பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள் | |
---|---|
இயக்கம் | மாரி செல்வராஜ் |
தயாரிப்பு | பா. ரஞ்சித் |
கதை | மாரி செல்வராஜ் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | கதிர் ஆனந்தி |
ஒளிப்பதிவு | ஸ்ரீதர் |
படத்தொகுப்பு | செல்வா ஆர்கே |
கலையகம் | நீலம் புரொடக்சன்சு |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.[1][2] இத்திரைப்படம் 2018 செப்டம்பர் 28 ஆம் நாள் திரைக்கு வந்தது. ஊடகங்களில் பரவலான வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.
நடிப்பு
- கருப்பியாக சிப்பிப்பாறை
- பரியேறும் பெருமாளாக கதிர்
- ஜோவாக ஆனந்தி
- ஆனந்தாக யோகி பாபு
- கல்லூரி பேராசிரியையாக லிசி ஆண்டனி
தயாரிப்பு
அக்டோபர் 2016 இல் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன்சைத் தொடங்கிய இயக்குநர் பா. ரஞ்சித், தனது நிறுவனத்தின் முதல் திரைப்படத்தினை ("பரியேறும் பெருமாள்") மாரி செல்வராஜ் இயக்கப்போவதாக திசம்பர் 2016 இல் அறிவித்தார்.[3] திருநெல்வேலியைப் பின்களமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் கதிர் மற்றும் ஆனந்தி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பா, ரஞ்சித்தின் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.[4][5]
மேற்கோள்கள்
- ↑ முதல் படம் அல்ல, முதல் கோபம் - சிஷ்யனை வாழ்த்திய இயக்குனர் ராம்
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pa-ranjith-picks-kathir-anandhi-for-his-venture/articleshow/56272390.cms
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/Pa.-Ranjith-ventures-into-production/article16073852.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-04. பார்க்கப்பட்ட நாள் 2018-04-18.
- ↑ http://www.indiaglitz.com/pa-ranjith-production-venture-pariyerun-perumai-kathir-anandi-mari-selvaraj-santhosh-narayanan-tamil-news-175682.html