அரண்மனை 2 (திரைப்படம்)
அரண்மனை 2 (Audio file "Ta-அரண்மனை.ogg" not found) என்பது 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்தில் சுந்தர் சி., சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, திரிசா, சூரி, கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது, 2014 ஆவது ஆண்டில் வெளியான அரண்மனை திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். கிப்கொப் தமிழா இசையமைத்துள்ள இத்திரைப்படம் 2016 சனவரி 29 அன்று வெளியானது.[1]
அரண்மனை 2 | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | குஷ்பூ |
கதை | வெங்கட் ராகவன் சுந்தர் சி. |
திரைக்கதை | சுந்தர் சி. எஸ். பி. ராமதாஸ் |
இசை | கிப்கொப் தமிழா |
நடிப்பு | சுந்தர் சி. சித்தார்த் ஹன்சிகா மோட்வானி திரிசா பூனம் பஜ்வா சூரி |
ஒளிப்பதிவு | யு. கே. செந்தில்குமார் |
படத்தொகுப்பு | என். பி. சிறீகாந்த் |
கலையகம் | அவினி சினிமேக்ஸ் |
விநியோகம் | சிறீ தேனாண்டாள் பிலிம்சு |
வெளியீடு | சனவரி 29, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
இப்படம் ஒரு அம்மனின் சிலையிலிருந்து ஆரம்பிக்கிறது. அச்சிலை ஊரில் நடமாடும் பேய் பிசாசுகளை அடக்கும் சக்தி கொண்டது. அதை அந்தக் கோயிலின் கீழே இருக்கின்ற இடத்தில் வைத்திருக்கிறது. அக்கோவிலின் கும்பாபிஷேஷத்துக்காக அவ்வம்மன் சிலையை கோவிலின் பின் பக்கத்தில் வைக்கின்றனர். இதனால் அவ்வம்மன் சிலையின் சக்தி 9 நாட்களுக்கு இல்லாமல் போகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சில மனிதர்கள் சில பேய்களைக் கிளப்பி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஒரு பெரிய சக்தி கொண்ட பேய் வெளிவருகிறது. அதைக் கண்ட அந்த மனிதர்கள் பயந்து ஓடுகிறார்கள். அப்பேய் நேரே அவ்வரண்மனைக்கு செல்கிறது. அது வைத்தியலிங்க (ராதாரவி)த்தின் அரண்மனை. அப்பேய் அவரைத் தாக்குகிறது. தீடிரென அவர் கோமா நிலைக்குத் திரும்புகின்றார். இவரின் மூத்த மகன் அசோக்ராம்( சுப்புபஞ்சு) தனது மனைவியோடும் மகனுடனும் அங்கு வருகிறார். அடுத்து முரளி(சித்தார்த்)யும் அவரின் நிச்சயமான பெண்ணான அனிதா(த்ரிஷா)வும் அரண்மனைக்கு வருகிறார்கள். சூரி தனது தந்தை போல் மாறுவேடம் போட்டு வைத்தியராக உள்நுழைகிறார். அந்த அரண்மனையிலேயே வேலைக்காரர்களாக பணிபுரிகிறார்கள் அண்ணன் தங்கையான வீரசேகரன்(மனோபாலா) மற்றும் கோமளம்(கோவை சரளா) மற்றும் ராதாரவியைப் பார்த்துக்கொள்ள தாதியப் பெண்ணாக உள்நுழைகிறார் மஞ்சு(பூனம் பஜ்வா). இவர் ஒரு மலையாளப் பெண்ணாக வருகிறார். அனைவரும் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். அந்த அரண்மனையில் அமானுஷ்யமாக நடப்பதை மஞ்சு,அனிதா மற்றும் முரளி அறிகிறார்கள். இதற்கிடையில் அனிதாவின் அண்ணனான ரவி(சுந்தர் சி.) அரண்மனைக்கு வருகிறார். மஞ்சு ரவியை பார்த்ததும் காதல் கொள்கிறார். இப்படியே எல்லா விடயத்தையும் மஞ்சுவிடமிருந்து அறிகிறார் ரவி. இதனால் அரண்மனை முழுவதும் CCTV கேமரா பூட்டுகிறார். ஒரு நாள் இரவு அசோக்ராமின் மகன் தொலைந்து விடுகிறான். இதனால் அனைவரும் அரண்மனையில் தேடுகிறார்கள். அதனிடையில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அசோக்ராமை யாரோ இழுத்து போவதாக பார்க்கிறார் ரவி. அதைதொடர்ந்து வருகையில் மின்சாரம் வந்து விடுகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து அவரால் செல்ல முடியவில்லை. அதனால் அந்த வீடியோவை பார்க்க செல்கிறார்கள் ரவி,முரளி மற்றும் மஞ்சு. ஆனால் அந்த வீடியோ மட்டும் கலங்கி விடுகிறது. அதை உன்னிப்பாக கவனிக்கும் முரளி அசோக்ராமை இழுத்து செல்லும் பேய் தனது தங்கையான மாயா(ஹன்சிகா மோட்வானி) என்று சொல்கிறார். அந்தப் பேய் யார்? அது யாருடைய உடலில் புகுகிறது? ஏன் அசோக்ராமையும் வைத்தியலிங்கத்தையும் அது பழி வாங்குகிறது? அப்பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை திகில்,நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
