நவீன சதாரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நவீன சதாரம்
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
மெட் ராஸ் யுனைட்டட் கோர்ப்
கதைகதை கே. சுப்பிரமணியம்
இசைபாபநாசம் சிவன்
நடிப்புவித்வான் சங்கரலிங்கம்
ஜி. பட்டு ஐயர்
எஸ். எஸ். மணி பாகவதர்
குஞ்சிதபாதம்
எஸ். டி. சுப்புலட்சுமி
கே. கே. பார்வதிபாய்
இந்துபாலா
எம். டி. ராஜம்
வெளியீடு1935
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவீன சதாரம் (Naveena Sadaram) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சுப்பிரமணியம் இயக்கத்தில்[1][2] வெளிவந்த இத்திரைப்படத்தில் வித்வான் சங்கரலிங்கம், ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3]

இத்திரைப்படம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சதாரமே என்ற பெயரில் கன்னடத்தில் புகழ் பெற்ற மேடை நாடகத்தின் தழுவல் ஆகும். இந்நாடகம் முதன் முதலில் கன்னட மொழியில் 1935 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. கன்னடப் படத்தில் கே. அசுவத்தாமா முதன் முதலில் பாடி நடித்திருந்தார். கே. சுப்பிரமணியம் இதனைத் அதே ஆண்டில் தமிழில் தயாரித்து வெளியிட்டார். அவரது மனைவி எஸ். டி. சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்தார். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தின் ஆரம்பப் பாடலான மா ரமணன் உமா ரமணன் என்ற புகழ் பெற்ற பாடலை பாபநாசம் சிவனும் அவரது மருகர் எஸ். எஸ். மணி பாகவதரும் இணைந்து பாடியிருந்தனர். இதே பாடலைப் பின்னர் கே. சுப்பிரமணியம் தனது சேவாசதனம் (1938) என்ற திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியைக் கொண்டு பாடுவித்தார்.

பல சாகசங்களைச் செய்யும் ஒரு பெண் மீது இளவரசன் ஒருவன் காதல் கொள்வது நவீன சதாரம் திரைப்படத்தின் கதை. இதில் சதாரம் (எஸ். டி. சுப்புலட்சுமி) ஆண் வேடம் பூண்டு திருடனிடம் (பட்டு ஐயர்) இருந்து தப்புகிறாள். இளவரசி (பார்வதி பாய்) அவளை ஆண் என நினைத்து அவள் மேல் காதல் கொள்கிறாள். சதாரம் ஏற்கனவே இளவரசன் (சங்கரலிங்கம்) ஒருவனைக் காதலிக்கிறாள். அவ்விளவரசனை வேறொருத்தி காதலிக்கிறாள். இருவரையுமே அவன் மணமுடித்து இச்சிக்கலில் இருந்து விடுபடுகிறான் என்பது தான் கதை.

மொத்தம் 28 பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இந்தித் திரையின் பாடகி இந்துபாலா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அவற்றில் ஒன்று தமிழில். பெரும்பாலான பாடல்கள் பிரபலமான இந்தித் திரைப்படப்பாடல்களின் மெட்டைத் தழுவியே அமைந்திருந்தன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நவீன_சதாரம்&oldid=32748" இருந்து மீள்விக்கப்பட்டது