ராணி, ஏ. எம். ராஜா ஜிக்கி ஆகோயிர் பாடினர்.[6]
எண். | பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம் (நிமி:நொ) |
---|---|---|---|---|
1 | "கண்ணே வண்ணப் பசுங்கிளியே" | சீர்காழி கோவிந்தராஜன் | கு. மா. பாலசுப்பிரமணியம் | 03:20 |
2 | "அவசரம் தானோ, நான் அகப்படுவேனோ" | ஜிக்கி | 02:59 | |
3 | "கானகமே எங்கள் தாயகமே" | பி. லீலா | சுரபி | 03:38 |
4 | "பண்பாடி வரும் ஓடை நீரில்" | ஏ. எம். ராஜா, பி. லீலா | 03:35 | |
5 | "சிம்போகோ சம்பாகே" | பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ஜமுனா ராணி (ம) குழுவினர் | சுந்தரகண்ணன் | 06:24 |
6 | "ஓம் மஹா காளி.... கூட்டுக்குள்" | கே. ஜமுனா ராணி (ம) குழுவினர் | 02:53 | |
7 | "ஜோடி காளை மாடே நீயே" | திருச்சி லோகநாதன் | கம்பதாசன் | 02:52 |
மேற்கோள்கள்
- ↑ "Aana Valarthiya Vaanampaadi (1960)". msidb.org. Archived from the original on 15 November 2021. பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
- ↑ Vijaykumar, B. (30 November 2009). "Aana Valarthiya Vaanambaadi 1960". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180308085200/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/AANA-VALARTHIYA-VAANAMBAADI-1960/article15925878.ece.
- ↑ Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 22 April 2017. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Guy, Randor (8 March 2014). "Yaanai Valartha Vaanambadi (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210309154136/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/yaanai-valartha-vaanambadi-1959/article5764122.ece.
- ↑ "Best Sequels of Malayalam Cinema, Ranked: From Kireedam To Oru CBI Diary Kurippu". அனுபமா சோப்ரா. 17 February 2021. Archived from the original on 15 November 2021. பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil). Chennai: Manivasagar Publishers. p. 184.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)