வ. ஐ. ச. ஜெயபாலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வ. ஐ. ச. ஜெயபாலன்
Jayabalan-Norway.jpg
பிறப்பு 13-12-1944
(அகவை 78)
நெடுந்தீவு
பணி நடிப்பு
தேசியம் இலங்கைத் தமிழர்,
அறியப்படுவது கவிஞ்ஞர்
நடிகர்
கல்வி யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்


வ. ஐ. ச. ஜெயபாலன் (பிறப்பு: 13 திசம்பர் 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார்.

ஜெயபாலன் இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டதோடு பல அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். தற்பொழுது நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் வசிக்கிறார்.

12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

பாலு மகேந்திராவின் நட்பின் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் நடித்தார்.

கைது

கவிஞர் செயபாலன் 2013 நவம்பர் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழாமை இலங்கை மாங்குளத்தில் கைதுசெய்யப்பட்டார். சுற்றுலா விசா பெற்று இலங்கைக்கு வந்த அவர், யாழ்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டார். இனமோதலை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அக்கருத்தரங்கில் அவர் கூறினார்கலந்துகொண்டதே கைதுக்குக் காரணம் என்று இலங்கை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் அசித்ரோகனா தெரிவித்தார்.

இவரது சில கவிதை நூல்கள்

  • சூரியனோடு பேசுதல் (1986)
  • நமக்கென்றொரு புல்வெளி (1987)
  • ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
  • ஒரு அகதியின் பாடல் (1991)
  • வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2011 ஆடுகளம் (திரைப்படம்) பேட்டைக்காரன் தமிழ் தேசிய விருது
பரிந்துரை, பிலிம் பேர் விருது – தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
2011 வேலூர் மாவட்டம் தமிழ்
2013 பாண்டியநாடு தமிழ்
2013 வன யுத்தம் தமிழ்
2013 வன யுத்தம் கன்னடம்
2014 ஜில்லா பெரியவர் தமிழ்
2014 நான் சிகப்பு மனிதன் தமிழ்
2014 மெட்ராஸ் தமிழ்
2015 டூரிங் டாக்கீஸ் தமிழ்
2015 இன்று நேற்று நாளை Marthandam தமிழ்
2015 49-O தமிழ்
2016 பேய்கள் ஜாக்கிரதை தமிழ்
2016 அரண்மனை 2 (திரைப்படம்) நம்பூதிரி தமிழ்
2016 திருநாள் (திரைப்படம்) துரை தமிழ்
2017 நல்ல தேசம் தமிழ்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=வ._ஐ._ச._ஜெயபாலன்&oldid=2797" இருந்து மீள்விக்கப்பட்டது