அலை ஓசை (திரைப்படம்)

அலை ஒசை (Alai Osai) என்பது 1985 ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை சிறுமுகை ரவி இயக்க விசயகாந்து, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இதற்கு தணிக்கை வாரியம் A (வயதுவந்தவர்களுக்கு மட்டும்) என சான்றிதழ் வழங்கியது.[2] இப்படம் தெலுங்கு மொழியில் பிரஜா போராட்டம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3]

அலை ஓசை
இயக்கம்சிறுமுகை ரவி
தயாரிப்புநவில்கல் கிருஷ்ணன்
கதைசிறுமுகை ரவி
இசைஇளையராஜா
நடிப்புவிசயகாந்து
நளினி
ஒளிப்பதிவுஜெய்கிசான்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்திருமலை சினி பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 14, 1985 (1985-01-14)
ஓட்டம்130 நமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4] பாடல் வரிகளை இளையபாரதி, கங்கை அமரன், முத்துலிங்கம், காமகோடியன், வைரமுத்து ஆகியோர் எழுதினர்.[5] "போராடடா" பாடல் 2018 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படமான " பரியேறும் பெருமாள் " படத்தில் பயன்படுத்தப்பட்டது.[6]

பாடல் பெயர் பாடகர்கள் பாடலாசிரியர்
"கனிந்து வரும்" எஸ். ஜானகி காமகோடியன்
"குப்பமா பெத்த" எஸ்.ஜானகி குழுவினர் கங்கை அமரன்
"பார்க்காததும்" மலேசியா வாசுதேவன், கிருஷ்ணசந்தர் & சாய்பாபா
"நீயா அழைத்தது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து
"போராடடா" மலேசியா வாசுதேவன் குழுவினர் இளையபாரதி
"ரோஜா தோட்டம்" எஸ். ஜானகி முத்துலிங்கம்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அலை_ஓசை_(திரைப்படம்)&oldid=30224" இருந்து மீள்விக்கப்பட்டது