வீரா (திரைப்படம்)
வீரா | |
---|---|
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | மீனா பஞ்சு அருணாச்சலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் மீனா ரோஜா விவேக் ஒய். ஜி. மகேந்திரன் வடிவுக்கரசி ஜனகராஜ் சார்லி செந்தில் வினு சக்ரவர்த்தி பிரபாகர் சரண்ராஜ் அஜய் ரத்னம் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரா (Veera) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ரசினிகாந்த், மீனா, ரோஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் ராகவேந்திர ராவ் இயக்கிய அல்லரி முகுடு (1992) திரைப்படத்தின் மறுவுருவாக்கமாகும்.
கதைச்சுருக்கம்
நகரத்தில் நடக்கும் பாடல் போட்டியில் பங்கு பெற்று அதில் தனது பாடல் திறமையின் மூலம் வெற்றி பெற தனது கிராமத்திலிருந்து முத்துவீரப்பன் (ரஜினிகாந்த்) வருகிறார். அங்கு அவர் ரவிகாந்த்தை (செந்தில்) சந்திக்கிறார். ரவிகாந்த் இசை அமைக்கும் திறமை பெற்றவர் ஆவார். இருவரும் இணைந்து பாடல் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்கின்றனர். முத்து, ரவிகாந்த்திடம் தனது காதலியான தேவயானியை (மீனா) எவ்வாறு சந்தித்தார் எவ்வாறு காதல் மலர்ந்தது என்பதை விளக்குகிறார். தேவயானியை கவர்வதற்காகவே தான் பாடல் கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார். மேலும் இந்தப் பாடல் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் பரிசு தொகையைக் கொண்டு தனது கிராம தலைவரிடம் தனது அம்மா வாங்கிய கடனை அடைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறுகிறார். இருவரும் இணைந்து பாடல் போட்டியில் கலந்து முதல் பரிசையும் பெறுகின்றனர். மிகுந்த மகிழ்ச்சியோடு தனது கிராமத்திற்கு வரும் முத்து, வெள்ளத்தின் காரணமாக தனது காதலி தேவயானியின் வீடு முற்றிலுமாக அழிந்து விட்டதை அறிகிறார். ஊர்மக்கள் தேவயானியும் அவளது தகப்பனாரையும் மீட்க முடியவில்லை என்று கூறுகின்றனர். தனது காதலி தேவயானி இறந்துவிட்டாள் என்று நினைத்து மிகுந்த துக்கத்துடன் இருந்தாலும் பரிசுத் தொகையை ஊர்த்தலைவரிடம் கொடுத்து தனது தாயாரின் கடனை அடைகிறார். பின்னர் தனது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க ஏதாவது வேலை பார்த்து சம்பாதிக்க எண்ணி மறுபடியும் தனது தாயாருடன் நகரத்திற்கு வருகிறார். நகருக்கு வந்த பின்புதான் தெரிகிறது தான் பாடிய பாடல் மிகவும் பிரபலமாகி உள்ளது என்றும் அதன்மூலம் முத்துவும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். பாடல் போட்டியை நடத்திய நகர பிரமுகர்(ஜனகராஜ்) முத்துவை தன்னிடம் வேலை செய்ய வேண்டும் என்று அழைக்கிறார்.ஆனால் முத்துவிற்கோ விருப்பமில்லை . பின்னர் தனது தாயாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அவரிடம் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். அங்கே முதலாளியின் மகள் ரூபா (ரோஜா செல்வமணி) முத்துவின் மேல் காதல் கொன்டு திருமணம் செய்ய விரும்புகிறார். இன்னமும் தனது காதலியான தேவயானியை மறக்க முடியாத முத்து ரூபாவின் காதலை நிராகரிக்கிறார். இறந்துபோன தேவயானி மறுபடியும் வரமாட்டார் என அவரின் தாயார் எடுத்துரைத்து முத்துவை ரூபாவுடன் திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்திற்குப் பின்பு தனது தந்தைக்கு ஏற்பட்ட இதய அடைப்பு நோய் சிகிச்சைக்காக ரூபா அமெரிக்கா செல்கிறார். இதனிடையே வெள்ளத்தின் போது மீனவர்களால் காப்பாற்றப்பட்ட தேவயானி அவர்களுடனே தங்கி அவர்களுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் அவருக்கு மறதி நோய் உள்ளதால் முத்து மற்றும் அவரது காதலை மறந்துவிட்டார். ஆனால் வானொலியில் ஒலிபரப்பப் படும் முத்துவின் பிரபல பாடலை கேட்கும் அவர் பழைய நினைவுகளை திரும்ப பெறுகிறார். முத்துவை சந்திக்க நகரத்திற்கு பேருந்தில் வரும் தேவயானி அவரது ஒலிப்பதிவு கூடத்தில் சந்திக்கிறார். இறந்ததாக கருதப்பட்ட தேவயானி உயிரோடு மீண்டும் பார்த்து மகிழ்ச்சியடைந்தாலும் ரூபா உடனான தனது திருமணத்தை மறைத்துவிடுகிறான். முத்துவை உடனடியாக திருமணம் செய்ய விரும்பும் தேவயானியின் விருப்பத்திற்கிணங்க கோவிலில் வைத்து திருமணம் செய்கிறார். ரவிகாந்தின் உதவியுடன் தேவயானியின் கணவனாக முத்து என்ற நபராகவும் ரூபாவின் கணவனாக வீரா என்று நபராகவும் நடிக்க ஆரம்பிக்கிறான் முத்துவும் வீராவும் வேறு வேறு நபர்கள் என்பதை நிரூபிப்பதற்காக தனது புகைப்படத்தை மாற்றி இரு வேறு நபர்கள் போல சித்தரித்து தனது மனைவிகளை ஏமாற்றி விடுகிறார். அவர்களும் முத்துவும் வீராவும் இரு வேறு நபர்கள் என்று நம்புகிறார்கள் . இதனிடையே திருடனொருவனை காவலர்களிடம் ஒப்படைத்து அவன் பகையை சம்பாதித்துக் கொள்கிறாரன் முத்து. அந்த திருடனை முத்துவின் ரகசியத்தை தெரிந்து கொண்டு முத்துவின் இரு மனைவிகளையும் கடத்தி வைத்து முத்துவை பழிவாங்க எண்ணுகிறான். தனது மனைவிகளை காப்பாற்ற செல்லும்போது இருவரும் ஒருவரே என அனைவரும் அறிந்து கொள்கின்றனர் முறைப்படி திருமணம் நடந்ததால் தனக்குத்தான் சொந்தம் என ரூபாவும் முதன்முதலாக காதலித்ததால் தனக்குத்தான் சொந்தம் என தேவயானியும் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றன இருவரையும் சமாதானப்படுத்த எண்ணிய முத்து தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததை எண்ணி வருத்தத்துடன் தனது கிராமத்திற்கு செல்கிறான். தனது வீட்டிற்குள் நுழையும் முத்துவை அவரது இரு மனைவிகளும் வரவேற்பதோடு இத்திரைப்படம் முடிகிறது.
நடிகர்கள்
- ரசினிகாந்த்
- மீனா
- ரோஜா
- விவேக்
- ஒய். ஜி. மகேந்திரன்
- வடிவுக்கரசி
- ஜனகராஜ்
- சார்லி
- செந்தில்
- வினு சக்ரவர்த்தி
- பிரபாகர்
- சரண்ராஜ்
- அஜய் ரத்னம்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
- 1994 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மீனா நடித்த திரைப்படங்கள்
- ரோஜா நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்