ஆயிரம் முத்தங்கள்

ஆயிரம் முத்தங்கள் (Ayiram Muthangal) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். அன்னக்கிளி எஸ். தேவராஜன் இயக்கிய இப்படத்தை திருப்பூர் மணி தயாரித்தார். இப்படத்தில் சிவகுமார், ராதா, ஜோஸ், சாருஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார்.[1][2][3]

ஆயிரம் முத்தங்கள்
இயக்கம்அன்னக்கிளி எஸ். தேவராஜன்
தயாரிப்புதிருப்பூர் மணி
கதைசண்முகப்பிரியன்
திரைக்கதைசண்முகப்பிரியன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ராதா
Jose
சாருஹாசன்
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜன்
படத்தொகுப்புடி. இராஜசேகர்
கலையகம்விவேகானந்தா பிக்சர்ஸ்
விநியோகம்விவேகானந்தா பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 4, 1982 (1982-03-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

முரளி ( சிவகுமார் ), ஒரு சட்டம் படித்த பட்டதாரி, வாழ்க்கையை நடத்த போராடுகிறார். மேலும் இவர் சக்தியை ( ராதா ) காதலிக்கிறார். ஆனால் தவறான புரிதல்களால் இருவரும் பிரிந்து செல்கிறார்கள். சக்தி விசுவை (ஜோஸ்) திருமணம் செய்துகொள்கிறாள். அவனது கொடுமைகளை அனுபவிக்கும் நிலைக்கு சத்தி ஆளாகிறாள். விசு முரளியுடனான நட்பையும் வளர்த்துக் கொள்கிறான். இறுதியில் சக்தி முரளி இருவருக்கிடையில் மோதல் தோன்றுகிறது.

நடிகர்கள்

குழு

  • கலை: எஸ். ஏ. ஆர். பாபு
  • ஒப்பனை: தட்சிணாமூர்த்தி, கே. எம். சேதுபதி, மனோகர்
  • உடைகள்: நயீம்
  • ஒளிப்படங்கள்: பத்மநாபன்
  • வடிவமைப்பு: ராஜேந்திரன்
  • விளம்பரம்: ரோம்
  • நடனம்: சுந்தரம், டி. கே. எஸ். பாபு
  • படப்பிடிப்புத் தளம்: சாரதா அருணாசலம்
  • நிறம்: பிரசாத் கலர் லேப்

இசை

படத்திற்கான இசையை சங்கர் கணேஷ் மேற்கொண்டனர்.[4]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆயிரம்_முத்தங்கள்&oldid=30570" இருந்து மீள்விக்கப்பட்டது