வீரண்ணா (திரைப்படம்)
வீரண்ணா | |
---|---|
இயக்கம் | பி. கலாநிதி |
தயாரிப்பு | ஜி. என். தாஸ் எம். நேரு ஜி. ராமதாஸ் |
கதை | பி. கலைமணி (உரையாடல்) |
திரைக்கதை | பி. கலாநிதி |
இசை | சௌந்தர்யன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | பி. கே. மோகன் |
கலையகம் | ஜி.என்.டி. விசன் இண்டர்நேசனல் |
வெளியீடு | திசம்பர் 18, 2005 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரண்ணா (Veeranna) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பி. கலாநிதி இயக்கிய இப்படத்தில் நெப்போலியன், அனாமிகா, பிரீத்தி வர்மா, ஷீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. கலைமணி எழுதிய இந்த படத்திற்கு, சௌந்தரியன் இசை அமைத்தார். படமானது 2005 திசம்பர் 18 அன்று வெளியானது.[1][2][3]
கதை
மரியப்பன் ( நெப்போலியன் ) ராஜேஸ்வரியின் ( ஷீலா ) விசுவாசமிக்க ஊழியர். அதே சமயம் ராஜேஸ்வரி கிராம மக்களை பலவகைகளில் கொடுமைக்கு ஆளாக்குகிறார். மரியப்பனின் மகன் வீரண்ணா (நெப்போலியன்), ஒரு இராணுவ அதிகாரி, அவர் தனது கிராமத்திற்கு திரும்பி, அமைதியாக வாழ விரும்புகிறான். அவனது உறவுப் பெண்ணான வெண்ணிலா அவனை நேசிக்கிறாள். ஒரு நாள், குழந்தைகள் ஆற்றின் தண்ணீரைக் குடிக்கும்போது, தொழிற்சாலை கழிவினால் அவர்கள் நோய்வாய்ப்படுகின்றனர். பொறுப்புள்ள குடிமகனாக, வீரண்ணா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி மீது புகார் அளிக்கிறார். இது தவிர, நிர்வாணமாக இருந்த ராஜேஸ்வரியின் மகள் ஐஸ்வர்யாவை (பிரீத்தி வர்மா) நீரில் மூழ்குவதிலிருந்து வீரண்ணா காப்பாற்றுகிறான். ராஜேஸ்வரி அவனை கிராமத்தை விட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறார். ஆனால் வீரண்ணா அதற்கு மறுத்துவிடுகிறான். மேலும் அவன் ஐஸ்வர்யாவை மணக்கிறான். பின்னர் என்ன ஆகிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
நடிகர்கள்
- நெப்போலியன் மாரியப்பன் மற்றும் வீரண்ணா
- அனாமிகா வெண்ணிலாவாக
- பிரீத்தி வர்மா ஐஸ்வர்யாவாக
- ஷீலா (நடிகை) இராஜேஸ்வரியாக
- வடிவேலு (நடிகர்) பழனிசாமியாக
- மணிவண்ணன் அழகர்சாமியாக
- ஆர். சுந்தர்ராஜன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி பஞ்சுவாக
- பாண்டு
- பாலாஜி மந்திரமூர்த்தியாக
- வடிவுக்கரசி ஜானகியாக
- கிரேன் மனோகர்
- சிசர் மனோகர்
- வாசு (நகைச்சுவை நடிகர்)
- துரைராஜ்
- சிங்கமுத்து
- வி. கே. டி. பாலன்
- சார்லஸ்
- ஏ. அரிச்சந்திரன்
- அஞ்சலிதேவி
- பூர்வஜா
- பிரவீணா
- ஜான் பாபு விருந்தினர் தோற்றத்தில்
இசை
இத் திரைப்படத்திற்கு பின்ண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் சவுந்தரியன் அமைத்தார். 2005 இல் வெளியான இசைப்பதிவில், முத்துலிங்கம், விவேகா எழுதிய ஐந்து பாடல்கள் உள்ளன.[4][5]
பாடல்கள் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "ஜெல் ஜெல் கொலுசுபோட்டு" I | புஷ்பவனம் குப்புசாமி, ஸ்ரீவர்த்தினி | 4:39 |
2 | "ஜெல் ஜெல் கொலுசுபோட்டு" II | புஷ்பவனம் குப்புசாமி, மாலதி | 4:39 |
3 | "மனிதனே கலங்கத்தே" | உண்ணிமேனன் | 3:18 |
4 | "தாலி கழுத்திலே என்றானது" | கார்த்திக், அனுராதா ஸ்ரீராம் | 4:41 |
5 | "வீரண்ணா" | மாணிக்க விநாயகம், நெப்போலியன் | 5:12 |
குறிப்புகள்
- ↑ "Ajith and Napoleon follow Kamal, Vijay and Sarathkumar, into the singing...". behindwoods.com. 2005-11-02. http://www.behindwoods.com/features/News/News36/2-11-05/tamil-movies-news-ajith.html.
- ↑ "Vadivelu treads a safe path". behindwoods.com. 2005-07-26. http://www.behindwoods.com/features/News/News24/26-7-05/tamil-movies-news-vadivelu.html.
- ↑ "Rains ruin release schedules!". sify.com. 2005-11-16 இம் மூலத்தில் இருந்து 2014-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140409072746/http://www.sify.com/movies/boxoffice.php?id=14012485&cid=2363.
- ↑ "Veeranna Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003368.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160409143457/http://mio.to/album/Veeranna+(2005).