மஞ்சுளா விஜயகுமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மஞ்சுளா விஜயகுமார்
பிறப்புமஞ்சுளாதேவி
(1953-09-09)9 செப்டம்பர் 1953
தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்பு23 சூலை 2013(2013-07-23) (அகவை 59)
மற்ற பெயர்கள்மஞ்சுளா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1969-2013
பெற்றோர்தந்தை : பனீ ராவ்
தாயார் : கௌசல்யா
வாழ்க்கைத்
துணை
விஜயகுமார்
பிள்ளைகள்வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி

மஞ்சுளா விஜயகுமார் (9 செப்டம்பர் 1953 - 23 சூலை 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.[1]

வாழ்க்கை

  • இவர் மஞ்சுளாதேவி என்ற இயற்பெயருடன் பிறந்த "மஞ்சுளா" என்று திரையுலகிற்காக தன் பெயரை சுருக்கமாக மாற்றி கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் பனீ ராவ்–கௌசல்யா தம்பதியருக்கு ஒரு வைணவ வைதீக குடும்பத்தில் இரண்டாவது மகளாக பிறந்தார்.
  • மேலும் மஞ்சுளாவுடன் மூத்த சகோதரியான சியமளா மற்றும் நாகேந்திரகுமார் என்கிற பாபு, சிட்டி, ரவீந்திரகுமார் என மூன்று இளைய சகோதரர்கள் உள்ளனர்.
  • பின்பு மஞ்சுளாவின் தந்தையார் பனீ ராவ் அவர்கள் அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.
  • அவர் இரயில்வே துறையில் மேல் அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்த போது தான் அவர்கள் குடும்பம் பணியிடை மாற்றம் காரணமாக தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.
  • மேலும் அங்கு தான் மஞ்சுளா அவர்கள் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆங்கில வழி மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்று வரும் போது தான் சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றாலை பெற்றார். அப்போது பத்தாம் வகுப்பில் அரசு தேர்வில் மாகாணத்திலேயே முதல் மதிப்பேன் பெற்றார்.
  • அதன் பிறகு மேற்ப்படிப்பை தொடரும் நோக்கில் மஞ்சுளா பெற்றோர்கள் ஈடுபட்ட போது தான் அவரது பள்ளி காலத்தில் ஒரு முறை மாணவர் திறன் போட்டியில் மஞ்சுளா ஆங்கில புலமை பேச்சாற்றாலை ஒரு முறை திரைப்பட கதாசிரியர் சித்ராலயா கோபு அவர்கள் பார்த்துவிட்டு அப்போது அவர் கதை வசனம் எழுதிய சாந்தி நிலையம் திரைப்படத்தில் அவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் அந்த திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.

நடிப்பு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மஞ்சுளா_விஜயகுமார்&oldid=23147" இருந்து மீள்விக்கப்பட்டது