அஞ்சலி (நடிகை)

அஞ்சலி (Anjali) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் 1986 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதியன்று பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார். பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்குச் சென்றார். அங்கு இவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார். தனது கல்வியை முடித்த பின்னர், அவர் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. அஞ்சலி தனது பெற்றோருக்கு ஒரு நடிகராவதற்கான அபிலாஷைகள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் "அவர்களின் கனவுகளை அவர்கள் உணர்ந்தார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

அஞ்சலி
Anjali at 60th South Filmfare Awards 2013.jpg
பிறப்பு16 சூன் 1986 (1986-06-16) (அகவை 38)
கோணசீமா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை, முன்னாளர்.
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்றுவரை

விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார்.[1] மேலும் நடிப்புத்திறன், தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.[2][3][4]

இவரது தெலுங்கு மறுநுழைவு (எங்கேயும் எப்போதும்-ன் தெலுங்கு டப்பிங்) மூலம் நிகழ்ந்தது. இது இவரை டோலிவுட்டில் நிறுவியது. ஜர்னியைத் தொடர்ந்து, சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு, பலூபு, மசாலா, கீதாஞ்சலி மற்றும் சர்வாதிகாரி போன்ற வெற்றிகரமான படங்களில் தோன்றினார். இது தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ காரணமானது. சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு மற்றும் கீதாஞ்சலி படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இரண்டு நந்தி விருதுகளையும் பெற்றார். மே 2016 இல், தமிழ் திரைப்படமான இறைவியில் நடித்ததற்காக அவர் பெரும் கைதட்டல்களைப் பெற்றார். இது தமிழ் பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 2017 இல், இயக்குனர் ராமின் தரமணியில் இவர் ஒரு விரிவான கனமான வேடத்தில் தோன்றினார். இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. [5]

விருதுகள்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
விஜய் விருதுகள்
மற்ற விருதுகள்

நடித்த திரைப்படங்கள்

தமிழ்

  1. கற்றது தமிழ்
  2. ஆயுதம் செய்வோம்
  3. அங்காடித்தெரு
  4. எங்கேயும் எப்போதும்
  5. மங்காத்தா
  6. ரெட்டைச்சுழி
  7. தூங்காநகரம்
  8. மகாராஜா
  9. கருங்காலி
  10. தம்பி வெட்டோத்தி சுந்தரம்
  11. கலகலப்பு
  12. சேட்டை
  13. வத்திக்குச்சி
  14. சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்) அப்பாடக்கர்
  15. இறைவி
  16. தரமணி
  17. மாப்ளசிங்கம்
  18. பலூன்

மேற்கோள்கள்

  1. "Anjali eyeing mass films?". Sify.com இம் மூலத்தில் இருந்து 2011-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110125071057/http://www.sify.com/movies/anjali-eyeing-mass-films-news-tamil-lbyjrFcjfgb.html. பார்த்த நாள்: 2011-09-21. 
  2. "Anjali wants to do commercial cinema – Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2011-01-17 இம் மூலத்தில் இருந்து 2011-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110916173338/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-17/news-interviews/28370956_1_thoonga-nagaram-anjali-madurai. பார்த்த நாள்: 2011-09-21.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110916173338/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-17/news-interviews/28370956_1_thoonga-nagaram-anjali-madurai. 
  3. "I want people to say there's no one like me". Rediff.com. 2011-09-15. http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-anjali/20110915.htm. பார்த்த நாள்: 2011-09-21. 
  4. "Image makeover for Anjali – Times of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2012-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120927051145/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-20/news-interviews/28281372_1_image-makeover-anjali-film. பார்த்த நாள்: 2011-09-21.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120927051145/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-20/news-interviews/28281372_1_image-makeover-anjali-film. 
  5. "Reliance Mobile Vijay Awards – The Awards Ceremony". Star Vijay இம் மூலத்தில் இருந்து 2009-04-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090425145911/http://www.starboxoffice.com/kollywood/vijayawards/about.html. பார்த்த நாள்: 2009-03-27. 
  6. விகடன் விருதுகள் 2011, பார்த்த நாள் 30 மார்ச்சு, 2012

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஞ்சலி_(நடிகை)&oldid=22272" இருந்து மீள்விக்கப்பட்டது