நடிகர்கள்
- சுந்தர் சி. - ரவி
- சித்தார்த் - முரளி
- ஹன்சிகா மோட்வானி - மாயா
- திரிசா - அனிதா
- பூனம் பஜ்வா - மஞ்சு
- சூரி - தேவதாசு , சந்துபொந்து நாடிமுத்து
- கோவை சரளா - கோமளம்
- மனோபாலா - வீர சேகரன்
- வினோதினி வைத்தியநாதன் - சந்தியா
- ராதாரவி - வைத்தியலிங்கம்
- வைபவ் ரெட்டி - அருண்
- ராஜ் கபூர் - துரைராசு
- ஆடுகளம் நரேன் - நாகலிங்கம்
- சுப்பு பஞ்சு - அசோக் ராம்
தயாரிப்பு
ஒலிப்பதிவு
அரண்மனை 2 | ||||
---|---|---|---|---|
இசை
| ||||
வெளியீடு | 27 திசம்பர் 2015 | |||
ஒலிப்பதிவு | 2015 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | திங் மியூசிக் இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | கிப்கொப் தமிழா | |||
கிப்கொப் தமிழா காலவரிசை | ||||
|
படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் கிப்கொப் தமிழா உருவாக்கியிருந்தார். ஆறு பாடல்கள் கொண்ட இத்திரைப்படத்தின் பாடல்களை திங் மியூசிக் இந்தியா நிறுவனம் வாங்கியது. இப்படத்தின் பாடல்கள் 2015 திசம்பர் 27 அன்று வெளியானது [2] கிப்கொப் தமிழாவின் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான தனி ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணாலா கண்ணாலா பாடலைப் பாடிய கௌசிக் கிரிஷ் இப்படத்திலும் ஒரு பாடலைப் பாடுவதாக 2015 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.[3] ஆனால், வெளியான பாடல்களில் இவரது பெயர் இல்லை.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "பார்ட்டி வித் த பேய்" | கிப்கொப் தமிழா | கிப்கொப் தமிழா, கரீசுமா ரவிச்சந்திரன் | 3:35 | ||||||
2. | "மாயா மாயா" | விவேக் | கைலாஷ் கேர், பத்மலதா | 4:20 | ||||||
3. | "போராடா போராடா" | கிப்கொப் தமிழா | கிப்கொப் தமிழா | 3:38 | ||||||
4. | "குச்சி மிட்டாய்" | கிப்கொப் தமிழா | ஆண்டனி தாசன் | 4:12 | ||||||
5. | "அம்மா (அம்மன் பாடல்)" | பிறைசூடன் | மாலதி லெட்சுமணன், கிப்கொப் தமிழா, ஆண்டனி தாசன் | 4:40 | ||||||
6. | "அரண்மனை 2 (தீம் இசை)" | கிப்கொப் தமிழா | 2:31 | |||||||
மொத்த நீளம்: |
22:56 |
வெளியீடு
இப்படத்தின் அறிமுகப் பாடலான பார்ட்டி வித் த பேய் எனும் பாடல் 2015 நவம்பர் 10 அன்று வெளியானது. இத்திரைப்படம் தொடக்கத்தில் 2016 பொங்கல் திருநாளன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் 2016 சனவரி 29 அன்று வெளியிடப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Aranmanai 2 Movie Database". http://www.tamilcinemainfo.com/movies/15264. பார்த்த நாள்: 11 November 2015.
- ↑ 2.0 2.1 "Aranmanai 2 Songs Review". Behindwoods. http://www.behindwoods.com/tamil-movies/aranmanai-2/aranmanai-2-songs-review.html. பார்த்த நாள்: 30 December 2015.
- ↑ Kaushik L M. "Kaushik Krish of Thani Oruvan fame talks about his experience singing Kannala Kannala". Behindwoods. http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/kaushik-krish-of-thani-oruvan-fame-talks-about-his-experience-singing-kannala-kannala.html. பார்த்த நாள்: 17 September 2015.